Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 13 - தேங்கா வனமும்
Kandhar andhAdhi - thEngkA vanamum
Kandhar andhAdhi - thEngkA vanamum    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.166 
 WIKI_urai Song number: 13 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 13 ... தேங்கா வனமும்   (இடமணித் தென்றல்)

......... பாடல் .........

      தேங்கா வனமும் மதகரி வேந்துடன் சேர்ந்த விண்ணோர்
      தேங்கா வனமுனை யவ்வேற் பணியெனுஞ் சேயிடமேல்
      தேங்கா வனமுந் தளர்நடை யாயஞ்சல் செண்பகப்பூந்
      தேங்கா வனமுங் கழுநீ ரிலஞ்சியுஞ் செந்திலுமே ...... 13

......... சொற்பிரிவு .........

தேங்கு ஆவன மும்மதகரி வேந்துடன் சேர்ந்த விண்ணோர்

தேம் காவல் நம் முனைய வேல் பணி எனும் சேய் இடம் மேல்

தேங்கா அனமும் தளர் நடையாய் அஞ்சல் செண்பக பூம்

தேங்கா வனமும் கழுநீர் இலஞ்சியும் செந்திலுமே.

......... பதவுரை .........

தேங்கு ... நிறைந்திருக்கும்,

ஆவன ... பசுக் கூட்டங்களை மேய்க்கும் திருமாலையும்,

மும்மதகரி ... மும்மதங்களையும் பொழியும் ஐராவதத்திற்கு தலைவனான,

வேந்துடன் ... இந்திரனையும்,

சேர்ந்த ... அவருடன் சேர்ந்திருக்கும்,

விண்ணோர் ... தேவர்களையும்,

தேம் ... அவர்களுக்கு இருப்பிடமான அமராவதியையும்,

காவல் ... ரட்சிப்பது,

நம் ... நம்முடைய,

முனைய வேல் ... கூரிய வேலாயுதத்தின்,

பணி ... தொழிலாகும்,

எனும் ... என்று சொல்லி (அதைக் கட்டளை இட்ட)

சேய் ... முருகனின்,

இடம் ... வாசஸ்தலம்,

மேல் ... இதோ இருக்கிறது,

தேங்கா ... திகைத்து,

அனமும் ... தன் நடையை தோற்கடிக்கிறது என்று அன்னப் பட்சியும்,

தளர் ... தளர்ந்து போகும்,

நடையாய் ... நடையை உடையவளே,

அஞ்சல் ... பயப்படாதே (அவை யாவன),

செண்பக ... செண்பக மலரால்,

பூம் ... விளங்கும்,

தேம் ... இனிய,

காவனமும் ... பூஞ்சோலையும்,

கழுநீர் இலஞ்சியும் ... செங்கழுநீர் தடாகமும்,

செந்திலும் ... திருச்செந்தூர் தலமுமேயாகும்.

......... பொழிப்புரை .........

அன்னமும் தோற்கும் நடையை உடைய பெண்ணே, அஞ்சாதே, விண்ணோர்களை காத்து வருவாய் என்று வேலாயுதத்திற்கு கட்டளை இட்ட குமரக் கடவுளின் இருப்பிடமாகிய திருச்செந்தூரும், இனிய பூங்காவும், கழுநீர் மடுவும் இதோ வந்து விட்டன.

கந்தர் அந்தாதி - 13 - தேங்கா வனமும்
Kandhar andhAdhi - thEngkA vanamum
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - thEngkA vanamum

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]