திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1331 பந்தப்பொற் பார (திருப்பூவணம்) Thiruppugazh 1331 pandhappoRbAra (thiruppUvaNam) |
English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தத்தத் தானன தானன தந்தத்தத் தானன தானன தந்தத்தத் தானன தானன ...... தனதானா ......... பாடல் ......... பந்தற்பொற் பாரப யோதர முந்தச்சிற் றாடைசெய் மேகலை பண்புற்றுத் தாளொடு வீசிய ...... துகிலோடே பண்டைச்சிற் சேறியில் வீதியில் கண்டிச்சித் தாரொடு மேவிடு பங்குக்கைக் காசுகொள் வேசையர் ...... பனிநீர்தோய் கொந்துச்சிப் பூவணி தோகையர் கந்தக்கைத் தாமரை யாலடி கும்பிட்டுப் பாடிசை வீணையர் ...... அநுராகங் கொண்டுற்றுப் பாயலின் மூழ்கிய சண்டிச்சிக் சீயென வாழ்துயர் குன்றப்பொற் பாதக்ரு பாநிதி ...... அருள்வாயே அந்தத்துக் காதியு மாகியு மந்திக்குட் டானவ னானவ னண்டத்தப் பாலுற மாமணி ...... ஒளிவீசும் அங்கத்தைப் பாவைசெய் தேயுயர் சங்கத்திற் றேர்தமி ழோதிட அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி சந்தத்திக் காளுநி சாசரர் வெந்துட்கத் தூளிப டாமெழ சண்டைச்சொற் றார்பட வேவயில் ...... விடுவோனே தங்கச்சக் ராயுதர் வானவர் வந்திக்கப் பேரரு ளேதிகழ் தம்பப்பொற் பூவண மேவிய ...... பெருமாளே. ......... உரை ......... வேசியர்களின் அழகில் மயக்கமுற்று வாழ்நாளையெல்லாம் வீணே இழந்தேன். என்னைக் காத்து அருள வேண்டும் பெருமாளே! சமணர்களுடன் திருஞானசம்பந்தர் வாது செய்து அதில் வெற்றி பெற்றார். அதனால் சமணர்கள் ஒருகோடிப் பேர் தாங்கள் முன்னமே நியமித்துக் கொண்டபடி கழுவேறித் தங்களை மாய்த்துக் கொண்டனர். இதனை, "அங்கத்தைப் பாவை செய் தேயுயர் சங்கத்திற் றேர்தமி ழோதிட அண்டிக்கிட் டார்கழு வேறினர் ...... ஒருகோடி" என்று அருணகிரிநாத சுவாமிகள் பாடியுள்ளார். இவ்வாறு சமணர்கள் கழுவேறிய இடம் "கழுவர்படைவீடு" என்று அழைக்கபட்டது. இப்பொழுது "கழுகேர்கடை" என்று அழைக்கப்படுகிறது. இவ்வூர் திருப்பூவணத்திற்கு அருகே உள்ளது. இவ்வூர் திருவிளையாடற் புராணத்திலும் திருப்புகழிலும் திருப்பூவணத்துடன் இணைத்தே பாடப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் திருப்பூவணத்தில் 10 நாள் திருவிழாவில் கழுவேறுதல் 6 ஆம் நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படுவதும் கருத்திற் கொள்ளவேண்டியதாய் உள்ளது. |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1331 - pandhaRpoR bAra (thiruppUvaNam) thandhaththath thAnana thAnana thandhaththath thAnana thAnana thandhaththath thAnana thAnana ...... thanadhAnA pandhaRpoR bAraba yOdhara mundhach chiR RAdaisei mEgalai paNpuRRuth thALodu veesiya ...... thugilOdE paNdaichchiR chERiyil veedhiyil kaNdichchith thArodu mEvidu pangukkaik kAsukoL vEsaiyar ...... panineerthOi kondhuchchip pUvaNi thOgaiyar kandhakkaith thAmarai yAladi kumbittup pAdisai veeNaiyar ...... anurAgang koNduRRup pAyalin mUzhgiya saNdichchich cheeyena vAzhthuyar kunRappoR pAdhakru pA nidhi ...... aruLvAyE andhaththuk kAdhiyu mAgiyu mandhikkut tAnava nAnava naNdaththap pAluRa mAmaNi ...... oLiveesum angaththaip pAvaisei thEyuyar sangaththiR RErthami zhOdhida aNdikkit tArkazhu vERinar ...... orukOdi sandhaththik kALuni sAsarar vendhutkath thULiya dAmezha sandaichchoR RArpada vEvayil ...... viduvOnE thangachchak rAyudhar vAnavar vandhikkap pEraru LEthikazh thambappoR pUvaNa mEviya ...... perumALE. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |