![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
திருப்புகழ் 1329 அறப்பாவை அத்தற்கு (திருப்பூவணம்) Thiruppugazh 1329 aRappAvaiaththaRku (thiruppUvaNam) |
![]() | English in PDF PDF அமைப்பு ![]() ![]() | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனத்தான தத்தத் ...... தனதானா தனத்தான தத்தத் ...... தனதானா ......... பாடல் ......... அறப்பாவை அத்தற் ...... கருள்பாலா அளித்தாது வெட்சித் ...... திருமார்பா குறப்பாவை அற்பிற் ...... புணர்வோனே குலத்தேவ வர்க்கப் ...... பரிபாலா மறப்பாத கத்துற் ...... றுழல்வேனோ மலர்த்தாள்வ ழுத்தக் ...... க்ருபையீவாய் சிறப்பான முத்திக் ...... கொருவாழ்வே திருப்பூவ ணத்திற் ...... பெருமாளே. ......... உரை ......... சிறப்பான முத்தியை அளிக்கக் கூடிய பூவணத்தில் எழுந்தருளியுள்ள பெருமானே! முருகா! நீ அறப்பாவையான தேவசேனையின் இனத்தைச் சார்ந்த தேவர்களுக்கு அருளுகின்றவன். எப்போதும் வெற்றியை அளிக்கக்கூடிய வெட்சி மாலையை மார்பினில் அணிந்தவன். குறப் பாவையாகிய வள்ளியின் அன்பிற்கு அடிமையானவன். தேவர்களின் குலம் பெருக பரிபாலனம் செய்வோன். இவ்வளவு உயரிய நீ, மிகக் கொடிய பாவங்கள் செய்து மாபாதகத்துள் உழலும் என்னைக் காத்து மலர்போன்ற உனது தாளை வணங்கிட அருள் செய்வாய். |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1329 - aRappAvai aththaRku (thiruppUvaNam) thanaththAna thaththath ...... thanathAnA thanaththAna thaththath ...... thanathAnA aRappAvai aththaR ...... karuLbAlA aLiththAdhu vetchith ...... thirumArbA kuRappAvai aRpiR ...... puNarvOnE kulaththEva varkkap ...... paribAlA maRappAdha kaththuR ...... RuzhalvEnO malarththALva zhuththak ...... krubaiyeevAi siRappAna muththik ...... koruvAzhvE thiruppUva NaththiR ...... perumALE. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search | ![]() ![]() |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 [W3]COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. |