Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 40 - சேமர விக்கம்
Kandhar andhAdhi - sEmara vikkam
Kandhar andhAdhi - sEmara vikkam    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.196  pg 4.197 
 WIKI_urai Song number: 40 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 40 ... சேமர விக்கம்   (பிரிவாற்றாமை)

......... பாடல் .........

      சேமர விக்கம் படையாக வீசுப தேசமுன்னூற்
      சேமர விக்கம் பலந்தரு வாய்செரு வாயவெஞ்சூர்ச்
      சேமர விக்கம் திரித்தாய் வருத்திய வன்றிறென்றல்
      சேமர விக்கம் புயவாளி விண்டிரை தெண்டிரையே ...... 40

......... சொற்பிரிவு .........

சேம ரவிக்கு அம் படையாக வீசு உபதேசம் முன்னூல்

சேமர் அவிக்கு அம் பலம் தருவாய் செருவாய வெம் சூர்

சே மரவிக்கம் திரித்தாய், வருத்திய அன்றில் தென்றல்

சே மர இக்கு அம்புயவாளி விண்டு இரை தெண்டிரையே.

......... பதவுரை .........

சேம ... சிவந்த,

ரவிக்கு ... சூரியனுக்கு,

அம் ... அர்க்கிய ஜலத்தை,

படையாக ... * மந்தேகர்களின் தடையை விலக்கும் ஆயுதமாக,

வீசு ... இறைக்கின்றவர்களும்,

உபதேச ... தமக்கு செய்யப்பட்ட காயத்திரி மந்திர உபதேசத்தையும்,

முன்னூல் ... முப்புரி நூலின் தூய்மையையும்,

சேமர் ... காப்பாற்றுகின்ற மறையோர்களின்,

அவிக்கு ... யாகத்தில் கொடுக்கும் அவிர் பாகத்திற்கு,

அம் ... அழகிய,

பலம் தருவாய் ... நல்ல பலனை கொடுப்பவனே,

செருவாய ... போர் செய்யும்,

செம்சூர் ... கொடிய சூரபத்மனின்,

சே ... வைரம் பொருந்திய,

மர ... மாமிசத்தினால் ஏற்பட்ட,

விக்கம் ... (விக்னம்) இடையூறை,

திரித்தாய் ... அழித்தவனே,

வருந்திய ... என்னைத் துன்புறுத்துகின்றன,

அன்றில் ... காமச் சின்னமாகிய அன்றில் பட்சியும்,

தென்றல் ... மன்மதனின் தேராகிய தென்றலும்,

சே ... மணியோசை கேட்கச்செய்வதால் எருதுகளும்,

மறை இக்கு ... கரும்பு வில்லும்,

அம்புய வாளி ... தாமரைப்பூ பாணமும்

விண்டு இறை தெண்டிரையே ... ஆர்ப்பாட்டத்துடன் முழங்குகின்ற தெள்ளிய அலையை உடைய சமுத்திரமுமே.

......... பொழிப்புரை .........

சூரியன் உதிப்பதற்கு தடையாக நிற்கும் அசுரர்களை விலக்கும் பொருட்டு அர்க்கிய ஜலத்தை தெளித்து தமது மந்திர உபதேசத்தையும் முப்புரி நூலின் தூய்மையையும் காப்பாற்றும் மறையோர்களின் யாகத்தில் கொடுக்கப்படும் அவிர் பாகத்திற்கு நல்ல பலனைத் தருபவனே, கொடிய சூரபத்மனை வென்றவனே, உன்னைப் பிரிந்திருப்பதால் அன்றில் பட்சி, தென்றல் காற்று, காளைகளின் மணியோசை, மன்மதனின் கரும்பு வில், அவனுடைய தாமரைப் பாணம், கடல் ஒலி போன்றவைகள் என்னை வருத்துகின்றன.

(* தினம்தோறும் சூரியன் உதயமாகும் போது மந்தேகர் என்கிற அசுரர் கூட்டம் அவனை முன்னேறவிடாமல் தடையாக நின்று போர்புரிவர். அதிகாலையில் பூவுலகத்தில் முனிவர்களும் அந்தணர்களும் காயத்திரி மந்திரங்களை ஜெபித்து ஆகாசத்தில் தெளிக்கின்ற அர்க்கிய ஜலம் வஜ்ராயுதமாக மாறி அந்த அசுரர்களை வீழ்த்தி விடுகின்றன).

கந்தர் அந்தாதி - 40 - சேமர விக்கம்
Kandhar andhAdhi - sEmara vikkam
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sEmara vikkam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]