Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 41 - தெண்டன் புர
Kandhar andhAdhi - theNdan pura
Kandhar andhAdhi - theNdan pura    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.197  pg 4.198 
 WIKI_urai Song number: 41 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 41 ... தெண்டன் புர   (எம வேதனையை நீக்க)

......... பாடல் .........

      தெண்டன் புரந்தர வக்குன்றில் வாழ்கந்த சிந்துவிலுத்
      தெண்டன் புரந்தர லோகஞ் செறாதுசெற் றோய்களைவாய்
      தெண்டன் புரந்தர நற்கேள் சிறுவ ரழச்செய்தெம்மைத்
      தெண்டன் புரந்தர வின்படி நூக்கிய தீநரகே ...... 41

......... சொற்பிரிவு .........

தெண்டன் புரந்து அரவக்குன்றில் வாழ்கந்த சிந்துவில்

(உத்) தெண்டன் புரந்தரலோகம் செறாது செற்றோய், களைவாய்

தெண்டன் புரந்தர் அம் நற்கேள் சிறுவர் அழச்செய்து எம்மை

தெள் தன் புரம் தரவின்படி நூக்கிய தீ நரகே.

......... பதவுரை .........

தெண்டன் ... வணங்குகிறேன்,

அரவக் குன்றில் வாழ் கந்த ... நாகாசல வேலவனே,

சிந்து வில் ... சமுத்திரத்தின் கண்,

உத்தெண்டன் ... மகாபலசாலியான சூரபத்மன்,

புரந்தர லோகம் ... இந்திர லோகத்தை,

செறாது ... அழிக்காதபடி,

செற்றோய் ... அவனை வதைத்தவனே,

(புரந்து ... என்னைக் குறைவரக் காப்பாற்றி)

தெண்டன் ... தண்டாயுதத்தை உடைய எமன்,

புரந்தர் ... தொன்று தொட்டு வந்து,

அம் நற் கேள் ... அழகிய நல்ல சுற்றத்தாரும்,

சிறுவர் ... பிள்ளைகளும்,

அழச்செய்து ... என் உடலைச் சுற்றி உட்கார்ந்து கொண்டு அழச்செய்து,

எம்மை ... எம் உயிரைப் பிரித்து,

தெள் ... தெள்ளிய தன்மையை உடைய,

தன் புரம் ... தன் ஊராகிய எமபுரிக்கு கூட்டிச் சென்று,

தரவின் படி ... தனது உத்தரவின்படி,

நூக்கிய ... சென்று நுழைக்கும்,

தீ நரகே ... நரகாக்கினியைக்

(களைவாய் ... நீக்குவாய்)

......... பொழிப்புரை .........

செங்கோட்டு வேலவனே, இந்திர லோகம் அழியாதபடி சூரனைச் ஜெயித்தவனே, உன்னைத் தாழ்ந்து வணங்குகிறேன். என் சுற்றத்தாரும் பிள்ளைகளும் சூழ்ந்து கொண்டு அழும்படி எமன் என் உயிரைப் பிரித்து தன் லோகத்திற்கு கொண்டு போய் நரகாக்கினியில் தள்ளாமல் என்னைக் காத்தருள வேண்டும்.

கந்தர் அந்தாதி - 41 - தெண்டன் புர
Kandhar andhAdhi - theNdan pura
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - theNdan pura

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]