Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 38 - சிற்றம் பலத்தை
Kandhar andhAdhi - sitRam balaththai
Kandhar andhAdhi - sitRam balaththai    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next pawiki_1.php?wpp=4.page193 pg 4.193ge" title="select next page">
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.193  pg 4.194  pg 4.195 
 WIKI_urai Song number: 38 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 38 ... சிற்றம் பலத்தை   (ஞான பூஜை)

......... பாடல் .........

      சிற்றம் பலத்தை யரன்புநெய் நூற்றிரி சிந்தையிடுஞ்
      சிற்றம் பலத்தை வரஞான தீபமிட் டார்க் குப்பரி
      சிற்றம் பலத்தை யருளுஞ்செந் தூரர் பகைக்குலமாஞ்
      சிற்றம் பலத்தைப் பதவரந் தோளிலிந் தீவரமே ...... 38

......... சொற்பிரிவு .........

சிற்றம்பலத்து ஐயர் அன்பு நெய் நூல் திரி சிந்தை இடும்

சில் தம்ப லத்தைவர ஞானதீபம் இட்டாருக்கு

(பரி) சில் தம்பலத்தை அருளும் செந்தூரர் பகைக்குலமாம்

சிற்று அம்பல தைப்பது அவர் அம் தோளில் இந்தீவரமே.

......... பதவுரை .........

சிற்றம்பலத்து ... பர ஆகாச வெளியாகிய,

ஐயர் ... சுவாமியும்,

அன்பு ... பக்தி என்னும்,

நெய் ... நெய்யை வார்த்து,

நூல் ... ஆகம சாஸ்திரம் என்னும் நூலை,

திரி ... திரியாக்கி,

சிந்தை ... இதயமாகிய,

இடும் ... தீபம் ஏற்றுகின்ற,

சில் ... தகழியில் இட்டு,

தம்ப ... ஜீவனுக்கு பற்று கோடாகிய,

லத்தை வர ... கிருபை உண்டாகும் பொருட்டு,

ஞான தீபம் ... மெய்ஞான தீபத்தை,

இட்டார்க்கு ... ஏற்றின அடியார்களுக்கு,

பரிசில் ... பரிசாக,

தம் பலத்தை ... தனது குக சாயுச்யம் என்னும் பலனை,

அருளும் ... கிருபை செய்யும்,

செந்தூரர் ... செந்திலாண்டவனின்,

பகைக்குலமாம் ... எதிரிகளை அழித்த,

சிற்று அம்பு அல ... சிறிய பாணம் அல்ல,

தைப்பது ... என் இதயத்தில் தைத்து வருத்துவது,

அவர் ... அந்தக் கந்தனின்,

அம் தோளில் ... அழகிய புயத்தில் அணிந்த,

இந்தீவரமே ... நீலோற்பலமாகிய பாணம் தான்.

......... பொழிப்புரை .........

இதயத்தை தகழியாக்கி, அன்பாகிய நெய்யை வார்த்து, ஆர்வமாகிய திரியை இட்டு, ஞானவிளக்கு ஏற்றும் அடியார்களுக்கு சித்தாகாசமாகிய குக சாயுச்ய பதவியைக் கொடுக்கும் செந்திலாண்டவனின் சத்ரு சங்காரபாணம் இருக்க அவர் அணிந்த நீலோற்பல மாலையே மன்மதன் பாணத்தில் ஒன்றாக என் நெஞ்சில் தைக்கிறது.

கந்தர் அந்தாதி - 38 - சிற்றம் பலத்தை
Kandhar andhAdhi - sitRam balaththai
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sitRam balaththai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]