Sri AruNagirinAtharKaumaram dot com - Dedicated Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அந்தாதி

Sri AruNagirinAthar's
Kandhar andhAdhi

Sri Kaumara Chellam
கந்தர் அந்தாதி 14 - செந்தி லகத்தலர்
Kandhar andhAdhi - sendhi lagaththalar
Kandhar andhAdhi - sendhi lagaththalar    தமிழில் பொருள் எழுதியது
    'திருப்புகழ் அடிமை' ஸ்ரீ சு. நடராஜன்,
    சென்னை, தமிழ்நாடு

   Meanings in Tamil by
   'Thiruppugazh adimai' Sri S. Nadarajan,
   Chennai, Tamil Nadu
'Thiruppugazh adimai' Sri S. Nadarajan
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF  search
previous page next page
  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.167 
 WIKI_urai Song number: 14 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
இச் செய்யுளின் ஒலிவடிவம்
audio recording of this poem
Ms Revathi Sankaran

பாடல் 14 ... செந்தி லகத்தலர்   (நலம் புனைந்துரைத்தல்)

......... பாடல் .........

      செந்தி லகத்தலர் வாணுதல் வேடிச் சிமுகபங்க
      செந்தி லகத்தலர் துண்டமென் னாநின்ற சேயசங்க
      செந்தி லகத்தலர் ராசிதந் தானைச் சிறையிட்டவேற்
      செந்தி லகத்தலர் தூற்றிடுங் கேடு திவாகருளே ...... 14

......... சொற்பிரிவு .........

செம்திலகத்து அலர் வாள் நுதல் வேடிச்சி முகம்

(பங்க) செம் திலகத்து அலர் துண்டம் என்னா நின்ற சேய, சங்க

செந்து இலக தலராசி தந்தானை சிறையிட்ட வேல்

செந்தில், அகத்து அலர் தூற்றிடும் கேள், துதி வாகு அருளே.

......... பதவுரை .........

செம்திலகத்து ... சிவந்த குங்கும பொட்டு இட்டு,

அலர் ... விளங்கும்,

வாள் நுதல் ... ஒளி வீசும் நெற்றியை உடைய

வேடிச்சி ... வள்ளி நாயகியின்,

முகம் ... வதனம்,

பங்கசெம் ... தாமரை போன்றது,

திலகத்து அலர் ... எள்ளின் பூ போன்றது,

துண்டம் ... நாசி,

என்னா நின்ற ... என்று அவளின் அழகை நலம் புனைந்து உரைத்த,

சேய ... குமரக் கடவுளே,

சங்க செந்து ... ஜீவராசி கூட்டங்கள்

இலக ... வசிப்பதற்கு,

தலராசி ... அண்ட கோடிகளை,

தந்தானை ... சிருஷ்டித்த பிரமனை,

சிறையிட்ட ... சிறையில் அடைத்த,

வேல் ... வேலாயுதத்தை உடைய,

செந்தில் ... செந்தில் ஆண்டவனே,

அகத்து ... அகங்காரத்தினால்,

அலர் தூற்றும் ... என்னை வசைகள் பேசுவார்கள்,

கேள் ... சுற்றத்தார்கள் (அதனால்),

துதி ... எல்லோராலும் துதிக்கப்படும்,

வாகு ... உன் புயத்தை,

அருள் ... எனக்கு தந்தருள வேண்டும்

......... பொழிப்புரை .........

வள்ளியின் முகத்தை தாமரை என்றும், நாசியை எள்ளின் பூ என்றும் வியந்து பேசும் குமரக்கடவுளே, பிரம்மனை சிறையிட்ட செந்திலாண்டவனே, உறவினர்கள் எல்லோரும் என்னைப் பழித்துப் பேசுகிறார்கள். அது நீங்க உன்னுடைய புயங்களைத் தந்தருள வேண்டும்.

கந்தர் அந்தாதி - 14 - செந்தி லகத்தலர்
Kandhar andhAdhi - sendhi lagaththalar
 அட்டவணை   அகரவரிசை   எண்வரிசை   முழுப்பாடலுக்கு   PDF   ஒலிவடிவம்   தேடல் 
contents alphabetical index numerical index complete song  PDF   MP3  search
previous page next page

Sri Arunagirinathar's Kandhar andhAdhi - sendhi lagaththalar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0508.2021[css]