Sri AruNagirinAthar - Author of the poemsKaumaram dot com - The Website for Lord Muruga and His Devotees

திரு அருணகிரிநாதர் அருளிய
கந்தர் அலங்காரம்
 

Sri AruNagirinAthar's
Kandhar AlangkAram
 

Sri Kaumara Chellam
 திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 39  உதித்து ஆங்கு
Kandhar AlangkAram by Thiru Arunagirinathar  - 39  udhiththu Angku
 
Kandhar AlangkAramDr. Singaravelu Sachithanantham (Malaysia)    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    பேராசிரியர்
    சிங்காரவேலு சச்சிதானந்தம்
    (மலேசியா)

   Meanings in Tamil and English by
   Dr. Singaravelu Sachithanantham
   (Malaysia)
English
in PDF format

 PDF வடிவத்தில் 

with mp3 audio
previous page next page
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

alphabetical
numerical
search

பாடல் 39 ... உதித்து ஆங்கு

உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னி லொன்றா
   விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக
      பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
         மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே.

......... சொற்பிரிவு .........

உதித்து ஆங்கு உழல்வதும் சாவதும் தீர்த்து எனை உன்னில் ஒன்றா
   விதித்து ஆண்டு அருள்தரும் காலம் உண்டோ வெற்பு நட்டு உரக-
      பதித் தாம்பு வாங்கி நின்று அம்பரம் பம்பரம் பட்டு உழல
         மதித்தான் திருமருகா மயில் ஏறிய மாணிக்கமே.

......... பதவுரை .........

பிறந்து, பிறந்த இடங்களில் உழல்வதையும் இறப்பதையும் நீக்கி
அடியேனைத் தேவரீரிடத்தில் இரண்டறக் கலக்குமாறு நியமித்து
ஆட்கொண்டு அருள்புரியும் ஒருகாலமும் உண்டோ? மந்தரமலையை
பாற்கடலில் மத்தாக நட்டு பாம்புகளுக்கு அரசாகிய வாசுகி என்னும்
வடக் கயிற்றால் வளைத்து நின்று பம்பரம்போல் சுழலுமாறு பாற்கடலைக்
கடைந்தவராகிய திருமாலின் திருமருகரே, மயில்வாகனத்தில்
எழுந்தருளிய மாணிக்கமே!

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 4.45 
 WIKI_urai Song number: 39 
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Thiru L. Vasanthakumar M.A.
திரு எல். வசந்த குமார் எம்.ஏ.

Thiru L. Vasanthakumar M.A.
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Song 39 - udhiththu Angku

udhiththu Angku uzhalvadhum sAvadhum theerththu enai unnil ondRA
   vidhiththu ANdu aruLtharum kAlam uNdO veRppu nattu uraga-
      padhith thAmbu vAngki nindRu ambaram pambaram pattu uzhala
         mathiththAn thirumarugA mayil ERiya mANikkamE.

O' Lord, will there be a time when You will kindly grant me the grace of redeeming me from the revolving cycle of birth-death-and-rebirth, so that my soul may be united indivisibly with Your Supreme Self? O' Lord, You are the nephew of Lord ThirumAl, who churned the primordial ocean of milk for nectar of immortality with the Manthara-mountain erected as the churning-rod and the serpent-king VAsugi as the churning rope, revolving like a fast-spinning-top. You are the Gem of Ruby riding the peacock.
go to top
 அனைத்து செய்யுட்கள்   ஒலிவடிவத்துடன் 
 அகரவரிசைப் பட்டியலுக்கு   PDF வடிவத்தில்   எண்வரிசைப் பட்டியலுக்கு 
 English Transliteration of all verses
 For Alphabetical List   in PDF format   For Numerical List 

Thiru AruNagirinAthar's Kandhar AlangkAram

Verse 39 - udhiththu Angku

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 2503.2022 [css]