திருப்புகழ் 1293 நாரியர்கள் ஆசை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1293 nAriyargaLAsai  (common)
Thiruppugazh - 1293 nAriyargaLAsai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானதன தானனத் ...... தனதான

......... பாடல் .........

நாரியர்க ளாசையைக் ...... கருதாதே

நானுனிரு பாதபத் ...... மமுநாட

ஆரமுத மானசர்க் ...... கரைதேனே

ஆனஅநு பூதியைத் ...... தருவாயே

காரணம தானவுத் ...... தமசீலா

கானகுற மாதினைப் ...... புணர்வோனே

சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா

தோகைமயில் வாகனப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நாரியர்கள் ஆசையைக் கருதாதே நான் உன் இரு பாத
பத்மமும் நாட
... பெண்கள் மீதுள்ள ஆசையை எண்ணாமல்,
நான் உனது இரண்டு தாமரைத் திருவடிகளை விரும்பித் தேட,

ஆர அமுதமான சர்க்கரை தேனே ஆன அநுபூதியைத்
தருவாயே
... நிறைந்த அமுதம் என்று சொல்லும்படி, சர்க்கரை,
தேன் என்னும்படியான இனிய அனுபவ ஞானத்தைத் தருவாயாக.

காரணம் அதான உத்தம சீலா ... அனைத்துக்கும் காரணனாக
(மூலப் பொருளாக) இருக்கும் உத்தம சீலனே,

கான குற மாதினைப் புணர்வோனே ... காட்டில் வளர்ந்த குறப்
பெண்ணாகிய வள்ளியை அணைந்தவனே,

சூரர் கிளை தூள் எழப் பொரும் வேலா ... சூரனது சுற்றம்
இறந்து தூளாகும்படி சண்டை செய்த வேலாயுதனே,

தோகை மயில் வாகனப் பெருமாளே. ... அழகிய கலாபத்தை
உடைய மயிலை வாகனமாகக் கொண்ட பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.668  pg 3.669 
 WIKI_urai Song number: 1292 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1293 - nAriyargaL Asai (common)

nAriyarka LAsaiyaik ...... karuthAthE

nAnuniru pAthapath ...... mamunAda

Aramutha mAnasark ...... karaithEnE

Ana anu pUthiyaith ...... tharuvAyE

kAraNama thAnavuth ...... thamaseelA

kAnakuRa mAthinaip ...... puNarvOnE

cUrarkiLai thULezhap ...... porumvElA

thOkaimayil vAkanap ...... perumALE.

......... Meaning .........

nAriyarkaL Asaiyaik karuthAthE nAn un iru pAtha pathmamum nAda: Without thinking about lust for women, I wish to meditate on Your two lotus feet;

Ara amuthamAna sarkkarai thEnE Ana anupUthiyaith tharuvAyE: kindly grant me the blissful experience comparable to the rich nectar, sweet as sugar and honey!

kAraNam athAna uththama seelA: You are the Causal substance in the entire world, Oh virtuous one!

kAna kuRa mAthinaip puNarvOnE: You embraced VaLLi, the damsel of the kuRavAs living in a forest!

cUrar kiLai thUL ezhap porum vElA: You fought with the entire clan of the demon SUran and reduced them to ashes, Oh Lord with the Spear!

thOkai mayil vAkanap perumALE.: You mount the peacock with a beautiful plume as Your vehicle, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1293 nAriyargaL Asai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]