Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 37 - சீர்க்கை வன
Kandhar andhAdhi - seerkkai vana
Kandhar andhAdhi - seerkkai vana    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.192  pg 4.193 
 WIKI_urai Song number: 37 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 37 ... சீர்க்கை வன   (பக்தி செலுத்துதல்)

......... பாடல் .........

      சீர்க்கை வனப்பு மலர்வேங்கை யானவன் செஞ்சிலையோர்
      சீர்க்கை வனப்பு னிதத்தவ வேடன் றினைவளைக்குஞ்
      சீர்க்கை வனப்பு னமதுருக் காட்டிய சேய்தமிழ்நூற்
      சீர்க்கை வனப்பு னிமிர்சடை யோன்மகன் சிற்றடிக்கே ...... 37

......... சொற்பிரிவு .........

சீர்க்கை வனப்பு, மலர் வேங்கையானவன், செஞ்சிலையோர்

சீர் கை வன புனித தவ வேடன், தினை வளைக்கும்

சீர்க்கு ஐவன புனமது உருக்காட்டிய சேய், தமிழ் நூல்

சீர்க்கு ஐ, வன புல் நிமிர் சடையோன் மகன், சிற்றடிக்கே.

......... பதவுரை .........

சீர்க்கை ... மனம் திருந்துதல்,

வனப்பு ... அழகாகும்,

மலர் ... புஷ்பங்கள் உள்ள,

வேங்கையானவன் ... வேங்கை மரமாக நின்றவனும்,

செஞ்சிலையோர் ... சிறந்த வில்லை உடைய குறவர் கூட்டத்தினர்,

சீர் ... சந்தேகப்பட்ட தன்மையை,

கை ... கோபித்து,

வன ... அந்தக் காட்டில்,

புனித தவ வேடன் ... தூய சன்னியாசி ரூபம் எடுத்தவனும்,

தினை வளைக்கும் ... தினைப் பயிரைக் காவல் காத்து வந்த,

சீர்க்கு ... சிறந்த வள்ளிக்கு,

ஐ வன புனமது ... மலை அரிசி (தினை அரிசி) விளையும் அந்த வயலில்,

உருக்காட்டிய ... தன்னுடைய உண்மை சொரூபத்தைக் காட்டிய,

சேய் ... குமாரக் கடவுளும்,

தமிழ் நூல் சீர்க்கு ... தமிழ் இலக்கியத்தில் காணப்படும் 30 சீர்க்கும்,

ஐ ... தலைவனாக (ஞானசம்பந்தராக) அவதரித்தவனும்,

வன ... கங்கா ஜலமும்,

புல் ... அறுகம்புல்லும்,

நிமிர் ... விளங்கும் நீண்ட,

சடையோன் மகன் ... ஜடாபாரத்தை உடைய சிவகுமாரனாகிய முருகனின்,

சிற்றடிக்கே ... சிறிய திருவடிகளுக்கு

(சீர்க்கை வனப்பு)

......... பொழிப்புரை .........

வள்ளிமலையில் வேங்கை மரமாக மாறினவனும், தவத்துறவி வேடத்தில் வந்தவனும், கடைசியில் வள்ளிக்கு தன் சுய ரூபத்தைக் காட்டினவனும், செந்தமிழ்க் கடவுளும், கங்காதரனாகிய ஈசனின் மகனிடம் பக்தி செலுத்துதல் நமக்கு அழகாகும்.

கந்தர் அந்தாதி - 37 - சீர்க்கை வன
Kandhar andhAdhi - seerkkai vana
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - seerkkai vana

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]