திருப்புகழ் 1263 பிரமனும் விரகொடு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1263 biramanumvirakodu  (common)
Thiruppugazh - 1263 biramanumvirakodu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனதன தனதன
     தானத் தனந்தம் ...... தனதான

......... பாடல் .........

பிரமனும் விரகொடு பிணிவினை யிடர்கொடு
     பேணிக் கரங்கொண் ...... டிருகாலும்

பெறநிமிர் குடிலென வுறவுயிர் புகமதி
     பேதித் தளந்தம் ...... புவியூடே

வரவிட வருமுட லெரியிடை புகுதரு
     வாதைத் தரங்கம் ...... பிறவாமுன்

மரகத மயில்மிசை வருமுரு கனுமென
     வாழ்க்கைக் கொரன்புந் ...... தருவாயே

அருவரை தொளைபட அலைகடல் சுவறிட
     ஆலிப் புடன்சென் ...... றசுரேசர்

அனைவரு மடிவுற அமர்பொரு தழகுட
     னாண்மைத் தனங்கொண் ...... டெழும்வேலா

இருவினை யகலிட எழிலுமை யிடமுடை
     யீசர்க் கிடுஞ்செந் ...... தமிழ்வாயா

இயல்பல கலைகொடு இசைமொழி பவரினும்
     ஏழைக் கிரங்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விரகொடு பிணிவினை இடர் கொடு பேணிக் கரம் கொண்டு
இரு காலும் பெற
... சாமர்த்தியத்துடன் இணைந்து வரும் வினைகளின்
துன்பங்களைக் கொண்டதாய், விருப்புடன் (இரண்டு) கைகளுடன்
இரண்டு கால்களும் பெறும்படியாக

நிமிர் குடில் என உற உயிர் புக மதி பேதித்து அளந்து ...
உயர்த்தப்பட்ட குடிசை போன்ற உடலில் பொருந்தும்படி உயிர் புகுந்து,
அறிவு என்பது அவ்வுயிர்க்கு வேறுபாடாகும்படி கணக்கிட்டு,

அம் புவி ஊடே*பிரமனும் வர விட வரும் உடல் எரி இடை
புகு தரு வாதைத் தரங்கம் பிறவா முன்
... உலகிடையே
பிரமதேவனும் அனுப்பி வைக்க வந்து சேர்கின்ற உடல் (இறுதியில்)
நெருப்பில் புகுந்தழியும் துன்பம் என்னும் அலை தோன்றுவதற்கு முன்,

மரகத மயில் மிசை வரு முருகனும் என வாழ்க்கைக்கு ஓர்
அன்பும் தருவாயே
... பச்சை மயிலின் மேல் வருகின்ற முருகனே
என்று கூறி வாழ்வதற்கு வேண்டிய ஒப்பற்ற ஓர் அன்பைத் தருவாயாக.

அரு வரை தொளை பட அலை கடல் சுவறிட ஆலிப்புடன்
சென்ற அசுரேசர்
... அரிய மலையாகிய கிரெளஞ்சம் தொளைபட்டு
அழிய, அலை வீசும் கடல் வற்றிப் போக, ஆரவாரத்துடன் போருக்குச்
சென்ற அசுரர்கள்

அனைவரும் மடி உற அமர் பொருத அழகுடன் ஆண்மைத்
தனம் கொண்டு எழும் வேலா
... எல்லோரும் மடிந்து அழிய சண்டை
செய்து, அழகுடன் வீர பராக்கிரமம் விளங்க எழுந்த வேலாயுதனே,

இரு வினை அகலிட எழில் உமை இடம் உடை ஈசர்க்கு இடும்
செம் தமிழ் வாயா
... (அடியார்களுடைய) இரு வினைகளும் நீங்கும்படி,
அழகிய உமா தேவியை தமது இடது பாகத்தில் கொண்டுள்ளவரான
சிவ பெருமானுக்கு (திருநெறித் தமிழ் என்னும் தேவாரத் தமிழைத்
திருஞான சம்பந்தராக வந்து) புனைந்த திருவாயனே,

இயல் பல கலை கொடு இசை மொழிபவரினும் ஏழைக்கு
இரங்கும் பெருமாளே.
... இயற்றமிழ் முதலான பல கலைகளுடன்
இசைகளைப் பாடுபவர்களைக் காட்டிலும் ஏழையாகிய அடியேனுக்கு
அதிக இரக்கம் காட்டும் பெருமாளே.


* முதல் வரியிலிருந்து பிரமனும் என்ற சொல் அன்வயப்படுத்தி உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.618  pg 3.619 
 WIKI_urai Song number: 1262 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1263 - biramanum virakodu (common)

biramanum virakodu piNivinai yidarkodu
     pENik karamkoN ...... dirukAlum

peRanimir kudilena vuRavuyir pukamathi
     pEthith thaLantham ...... puviyUdE

varavida varumuda leriyidai pukutharu
     vAthaith tharangam ...... piRavAmun

marakatha mayilmisai varumuru kanumena
     vAzhkkaik koranpun ...... tharuvAyE

aruvarai thoLaipada alaikadal suvaRida
     Alip pudansen ...... RasurEsar

anaivaru madivuRa amarporu thazhakuda
     nANmaith thanamkoN ...... dezhumvElA

iruvinai yakalida ezhilumai yidamudai
     yeesark kidumchen ...... thamizhvAyA

iyalpala kalaikodu isaimozhi pavarinum
     Ezhaik kirangum ...... perumALE.

......... Meaning .........

virakodu piNivinai idar kodu pENik karam koNdu iru kAlum peRa: Carrying the misery caused cleverly by the past deeds, two hands and two legs willingly unite to form

nimir kudil ena uRa uyir puka mathi pEthiththu aLanthu am: this lifted-up cottage of a body into which life is infused along with intellect commensurate with that body;

puvi UdE*biramanum vara vida varum udal eri idai puku tharu vAthaith tharangam piRavA mun: the body that is dispatched to this earth by Lord BrahmA is (eventually) to be consigned to flames; before that misery attacks like a wave,

marakatha mayil misai varu murukanum ena vAzhkkaikku Or anpum tharuvAyE: kindly grant me that unique love enabling me to lead a life chanting "Oh Lord MurugA who mounts the emerald-green peacock!"

aru varai thoLai pada alai kadal suvaRida Alippudan senRa asurEsar: The rare mountain, Krouncha, was pierced; the wavy sea became dehydrated; and the armies of demons who marched to the battlefield with tumult

anaivarum madi uRa amar porutha azhakudan ANmaith thanam koNdu ezhum vElA: were all killed in the war which You fought with Your spear rising elegantly displaying beauty and valour, Oh Lord!

iru vinai akalida ezhil umai idam udai eesarkku idum sem thamizh vAyA: Dedicated to Lord SivA, on whose left side UmAdEvi is concorporate, several hymns (ThEvAram) in Tamil emanated from Your hallowed mouth (when You came as ThirugnAna Sambandhar) for the eradication of both deeds of Your devotees, Oh Lord!

iyal pala kalai kodu isai mozhipavarinum Ezhaikku irangum perumALE.: Your compassion for me is greater than that shown to the musical experts who compose songs artistically using chaste and literary Tamil, Oh Great One!


* The word 'biramanum' from the first line is transposed here for proper meaning.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1263 biramanum virakodu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]