திருப்புகழ் 1323 கருவெனு மாயை  (புதிய பாடல்கள்)
Thiruppugazh 1323 karuvenumAyai  (new songs)
Thiruppugazh - 1323 karuvenumAyai - newsongsSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தான தனதன தான
     தனதன தான ...... தனதான

......... பாடல் .........

கருவெனு மாயை உருவினில் மூழ்கி
     வயதள வாக ...... நிலமீதில்

கலைதெரி வாணர் கலைபல நூல்கள்
     வெகுவித மாக ...... கவிபாடித்

தெருவழி போகி பொருளெனு மாசை
     திரவியம் நாடி ...... நெடிதோடிச்

சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி
     சிறுவித மாக ...... திரிவேனோ

அருளநு போக குருபர னேஉன்
     அடியவர் வாழ ...... அருள்வோனே

அரனிரு காதில் அருள்பர ஞாந
     அடைவினை ஓதி ...... அருள்பாலா

வெருவிடு சூரர் குலஅடி வேரை
     விழவிடு சாசு ...... வதிபாலா

மிடலுட லாளர் அடரசுர் மாள
     விடுமயில் வேல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கருவெனு மாயை உருவினில் மூழ்கி ... தாயின் கருப்பையிலே
மாயையான உருவத்திலே மூழ்கி

வயதளவாக நிலமீதில் ... காலத்தில் பிறந்து, பின் வயதுக்கு
வந்த பின், உலகிலுள்ள

கலைதெரி வாணர் கலைபல நூல்கள் ... கலை வல்லுனர்களின்
பலவிதமான கலை நூல்களைப் பயின்று,

வெகுவிதமாக கவிபாடித் தெருவழி போகி ... அனேக விதமான
கவிதைகளைப் பாடியவாறே தெருக்கள் வழியே சென்று,

பொருளெனும் ஆசை திரவியம் நாடி நெடிது ஓடி ... பணம்
சேர்க்க வேண்டும் என்ற ஆசையால் செல்வங்கள் பலவற்றை விரும்பி
நெடும் தொலைவு ஓடி,

சிலைநுதல் மாதர் மயலினில் மூழ்கி ... வில் போன்ற நெற்றியை
உடைய பெண்களின் மோகத்திலே முழுகி,

சிறுவிதமாக திரிவேனோ ... அற்பத்தனமாக நான் உழன்று திரிதல்
தகுமோ?

அருள் அநுபோக குருபரனே உன் அடியவர் வாழ
அருள்வோனே
... உன்னை நினைத்துத் துதிப்பவர்களுக்கு அநுபவ
மார்க்கத்தில் அருளைத் தரும் பரம குருவே, உன் அடியார்களை
வாழச்செய்ய அருள்பவனே,

அரன் இரு காதில் அருள்பர ஞாந அடைவினை ஓதி
அருள்பாலா
... தந்தை சிவபிரானின் இரு செவிகளிலும் மேலான அருள்
ஞான மந்திரமான பிரணவ மந்திரத்தை உபதேசித்து அருளிய மகனே,

வெருவிடு சூரர் குலஅடி வேரை விழவிடு சாசுவதி பாலா ...
அஞ்சி ஓடிய சூரனுடைய குலத்தின் அடிவேரையே சாய்த்த, நிரந்தரியான
சக்தியின் குமரனே,

மிடல் உடலாளர் அடர் அசுர் மாள ... வலிமையான உடலமைப்பு
கொண்டவர்களான அசுரர் கூட்டம் மாயுமாறு

விடும் அயில் வேல பெருமாளே. ... செலுத்திய படையான
வேலாயுதத்தை உடைய பெருமாளே.

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1323 - karuvenu mAyai (common - new songs)

karuvenu mAyai uruvinil mUzhki vayathaLa vAka ...... nilameethil

kalaitheri vANar kalaipala nUlkaL vekuvitha mAka ...... kavipAdith

theruvazhi pOki poruLenu mAsai thiraviyam nAdi ...... nedithOdi

silainuthal mAthar mayalinil mUzhki siRuvitha mAka ...... thirivEnO

aruLanu pOka gurupara nEun adiyavar vAzha ...... aruLvOnE

araniru kAthil aruLpara njAna adaivinai Othi ...... aruLbAlA

veruvidu cUrar kulAdi vErai vizhavidu sAsu ...... vathibAlA

midaluda lALar adarasur mALa vidumayil vEla ...... perumALE.

......... Meaning .........

karuvenu mAyai uruvinil mUzhki: Taking a delusory shape and being immersed in the mother's womb,

vayathaLavAka nilameethil kalaitheri vANar kalaipala nUlkaL: I was eventually born; attaining adulthood, I learnt all the major artistic texts of several experts;

vekuvithamAka kavipAdith theruvazhi pOki: I sang many varieties of poems as I roamed about in the streets;

poruLenum Asai thiraviyam nAdi nedithu Odi: I ran up to the farthest distance in search of wealth, impelled by a desire to make money;

silainuthal mAthr mayalinil mUzhki: I drowned myself in the delusory passion for women with bow-like foreheads;

siRuvithamAka thirivEnO: is it fair that I should be wandering in such a silly manner?

aruL anupOka guruparanE un adiyavar vAzha aruLvOnE: To those who meditate upon You praising Your glory, You graciously grant self-realisation! You bless Your devotees with all prosperity!

aran iru kAthil aruLpara njAna adaivinai Othi aruLbAlA: Unto the ears of Your father, Lord SivA, You preached the Supreme and blessed PraNava ManthrA, Oh Son of SivA!

veruvidu cUrar kulAdi vErai vizhavidu sAsuvathi bAlA: Oh Son of the immortal Goddess Sakthi, You annihilated the entire dynasty of the scared and fleeing demon, SUran!

midal udalALar adar asur mALa vidum ayil vEla perumALE.: You hold the great weapon, the spear, that was wielded to kill the multitude of demons with strongly built bodies, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1323 karuvenu mAyai - new songs

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]