Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 39 - தீவர கந்தரி
Kandhar andhAdhi - theevara kandhari
Kandhar andhAdhi - theevara kandhari    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.195  pg 4.196 
 WIKI_urai Song number: 39 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 39 ... தீவர கந்தரி   (முருகன் திருவடியே உறவு)

......... பாடல் .........

      தீவர கந்தரி தாம்பகி ராருற வானசெம்பொன்
      தீவர கந்தரி யாநொந்த போதினிற் செச்சையவிந்
      தீவர கந்தரி சிந்துரை பாக சிவகரண
      தீவர கந்த ரிபுதீ ருனதடி சேமநட்பே ...... 39

......... சொற்பிரிவு .........

தீ வரகு அந்து அரி தாம்பகிரார் உறவான செம்பொன்

தீவர் அகம் தரியா நொந்தபோதினில் செச்சைய,

(இந்) தீவர, கந்தரி சிந்துரை பாக, சிவகரண

தீ வர கந்த, ரிபு தீர் உன் அடி சேம நட்பே.

......... பதவுரை .........

அகம் ... வறுமையாகிய பாவத்தை,

தரியா ... ஏற்றுக் கொண்டு,

நொந்தபோதினில் ... மனது உடைந்து வேதனைப் படும்போது,

உறவான செம்பொன் தீவர் ... உறவினர் என்று சொல்லப்படும் பெரிய ஐஸ்வரியவான்கள்,

தீ ... தீந்து போன,

அந்து அரி ... அந்துப்பூச்சியால் அரிக்கப்பட்ட,

வரகு ... கேழ்வரகு தானியத்தைக் கூட,

தாம்பகிரார் ... தானம் கொடுக்க இசைய மாட்டார்கள் (ஆதலால்),

செச்சைய இந்தீவர ... வெட்சி மாலையும் நீலோற்பல மாலைையும் புனைந்தவனே,

கந்தரி ... குகையில் வாழும் வள்ளியம்மையையும்,

சிந்துரை ... யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனையையும்,

பாக ... இருபக்கங்களிலும் வைத்திருப்பவனே,

சிவ கரண ... சிவ தியானம் செய்யும்,

தீ ... புத்தியை,

வர ... வரமாக அளிக்கும்,

கந்த ... கந்தப் பெருமாளே

ரிபு தீர் உனது அடி ... எதிரிகளை அழிக்கும் உனது திருவடிகளே,

சேம நட்பே ... பொக்கிஷமும் உறவுமாகும்.

......... பொழிப்புரை .........

வள்ளி தேவசேனை பாகனே, அடியார்களுக்கு சிவ தியான அறிவை அனுக்கிரகம் செய்பவனே, என்னுடைய உறவினர்கள் பொன் விளையும் தீவில் வசிப்பவர்கள் ஆனாலும் நான் வறுமையால் வேதனைப்படும் பொழுது அந்து அரித்து தீந்து போன வரகையாவது கொடுப்பார்களா? ஆகையால் உன்னுடைய திருவடிகளே எல்லா செல்வமும் உறவும் ஆகும்.

கந்தர் அந்தாதி - 39 - தீவர கந்தரி
Kandhar andhAdhi - theevara kandhari
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - theevara kandhari

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]