திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1265 பெருங்காரியம் போல் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1265 perungkAriyampOl (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனந்தா தனந்தா தனந்தா தனந்தா தனந்தா தனந்த ...... தனதான ......... பாடல் ......... பெருங்கா ரியம்போல் வருங்கே டுடம்பால் ப்ரியங்கூர வந்து ...... கருவூறிப் பிறந்தார் கிடந்தா ரிருந்தார் தவழ்ந்தார் நடந்தார் தளர்ந்து ...... பிணமானார் அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள் அலங்கார நன்றி ...... தெனமூழ்கி அகன்றா சையும்போய் விழும்பா ழுடம்பால் அலந்தேனை யஞ்ச ...... லெனவேணும் இருங்கா னகம்போ யிளங்கா ளைபின்போ கவெங்கே மடந்தை ...... யெனவேகி எழுந்தே குரங்கா லிலங்கா புரந்தீ யிடுங்கா வலன்றன் ...... மருகோனே பொருங்கார் முகம்பா ணிகொண்டே யிறைஞ்சார் புறஞ்சாய அம்பு ...... தொடும்வேடர் புனங்கா வலங்கோ தைபங்கா வபங்கா புகழ்ந்தோது மண்டர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பெருங்காரியம்போல் வரும் ... பெரிய காரியத்தைச் சாதிக்க வந்ததுபோல வந்துள்ளதும், கேடுடம்பால் ப்ரியங்கூர வந்து ... எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகிய இந்த உடம்பின்மீது ஆசைப்படும்படி வந்து, கருவூறிப் பிறந்தார் கிடந்தார் இருந்தார் தவழ்ந்தார் ... கருவில் ஊறிப் பிறந்தார் என்றும், படுத்திருந்தார் என்றும், இருந்தார் என்றும், தவழ்ந்தார் என்றும், நடந்தார் தளர்ந்து பிணமானார் ... நடந்தார் என்றும், தளர்ந்து பிணமானார் என்றும் கூற இடமானதும், அருங்கான் மருங்கே யெடுங்கோள் சுடுங்கோள் ... அரிய சுடுகாட்டின் அருகே எடுத்துக்கொண்டு செல்லுங்கள் என்றும், அங்கே உடலைச் சுடுங்கள் என்றும் (சிலர் கூறத் தொடங்க), அலங்கார நன்றிது எனமூழ்கி அகன்று ... பிணத்திற்கு அலங்காரம் நன்றாய் அமைந்தது என்றும் சிலர் கூறி, பிணம் எரிந்ததும் நீரில் மூழ்கி, ஆசையும்போய் விழும்பாழுடம்பால் ... இருந்த ஆசையையும் பாசத்தையும் மறந்து செல்ல, விழுந்து பாழாகும் இந்த உடம்பைக் காரணமாக வைத்து அலந்தேனை யஞ்சலெனவேணும் ... மனம் கலங்கி எங்கும் அலைந்து திரிந்த என்னை அஞ்சாதே என்று கூறி நீ வரவேண்டும். இருங்கானகம்போய் இளங்காளைபின்போக ... பெரிய காட்டிற்குச் சென்று, இளைய வீரனாம் தம்பி லக்ஷ்மணன் பின் தொடர, எங்கே மடந்தை யெனவேகி எழுந்தே ... (காணாது போன) மாது சீதை எங்கே என்று தேடிச் சென்று புறப்பட்டு, குரங்கால் இலங்கா புரந்தீ யிடும் ... அநுமார் என்னும் குரங்கின் மூலம் இலங்காபுரியில் நெருப்பை வைத்த காவலன்றன் மருகோனே ... அரசனான ராமபிரானின் மருகனே, பொருங்கார்முகம் பாணிகொண்டே ... போர் செய்யும் வில்லைக் கையில் கொண்டவர்களாய், இறைஞ்சார் புறஞ்சாய அம்பு தொடும்வேடர் ... தம்மை மதிக்காதவர்களின் வீரம் அழியும்படி அம்பைச் செலுத்தவல்ல வேடர்களுடைய புனங்காவல் அங்கோதைபங்கா அபங்கா ... தினைப்புனத்தைக் காவல் செய்த அழகிய பெண் வள்ளியின் மணாளனே, குறைவொன்றும் இல்லாதவனே, புகழ்ந்தோதும் அண்டர் பெருமாளே. ... உன்னைப் புகழ்ந்து துதிக்கும் தேவர்களுடைய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.620 pg 3.621 pg 3.622 pg 3.623 WIKI_urai Song number: 1264 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1265 - perungkAriyam pOl (common) perungkA riyampOl varungkE dudampAl priyangkUra vanthu ...... karuvURip piRanthAr kidanthA rirunthAr thavazhnthAr nadanthAr thaLarnthu ...... piNamAnAr arungkAn marungE yedungOL sudungOL alangAra nanRi ...... thenamUzhki akanRA saiyumpOy vizhumpA zhudampAl alanthEnai yanja ...... lenavENum irungkA nakampO yiLangkA LaipinpO kavengE madanthai ...... yenavEki ezhunthE kurangA lilangA puranthee yidungkA valanRan ...... marukOnE porungkAr mukampA NikoNdE yiRainjAr puRanjcAya ampu ...... thodumvEdar punangkA valangkO thaipangA vapangA pukazhnthOthu maNdar ...... perumALE. ......... Meaning ......... perungkAriyampOl varum: The body has taken this shape as if it is going to accomplish a big job. kEdudampAl priyangkUra vanthu: Taking keen interest in this body, the cause for all miseries karuvURip piRanthAr kidanthAr irunthAr thavazhnthAr: a life entered the womb, and a child was born; he was lying down; he was sitting there; he was crawling; nadanthAr thaLarnthu piNamAnAr: he was walking; he became tired and eventualy died, becoming a corpse. arungkAn marungE yedungOL sudungOL: (People began to say) "Take away this corpse to the cremation ground and burn it"; alangAra nanRithu enamUzhki akanRu: Some even appreciated the adornment made to the dead body! Everyone took a dip in the water and left the cremation ground, AsaiyumpOy vizhumpAzhudampAl: forgetting the love and attachment to that body! For the sake of that destructible body, alanthEnai yanjalenavENum: I have been roaming about aimlessly. Kindly bless me reassuring "Fear Not!" irungkAnakampOy iLangkALaipinpOka: He went to the dense forest along with His younger brother, Lakshmanan; engE madanthai yenavEki ezhunthE: they searched for the damsel (Seetha who was missing) everywhere in the forest; kurangAl ilangA puranthee yidum: He set fire to LankApuri through the help of the monkey, HanumAr; kAvalanRan marukOnE: He is the great King Rama; and You are His nephew. porungkArmukam pANikoNdE: They bear the battling bows in their arms; iRainjAr puRanjcAya ampu thodumvEdar: they are hunters, capable of wielding arrows and conquering those who are disrespectful to them; punangkAval angkOthaipangA apangA: those hunters' millet-field was guarded by the beautiful damsel, VaLLi, and You are her consort. You are absolutely blemishless! pukazhnthOthum aNdar perumALE.: You are the Lord of all the celestials who praise Your glory, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |