திருப்புகழ் 1287 சமய பத்தி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1287 samayapaththi  (common)
Thiruppugazh - 1287 samayapaththi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தத்தன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

சமய பத்தி வ்ருதாத்தனை ...... நினையாதே

சரண பத்ம சிவார்ச்சனை ...... தனைநாடி

அமைய சற்குரு சாத்திர ...... மொழிநூலால்

அருளெ னக்கினி மேற்றுணை ...... தருவாயே

உமைமுலைத்தரு பாற்கொடு ...... அருள்கூறி

உரிய மெய்த்தவ மாக்கிந ...... லுபதேசத்

தமிழ்த னைக்கரை காட்டிய ...... திறலோனே

சமண ரைக்கழு வேற்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சமய பத்தி வ்ருதாத்தனை நினையாதே ... மதக் கொள்கையில்
உள்ள பக்தி பயனற்றது என்று நினைக்காமல்,

சரண பத்ம சிவார்ச்சனை தனைநாடி அமைய ... உன் திருவடித்
தாமரையில் சிவார்ச்சனை செய்ய விரும்பிய யான்மனம் பொருந்தி
நிலைத்திருக்க,

சற்குரு சாத்திர மொழிநூலால் ... சற்குரு மூலமாகவும், சாஸ்திர
மொழி நூல்கள் மூலமாகவும்,

அருளெனக்கினிமேல் துணைதருவாயே ... நின்னருளை நீ
எனக்கு இனிமேல் துணையாகத் தந்தருள்வாயாக.

உமைமுலைத்தரு பாற்கொடு அருள்கூறி ... உமையின் முலை
தந்தருளிய பாலை உண்டதன் காரணமாக சிவபிரானின் திருவருளை
(தேவாரப் பதிகங்களில்) கூறுவதையே

உரிய மெய்த்தவ மாக்கி ... தனக்கு (திருஞானசம்பந்தருக்கு*)
உரிய உண்மைத் தவ ஒழுக்கமாகக் கொண்டு,

நல் உபதேசத் தமிழ்தனை ... நல்ல உபதேசங்களைக் கொண்ட
தமிழ் தன்னை

கரை காட்டிய திறலோனே ... கரை கண்ட பராக்கிரமசாலியே,

சமணரைக்கழுவேற்றிய பெருமாளே. ... சமணர்களை (வாதில்
வென்று) கழுவேற்றிய பெருமாளே.


* முருகனே திருஞானசம்பந்தராக அவதரித்ததாக அருணகிரிநாதர் பல
இடங்களில் கூறியுள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.662  pg 3.663 
 WIKI_urai Song number: 1286 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1287 - samaya paththi (common)

samaya baththi vrudhAth thanai ...... ninaiyAdhE

charaNa padhma sivArchchanai ...... thanai nAdi

amaiya saRguru sAththira ...... mozhinUlAl

aruLenak kinimEl thuNai ...... tharuvAyE

umai mulaith tharu pAlkodu ...... aruL kURi

uriya meyththava mAkki nal ...... upadhEsath

thamizh thanaikkarai kAttiya ...... thiRalOnE

samaNaraik kazhuvEtriya ...... perumALE.

......... Meaning .........

samaya baththi vrudhAth thanai ninaiyAdhE: Without concluding that religious belief is worthless,

charaNa padhma sivArchchanai thanai nAdi amaiya: I would like to make Saivite offerings to Your lotus feet. For that to happen,

saRguru sAththira mozhinUlAl: the guidance of a Master and the instructions from the scriptures

aruLenak kinimEl thuNai tharuvAyE: will have to be my protection from now on. Kindly bless me with that support.

umai mulaith tharu pAlkodu aruL kURi: By imbibing the holy milk from the breast of Mother UmA, You were able to sing (as ThirugnAna Sambandhar*) the sacred hymns (ThEvAram) on Lord SivA!

uriya meyththava mAkki nal upadhEsath: That became Your true and committed mission, and You preached to the world high moral values.

thamizh thanaikkarai kAttiya thiRalOnE: You became a paradigm, standing loftily on the banks of the River Tamil, Oh competent one!

samaNaraik kazhuvEtriya perumALE.: You sent the ChamaNas to the gallows (after conquering them in debate), Oh Great One!


* AruNagirinAthar has said in several songs that ThirugnAna Sambandhar is the reincarnation of Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1287 samaya paththi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]