திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1266 மக்கள் பிறப்புக்குள் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1266 makkaLpiRappukkuL (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த தத்தத் தனத்தத்த ...... தனதான ......... பாடல் ......... மக்கட் பிறப்புக்கு ளொக்கப் பிறப்புற்ற மட்டுற் றசுற்றத்தர் ...... மனையாளும் மத்யத் தலத்துற்று நித்தப் பிணக்கிட்டு வைத்துப் பொருட்பற்று ...... மிகநாட நிக்ரித் திடுத்துட்டன் மட்டித் துயிர்பற்ற நெட்டைக் கயிற்றிட்டு ...... வளையாமுன் நெக்குக் குருப்பத்தி மிக்குக் கழற்செப்ப நிற்றத் துவச்சொற்க ...... ளருள்வாயே திக்கப் புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த சித்ரத் தமிழ்க்கொற்ற ...... முடையோனே சிப்பக் குடிற்கட்டு மற்பக் குறத்திச்சொல் தித்திப் பையிச்சிக்கு ...... மணவாளா முக்கட் சடைச்சித்த ருட்புக் கிருக்கைக்கு முத்தித் துவக்குற்று ...... மொழிவோனே முட்டச் சினத்திட்டு முற்பட் டிணர்க்கொக்கை முட்டித் தொளைத்திட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மக்கள் பிறப்புக்குள் ஒக்கப் பிறப்பு உற்ற மட்டு உற்ற சுற்றத்தர் மனையாளும் ... மக்களாக எடுத்த பிறப்பில் கூடப் பிறந்துள்ள சுற்றம் என்னும் அளவில் உள்ள உறவினர்களும், மனைவியும், மத்(தி)யத் தலத்து உற்று நித்தப் பிணக்கிட்டு வைத்துப் பொருள் பற்று(ம்) மிக நாட ... (எனது) வாழ் நாளின் இடையில் வந்து சேர்ந்து, தினமும் மாறுபட்டுச் சண்டை இட்டு, சேகரித்து வைத்துள்ள பொருளைப் பறிக்கவே மிகவும் நாடி நிற்க, நிக்(க)ரித்து இடு(ம்) துட்டன் மட்டித்து உயிர் பற்ற நெட்டைக் கயிற்று இட்டு வளையா முன் ... கொல்ல வரும் துஷ்டனாகிய யமன், அழித்து என் உயிரைப் பிடிக்க நீண்ட பாசக் கயிற்றினால் வீசி வளைப்பதற்கு முன்பாக, நெக்குக் குருப் பத்தி மிக்குக் கழல் செப்ப நில் தத்துவச் சொற்கள் அருள்வாயே ... மனம் நெகிழ்ந்து, குரு பக்தி மிகுந்து, உன் திருவடிகளைப் புகழ்வதற்கு, நிலைத்து நிற்கும் தத்துவ அறிவுச் சொற்களை எனக்கு உதவி செய்து அருளுக. திக்கு அப்புறத்துக்குள் நிற்கப் புகழ்ப்பித்த சித்ரத் தமிழ்க் கொற்றம் உடையோனே ... நாலு திசைகளிலுள்ள புறங்களுள்ளும் அழியாதிருக்கச் (சம்பந்தராக வந்து) சிவபெருமானின் புகழைப் பரப்பிய, அழகிய தமிழ் பாடும் வெற்றியை உடையவனே, சிப்ப(ம்) குடில் கட்டும் அற்பக் குறத்திச் சொல் தித்திப்பை இச்சிக்கும் மணவாளா ... சிறிய குடிசை கட்டியுள்ள, கீழ்ஜாதியில் வளர்ந்த குறப்பெண்ணாகிய, வள்ளியின் இனிய சொல்லை விரும்பி ஆசைப்படும் கணவனே. முக்கண் சடைச் சித்தர் உள் புக்கு இருக்கைக்கு முத்தித் துவக்கு உற்று மொழிவோனே ... மூன்று கண்களையும், சடையையும் உடைய சித்த மூர்த்தியாகிய சிவபெருமானது உள்ளத்துள் நுழைந்து படிவதற்கு, முக்தி நிலையைப் பற்றி முதலிலிருந்து உபதேசித்தவனே, முட்டச் சினத்திட்டு முற்பட்டு இணர் கொக்கை முட்டித் தொளைத்திட்ட பெருமாளே. ... முழுக் கோபம் கொண்டு, முன்னே இருந்த பூங்கொத்துக்கள் கூடிய மாமரமாக நின்ற சூரனை எதிர்த்துத் தாக்கி, வேலால் தொளைத்து அழித்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.622 pg 3.623 pg 3.624 pg 3.625 WIKI_urai Song number: 1265 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1266 - makkaL piRappukkuL (common) makkat piRappukku Lokkap piRapputRa mattut RasutRaththar ...... manaiyALum mathyath thalaththutRu niththap piNakkittu vaiththup porutpatRu ...... mikanAda nikrith thiduththuttan mattith thuyirpatRa nettaik kayitRittu ...... vaLaiyAmun nekkuk kuruppaththi mikkuk kazhaRcheppa nitRath thuvacchoRka ...... LaruLvAyE thikkap puRaththukkuL niRkap pukazhppiththa sithrath thamizhkkotRa ...... mudaiyOnE sippak kudiRkattu maRpak kuRaththicchol thiththip paiyicchikku ...... maNavALA mukkat chadaicchiththa rutpuk kirukkaikku muththith thuvakkutRu ...... mozhivOnE muttac chinaththittu muRpat tiNarkkokkai muttith thoLaiththitta ...... perumALE. ......... Meaning ......... makkaL piRappukkuL okkap piRappu utRa mattu utRa sutRaththar manaiyALum: In this birth in which I have taken the human form, the siblings, the relatives and the wife math(thi)yath thalaththu utRu niththap piNakkittu vaiththup poruL patRu(m) mika nAda: all came in the middle, quarrelled with me every day and were eager to grab whatever money I had saved; nik(ka)riththu idu(m) thuttan mattiththu uyir patRa nettaik kayitRu ittu vaLaiyA mun: before the evil God of Death (Yaman), who is bent upon killing me, throws the long rope of bondage to strangle me and take my life away, nekkuk kurup paththi mikkuk kazhal seppa nil thaththuvac choRkaL aruLvAyE: kindly help me to melt in my heart and praise Your hallowed feet with abundant devotion to You as my Master and grant me words of spiritual knowledge that will last for ever! thikku appuRaththukkuL niRkap pukazhppiththa sithrath thamizhk kotRam udaiyOnE: In order that Lord SivA's glory spreads in all the four directions without extinction, You came (as ThirugnAna Sambandhar) and sang beautiful hymns in Tamil triumphantly, Oh Lord! sippa(m) kudil kattum aRpak kuRaththic chol thiththippai icchikkum maNavALA: She built for herself a modest cottage, having been reared in the KuRavA tribe of a low lineage; still, You fell for her sweet words and sought her with great desire, Oh Consort of VaLLi! mukkaN sadaic chiththar uL pukku irukkaikku muththith thuvakku utRu mozhivOnE: He has three eyes and matted hair; He is the great Sidhdha, Lord SivA; in order to inculcate in His mind the significance of liberation, You preached to Him right from the beginning, Oh Lord! muttac chinaththittu muRpattu iNar kokkai muttith thoLaiththitta perumALE.: Incensed with anger, You attacked the demon SUran, who took the disguise of a mango tree full of bunches of flowers, and destroyed him by piercing with Your spear, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |