Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 12 - சிறைவர வாமை
Kandhar andhAdhi - siRaivara vAmai
Kandhar andhAdhi - siRaivara vAmai    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.164  pg 4.165 
 WIKI_urai Song number: 12 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 12 ... சிறைவர வாமை   (முருகனை தியானிக்காதவர்களின் மனவிருள்)

......... பாடல் .........

      சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து
      சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட
      சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச்
      சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே ...... 12

......... சொற்பிரிவு .........

சிறை வர வாமயில் ஏறி சிகிரி தகர வந்து

சிறை வர ஆமையில் கூப்பிட தானவர்சேனை கொண்ட

சிறைவர ஆம் ஐயில் வாங்கி தன் தேங்கழல் யான்கழல

சிறு ஐவர் அவா மையில் நெஞ்சு உடனே நின்று தேங்குவதே.

......... பதவுரை .........

சிறை ... தோகையும்,

வர ... அடியார்களுக்கு அருளும் வரப்பிரசாதத்தையும் உடைய,

வாமயில் ஏறி ... தாவிச் செல்லும் மயிலில் ஏறி,

சிகரி ... க்ரவுஞ்ச கிரி,

தகர ... தூளாகும்படி

வந்து ... எழுந்தருளி,

சிறை ... கரையால்,

வர ... சூழப்பட்டதும்,

ஆமையில் ... ஆமைகளுக்கு இருப்பிடமானதும் ஆன கடல்,

கூப்பிட ... ஓ என்று ஓலமிட,

தானவர் சேனை ... அரக்கர்களின் சேனையால்,

கொண்ட ... தள்ளப்பட்ட,

சிறைவர ... தேவர்களின் சிறை வாசம் நீங்க,

ஆம் ... தகுந்த,

அயில் ... ஐவேலை,

வாங்கி தன் ... பிரயோகித்த முருகப்பெருமானின்,

தேங்கழல் ... இனிய திருவடிகளை,

யான் கழலா ... நான் அணுகாமல் பிரிந்திருப்பதினால்,

சிறு ... அல்பமாகிய,

ஐவர் ... பஞ்சேந்திரியங்களின்,

அவா ... ஆசையாகிய,

மை யில் ... இருளில்,

நெஞ்சு ... என்னுடைய இருதயம்,

உடனே நின்று ... சேர்ந்து நின்று (இருளொடு),

தேங்குவதே ... திகைக்கின்றது.

......... பொழிப்புரை .........

கிரவுஞ்சம் பொடிபடவும், கடல் அலரவும், தேவர் சிறை மீளவும், வேலெடுத்துத் தாவி மயில் வாகனனாக கந்தக் கடவுளின் பாதத் தாமரையை நான் இடைவிடாது தியானிக்காததினால் என் இருதயத்தில் ஐம்புலன் ஆசை என்னும் இருட்டு அகலாமல் நிறைந்திருக்கிறது.

கந்தர் அந்தாதி - 12 - சிறைவர வாமை
Kandhar andhAdhi - siRaivara vAmai
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - siRaivara vAmai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]