Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 58 - சீலங் கனமுற்ற
Kandhar andhAdhi - seelang ganamutRa
Kandhar andhAdhi - seelang ganamutRa    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.218  pg 4.219 
 WIKI_urai Song number: 58 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 58 ... சீலங் கனமுற்ற   (பிறவியை வெறுத்தல்)

......... பாடல் .........

      சீலங் கனமுற்ற பங்கா கரசல தீரக்கநி
      சீலங் கனமுற்ற முத்தூர்செந் தூர சிகண்டியஞ்சு
      சீலங் கனமுற்ற வேதனை மேவித் தியங்கினஞ்சீ
      சீலங் கனமுற்ற விப்பிறப் பூடினிச் சேர்ப்பதன்றே ...... 58

......... சொற்பிரிவு .........

சீலம் கனம் முற்று அபங்கா கரசலதீ ரக்க

(நி) சீ லங்கன மற்றம் முத்து ஊர் செந்தூர சிகண்டி

(அம்சு) சீ லங்கனம் உற்ற வேதனை மேவி தியங்கினம்

(சீ) சீ லங்கனம் முற்ற இப்பிறப்பூடு இனி சேர்ப்பது அன்றே.

......... பதவுரை .........

சீலம் ... கொடைக் குணத்திலும்,

கனம் ... பெருமையிலும்,

முற்று ... மேம்பட்ட,

அபங்கா ... குறை இல்லாதவனே,

சலதி ... சமுத்திரத்தில்,

கர ... கோபமுடைய,

ரக்க நிசீ ... அசுரராகிய இருள் கூட்டத்தை,

லங்கன ... அழித்தவனே,

முற்றம் ... முற்றமான கடற்கரையின்கண்,

முத்து ஊர் ... முத்துக்கள் நிறைந்திருக்கின்ற,

செந்தூர ... செந்திற் பதியானே,

சிகண்டி ... மயில் வாகனமுடைய,

அம் சுசீ ... அழகிய பரிசுத்த மூர்த்தியே

லங்கனம் ... பசியாகிய உதரத்தீயினால்,

உற்ற ... ஏற்படும்,

வேதனை மேவி ... துன்பத்தை அடைந்து,

தியங்கினம் ... மயக்கமுற்றிருக்கிறேன்,

சீ சீ ... இது மிகவும் இகழ்ச்சியான,

முற்ற லங்கனம் ... முழுவதும் இழிவான நிலை (ஆதலால்),

இப்பிறப்பூடு ... இப்படிப்பட்ட ஜனனத்திலே,

இனி ... இனி மேலும்,

சேர்ப்பது ... என்னைக் கொண்டு போய்த் தள்ளுவது,

அன்றே ... நன்று ஆகாது.

......... பொழிப்புரை .........

குறைவில்லாதவனே, கடலின்கண் அசுர கூட்டத்தை மாய்த்தவனே, செந்திலாண்டவனே, மயில் வாகனா, தூய மூர்த்தியே, வயிற்றுப் பிழைப்பிற்காக அற்றைக்கிரை தேடும் இகழ்ச்சியான இந்த ஜனனத்தை நான் மீண்டும் அடையாதபடி என்னைக் காப்பாற்ற வேண்டும்.

கந்தர் அந்தாதி - 58 - சீலங் கனமுற்ற
Kandhar andhAdhi - seelang ganamutRa
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - seelang ganamutRa

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]