![]() | ![]() திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's | ![]() |
---|
(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You). |
திருப்புகழ் 1327 சைவ முதல் (மதுரை) Thiruppugazh 1327 saivamudhal (madhurai) |
![]() | ![]() | தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தய்யதனத் தனதானா தனனதனத் ...... தனதானா ......... பாடல் ......... சைவமுதற் குருவாயே சமணர்களைத் ...... தெறுவோனே பொய்யர்உளத் தணுகானே புனிதவருட் ...... புரிவாயே கையின்மிசைக் கதிர்வேலா கடிகமழற் ...... புதநீபா தெய்வசற் குருநாதா திருமதுரைப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சைவ முதல் குருவாயே சமணர்களைத் தெறுவோனே ... சைவ சமயத்தின் முதலான குருவாக (திருஞானசம்பந்தராக) வந்து, சமணர்களை முறியடித்தவனே, பொய்யர் உ(ள்)ளத்து அணுகானே புனித அருள் புரிவாயே ... பொய்யர்களின் மனத்தில் இருக்காதவனே, உன் திருவருளைத் தந்து அருளுவாயாக. கையின் மிசைக் கதிர் வேலா கடி கமழ் அற்புத நீபா ... உனது திருக் கரத்தில் ஒளி வீசும் வேலை ஏந்தியவனே, நறு மணம் வீசும் அற்புதமான கடப்ப மாலையைத் தரித்தவனே, தெய்வ சற் குரு நாதா திருமதுரைப் பெருமாளே. ... இறைவனாகிய சிவ பெருமானுக்குச் சிறந்த குருவான தலைவனே, அழகிய மதுரையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
இது ஒரு துதிப்பாடல். வேண்டுகோள் எதுவும் இல்லாதது. |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
(Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
Song 1327 (not listed) saiva mudhal (madhurai) saivamuthaR kuruvAyE samaNarkaLaith ...... theRuvOnE poyyaruLath thaNukAnE punithavarut ...... purivAyE kaiyinmisaik kathirvElA kadikamazhaR ...... puthaneepA theyvasaR gurunAthA thirumathuraip ...... perumALE. ......... Meaning ......... saiva muthal guruvAyE samaNarkaLaith theRuvOnE: You came as the foremost Saivite Master (ThirugnAna SambandhAr) and defeated all the ChamaNas! poyyar u(L)Laththu aNukAnE punitha aruL purivAyE: You never remain in the heart of liars! Kindly bless me! kaiyin misaik kathir vElA kadi kamazh aRputha neepA: You elegantly hold in Your hand the dazzling spear! You wear the garland of fragrant kadappa flowers! theyva saR guru nAthA thirumathuraip perumALE.: You are the great master of Lord SivA, Oh Leader! You have chosen Your abode in the hallowed city of Madhurai, Oh Great One! |
This song is essentially a prayer to Lord Murugan. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. © Copyright Kaumaram dot com - 2001-2040 COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED. Please contact me (the webmaster), if you wish to place a link in your website. email: kaumaram@gmail.com Disclaimer: Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top |