திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1285 கொடிய மதவேள் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1285 kodiyamadhavEL (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தானத் ...... தனதான ......... பாடல் ......... கொடியமத வேள்கைக் ...... கணையாலே குரைகணெடு நீலக் ...... கடலாலே நெடியபுகழ் சோலைக் ...... குயிலாலே நிலைமைகெடு மானைத் ...... தழுவாயே கடியரவு பூணர்க் ...... கினியோனே கலைகள்தெரி மாமெய்ப் ...... புலவோனே அடியவர்கள் நேசத் ...... துறைவேலா அறுமுகவி நோதப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கொடியமத வேள்கைக் கணையாலே ... கொடுமை செய்யும் மன்மதனுடைய கரத்திலிருந்து விடும் மலர் அம்புகளாலே, குரைகண் நெடு நீலக் கடலாலே ... அலை ஓசை மிகுந்து ஆரவாரிக்கும் பெரிய நீலக் கடலினாலே, நெடியபுகழ் சோலைக் குயிலாலே ... நீண்டுயர்ந்த சோலையில் பாடிப் புகழ் பெற்ற குயிலினாலே, நிலைமைகெடு மானைத் தழுவாயே ... (உன்னைப் பிரிந்து) தன்னிலைமை கெட்டு நிலைகுலையும் மானொத்த இப்பெண்ணைத் தழுவமாட்டாயா? கடியரவு பூணர்க்கு இனியோனே ... கடிக்கும் பாம்பை ஆபரணமாகப் பூண்ட சிவனாருக்கு இனியவனே, கலைகள்தெரி மாமெய்ப் புலவோனே ... ஆய கலைகள் அனைத்தையும் தெரிந்த உண்மை வித்தகனே, அடியவர்கள் நேசத்து உறைவேலா ... உன் அடியார்களின் பக்தியில் வாழ்கின்ற வேலனே, அறுமுக விநோதப் பெருமாளே. ... ஆறுமுகனே, திருவிளையாடல்கள் பல புரிந்த பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில், 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், குயில், மன்மதன், மலர்க் கணைகள் - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.660 pg 3.661 WIKI_urai Song number: 1284 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1285 - kodiya madhavEl (common) kodiya madhavEL kai ...... kaNaiyAlE kurai kaNnedu neelak ...... kadalAlE nediya pugazh sOlai ...... kuyilAlE nilaimai kedu mAnaith ...... thazhuvAyE kadiyaravu pUNark ...... iniyOnE kalaigaL theri mA meyp ...... pulavOnE adiyavargaL nEsath ...... thuRaivElA aRumuga vinOdhap ...... perumALE. ......... Meaning ......... kodiya madhavEL kai kaNaiyAlE: Due to the cruel flowery arrows shot by the haunting Love God (Manmathan), kurai kaNnedu neelak kadalAlE: due the constant drone of waves from the roaring wide sea, and nediya pugazh sOlai kuyilAlE: due to the piercing sound of the famous cuckoo from the tall vast grove, nilaimai kedu mAnaith thazhuvAyE: this deer-like damsel is tormented by Your separation; - wouldn't You care to embrace her? kadiyaravu pUNark iniyOnE: Biting serpent is adorning Lord SivA as a jewel; and You are His dearest! kalaigaL theri mA meyp pulavOnE: You know all forms of Arts, and You are a true scholar! adiyavargaL nEsath thuRaivElA: You thrive in the love of Your devotees, Oh VElA, aRumuga vinOdhap perumALE.: You are six-faced, and Your pranks are wonderful, Oh Great One! |
This song has been written in the NAyaka-NAyaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The sea, the moon, Love God, the flowery arrows and the cuckoo are some of the sources which aggravate the agony of separation from the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |