திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1324 தங்க மிகுந்த (புதிய பாடல்கள்) Thiruppugazh 1324 thangamigundha (new songs) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்த தனந்த தனத்த தானன தந்த தனந்த தனத்த தானன தந்த தனந்த தனத்த தானன ...... தனதானா ......... பாடல் ......... தங்க மிகுந்த முலைக்க டாமலை பொங்க விரும்பி யமுத்து மாலைகள் தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ...... மொழியாலே சஞ்ச லமிஞ்சி மயக்கி யேஒரு மஞ்ச மிருந்து சுகிக்க வேவளர் சந்து சுகந்த முடித்து நூலிடை ...... கிடையாடக் கொங்கை குலுங்க வளைத்து வாயத ரங்க ளருந்தி ருசிக்க வேமத குங்கு மமிஞ்சு கழுத்தி லேகுயி ...... லெனஓசை கொண்ட வரிந்த விதத்தி னாடர சங்கி லிகொண்டு பிணித்து மாமயில் கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் ...... உறவாமோ திங்கள் அரும்பு சலத்தி லேவிடம் வந்த துகண்டு பயப்ப டாதவர் சிந்தை நடுங்கி இருக்க வேமயில் ...... மிசையேறிச் சிங்க முகன்த லைவெட்டி மாமுகன் அங்க மறுந்து கிடக்க வேவரு சிம்பு ளெனும்ப டிவிட்ட வேலுள ...... குருநாதா மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்க ரிசுந்த ரிஅத்தி யானனை மைந்த னெனும்ப டிபெற்ற ஈசுரி ...... தருபாலா மந்தி ரதந்தி ரமுத்த யோகியர் அஞ்ச லிசெங்கை முடிக்க வேஅருள் வந்து தரும்ப டிநித்த மாடிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தங்க(ம்) மிகுந்த முலைக் கடாமலை பொங்க விரும்பிய முத்து மாலைகள் தங்க அணிந்து முறுக்கும் வேசியர் ... பொன்னணிகள் மிக்கணிந்து, கடக்கமுடியா மலை போல விம்மிப் பெருகிய மார்பகத்தில் ஆசையுடன் அணிந்த முத்து மாலைகள் தங்கும்படியாக, கர்வத்தைக் காட்டும் விலை மகளிர். மொழியாலே சஞ்சல(ம்) மிஞ்சி மயக்கியே ஒரு மஞ்சம் இருந்து சுகிக்கவே வளர் சந்து சுகந்த முடித்து ... தங்கள் பேச்சினால் வந்தவரை மிகச் சஞ்சலம் அடையச் செய்து மயங்கவைத்து, ஒரு கட்டிலில் அவர்களுடன் சுகித்து இருந்து, மிகுந்த நறுமணம் உள்ள சந்தனத்தை அப்பி மகிழ்ந்து, நூலைப் போன்ற மெலிந்த இடுப்பு படுக்கையில் அசைவுற, நூலிடை கிடையாட கொங்கை குலுங்க வளைத்து வாய் அதரங்கள் அருந்தி ருசிக்கவே மத குங்குமம் மிஞ்சு கழுத்திலே குயிலென ஓசை கொண்டவர் இந்த விதத்தின் ஆடர ... அவர்களது மார்பகங்கள் குலுங்க, கழுத்தை வளைத்து, வந்தவரின் வாயிதழ்களைச் சுவைத்து ருசிக்க, மோகத்தை மூட்டும் குங்குமக் கலவை பூசிய கழுத்திலிருந்து குயிலின் ஓசையை வெளிப்படுத்தும் விலை மகளிர் இந்த விதமாக ஆடிட, சங்கிலி கொண்டு பிணித்து மாமயில் கொஞ்சி மகிழ்ந்த வறட்டு வீணியர் உறவாமோ ... தங்கள் கழுத்திலுள்ள சங்கிலியால் பிணித்து, அழகிய மயில் போல கொஞ்சி மகிழும் இந்த வறட்டு கர்வம் உடைய வீணிகளின் உறவு நல்லதாகுமா? திங்கள் அரும்பு சலத்திலே விடம் வந்தது கண்டு பயப்படாதவர் சிந்தை நடுங்கி இருக்கவே ... சந்திரன் பிறந்த பாற்கடலில் ஆலகால விஷம் எழுந்தபோது அதைக் கண்டு சிறிதும் பயப்படாதவராகிய சிவபெருமான் (சூரனைக் கண்டு) மனம் நடுங்கி இருந்தபோது, மயில் மிசையேறிச் சிங்க முகன் தலைவெட்டி மாமுகன் அங்கம் அறுந்து கிடக்கவே வரு சிம்புள் எனும்படிவிட்ட வேலுள குருநாதா ... உனது மயில் மீது ஏறி சிங்கமுகாசுரன் சிரத்தை வெட்டி, தாரகாசுரன் உடலின் அங்கங்களை அறுத்தெறிந்து, பாய்கின்ற சரபப் பக்ஷி போலச் சென்ற வேலினை உடைய குருநாதனே, மங்கை மடந்தை கதிக்கு நாயகி சங்கரி சுந்தரி அத்தியானனை மைந்தன் எனும்படி பெற்ற ஈசுரி தருபாலா ... தெய்வ மங்கை, மடந்தை, மோட்ச கதிக்கு நாயகி, சங்கரி, பேரழகி, யானை முகத்தவனாகிய கணபதியை மகனாகப் பெற்ற ஈஸ்வரி பார்வதி அருளிய பாலனே, மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே அருள் வந்து தரும்படி நித்தமாடிய பெருமாளே. ... மந்திர, தந்திரங்களில் வல்ல, முற்றும் துறந்த யோகியர் தங்களது செங்கைகளை சிரம் மீது கூப்பி அஞ்சலி செய்ய, அவர்களுக்கு கருணையுடன் அருள் பாலித்து அவர்களின் முன்வந்து (குடைக் கூத்து என்னும்) நடனத்தை ஆடி அருளிய பெருமாளே. |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1324 - thanga migundha (common - new songs) thanga mikuntha mulaikka dAmalai ponga virumpi yamuththu mAlaikaL thanga aNinthu muRukkum vEsiyar ...... mozhiyAlE sanja laminji mayakki yEoru manja mirunthu sukikka vEvaLar santhu sukantha mudiththu nUlidai ...... kidaiyAdak kongai kulunga vaLaiththu vAyatha ranga Larunthi rusikka vEmatha kungu maminju kazhuththi lEkuyi ...... lenaOsai koNda varintha vithaththi nAdara sangi likoNdu piNiththu mAmayil konji makizhntha vaRattu veeNiyar ...... uRavAmO thingaL arumpu salaththi lEvidam vantha thukaNdu payappa dAthavar sinthai nadungi irukka vEmayil ...... misaiyERic chinga mukantha laivetti mAmukan anga maRunthu kidakka vEvaru simpu Lenumpa divitta vEluLa ...... gurunAthA mangai madanthai kathikku nAyaki sanga risuntha riaththi yAnanai maintha nenumpa dipetRa Eesuri ...... tharupAlA manthi rathanthi ramuththa yOkiyar anja lisengai mudikka vEaruL vanthu tharumpa diniththa mAdiya ...... perumALE. ......... Meaning ......... thanga(m) mikuntha mulaik kadAmalai ponga virumpiya muththu mAlaikaL thanga aNinthu muRukkum vEsiyar: Wearing golden ornaments flauntingly, these pompous whores show off the strings of pearls heaving on their huge bosom that looks like an insurmountable mountain. mozhiyAlE sanjala(m) minji mayakkiyE oru manjam irunthu sukikkavE vaLar santhu sukantha mudiththu: They intimidate their suitors with their speech, leaving them in a trance on the bed by offering carnal pleasure and happily smearing the sandalwood paste richly on their chest. nUlidai kidaiyAda kongai kulunga vaLaiththu vAy atharangaL arunthi rusikkavE matha kungumam minju kazhuththilE kuyilena Osai koNdavar intha vithaththin Adara: Shaking their thread-like slender waist on the bed and jiggling their breasts, they bend their neck to suck the lips of the suitors. Emanating from their neck, daubed with provocative paste of vermillion, the cooing noise of the cuckoo is made by these whores. As they dance about in this manner, sangili koNdu piNiththu mAmayil konji makizhntha vaRattu veeNiyar uRavAmO: they bind their suitors tightly with their chain in the neck and flirt like a beautiful peacock. How can a liaison with these haughty and vain whores be of any good to me? thingaL arumpu salaththilE vidam vanthathu kaNdu payappadAthavar sinthai nadungi irukkavE: In the milky ocean, that delivered the Moon, there appeared an evil AlakAla poison but that never scared Him in the least; however, that Lord SivA was frightened (by the demon SUran), and as He remained trembling, mayil misaiyERic chinga mukan thalaivetti mAmukan angam aRunthu kidakkavE varu simpuL enumpadivitta vEluLa gurunAthA: You mounted the peacock and severed the head of the demon Singamukan, tore off the limbs of the demon ThArakan and wielded the spear that lunged like the saraba, the eight-legged monstrous bird, Oh Great Master! mangai madanthai kathikku nAyaki sangari sunthari aththiyAnanai mainthan enumpadi petRa Eesuri tharupAlA: She is the Divine damsel and mother who leads the way towards liberation; She is Sankari with exquisite beauty; She is the Goddess, PArvathi, who begot GaNapathi with an elephant's face as Her son; You are Her son, Oh Lord! manthira thanthira muththa yOkiyar anjali sengai mudikkavE aruL vanthu tharumpadi niththamAdiya perumALE.: The sages who have renounced everything and who are well-versed in manthrAs and sorcery are holding their reddish arms upon their heads offering worship as You graciously come before them to bless them and perform the famous dance (Kudaik kUththu), Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |