திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1286 கோடான மேருமலை (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1286 kOdAnamErumalai (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானான தானதனத் ...... தனதான ......... பாடல் ......... கோடான மேருமலைத் ...... தனமானார் கோமாள மானவலைக் ...... குழலாதே நாடோறு மேன்மைபடைத் ...... திடவேதான் நாயேனை யாளநினைத் ...... திடொணாதோ ஈடேற ஞானமுரைத் ...... தருள்வோனே ஈராறு தோள்கள்படைத் ...... திடுவோனே மாடேறு மீசர்தமக் ...... கினியோனே மாதானை யாறுமுகப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கோடு ஆன மேரு மலைத் தனம் மானார் கோமாளம் ஆன வலைக்கு உழலாதே ... சிகரங்களைக் கொண்ட மேரு மலையை ஒத்த மார்பகங்களை உடைய விலைமாதர்களின் கொண்டாட்டமான வலைக்குள் பட்டுத் திரியாமல், நாள் தோறும் மேன்மை படைத்திடவே தான் நாயேனை ஆள நினைத்திட ஒணாதோ ... நாளுக்கு நாள் சிறப்பும் புகழும் பெருகி உண்டாக நாய் போன்ற அடியேனை ஆட்கொள்ள நினைத்திடக் கூடாதோ? ஈடேற ஞானம் உரைத்து அருள்வோனே ... நான் ஈடேறும்படி ஞானோபதேசம் செய்து அருளியவனே, ஈராறு தோள்கள் படைத்திடுவோனே ... பன்னிரண்டு தோள்களைக் கொண்டவனே, மாடு ஏறும் ஈசர் தமக்கு இனியோனே ... ரிஷபத்தில் ஏறுகின்ற சிவபெருமானுக்கு இனியவனே, மா தானை ஆறு முகப் பெருமாளே. ... சிறந்த சேனைகளையும், ஆறு திரு முகங்களையும் கொண்ட பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.660 pg 3.661 pg 3.662 pg 3.663 WIKI_urai Song number: 1285 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'மயிலாடுதுறை' திரு சொ. சிவகுமார் Thiru S. Sivakumar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1286 - kOdAna mErumalai (common) kOdAna mErumalaith ...... thanamAnAr kOmALa mAnavalaik ...... kuzhalAthE nAdORu mEnmaipadaith ...... thidavEthAn nAyEnai yALaninaith ...... thidoNAthO eedERa njAnamuraith ...... tharuLvOnE eerARu thOLkaLpadaith ...... thiduvOnE mAdERu meesarthamak ...... kiniyOnE mAthAnai yARumukap ...... perumALE. ......... Meaning ......... kOdu Ana mEru malaith thanam mAnAr kOmALam Ana valaikku uzhalAthE: The bosom of the whores may be compared to the cliffs of the mount MEru; without letting me get ensnared in their tantalising net, nAL thORum mEnmai padaiththidavE thAn nAyEnai ALa ninaiththida oNAthO: and in order to enhance my name and fame everyday, will You not kindly consider taking charge of me, this humble dog? eedERa njAnam uraiththu aruLvOnE: You preached to me true knowledge for my salvation! eerARu thOLkaL padaiththiduvOnE: You possess twelve strong shoulders! mAdu ERum eesar thamakku iniyOnE: You are the favourite of Lord SivA who mounts the bull, Rishabam! mA thAnai ARu mukap perumALE.: You command a very large army and possess six Divine faces, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |