திருப்புகழ் 1247 தவநெறி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1247 thavaneRi  (common)
Thiruppugazh - 1247 thavaneRi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனதன தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

தவநெறி தவறிய குருடுகள் தலைபறி கதறிய ...... பரபாதத்

தருமிகள் கருமிகள் வெகுவித சமயிக ளவரொடு ...... சருவாநின்

றவனிவ னுவனுட னவளிவ ளுவளது இதுவுது ...... வெனுமாறற்

றருவுரு வொழிதரு வுருவுடை யதுபதி தமியனு ...... முணர்வேனோ

குவலய முழுவதும் மதிர்பட வடகுவ டிடிபட ...... வுரகேசன்

கொடுமுடி பலநெரி தரநெடு முதுகுரை கடல்புனல் ...... வறிதாகத்

துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெடநிசி ...... சரர்சேனை

துகளெழ நடநவில் மரகத துரகதம் வரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தவநெறி தவறிய குருடுகள் ... தவவழியை விட்டு விலகின
குருடர்கள்,

தலைபறி கதறிய பரபாதத் தருமிகள் ... தலைமயிரைப் பறித்து,
தமது கொள்கைகளை உரக்க வலியுறுத்தும் மற்றச் சமய (சமண)
அறநெறியாளர்கள்,

கருமிகள் வெகுவித சமயிகள் ... தீய வினையாளர்கள், பலவிதமான
சமய நெறிகளை அனுஷ்டிப்பவர்கள்,

அவரொடு சருவாநின்று ... ஆகிய இவர்களுடன் யான் பலகாலம்
போராடி நின்றேன்.

அவன் இவன்உவன் உடன் அவள் இவள் உவள் ... அவன் -
இவன் - உவன் என்றும், அவள் - இவள் - உவள் என்றும்,

அது இது உது எனுமாறற்று ... அது - இது - உது என்றும்
குறித்துக்காட்ட இல்லாத வகையில் இருக்கும்,

அரு உரு ஒழிதரு உருவுடை ... உருவம் இன்மை - உருவம்
உடைமை இரண்டும் நீங்கிய தன்மையை உடைய

அதுபதி தமியனும் உணர்வேனோ ... பொருளே கடவுள் என்ற
உண்மையை அடியேனும் உணர்ந்து கொள்வேனோ?

குவலய முழுவதும் மதிர்பட வடகுவடு இடிபட ... உலகம்
முழுவதும் அதிர்ச்சி கொள்ள, வடக்கில் உள்ள மேருமலை பொடிபட,

உரகேசன் கொடுமுடி பலநெரிதர ... சர்ப்பங்களின் தலைவன்
ஆதிசேஷனின் வளைந்த பணாமுடிகளில் பலவும் நெரிபட,

நெடு முதுகுரை கடல்புனல் வறிதாக ... நீண்டதும், பழையதும்,
ஒலிப்பதுமான கடலில் நீர் வற்றிப் போக,

துவல்கொடு முறையிடு சுரர்பதி துயரது கெட ... அர்ச்சனைப்
பூக்களுடன் பூஜித்து விண்ணப்பிக்கும் தேவர்களின் தலைவன்
இந்திரனின் துயரங்கள் நீங்க,

நிசி சரர்சேனை துகளெழ ... அசுரர்களின் சேனை அழிபட்டுப்
பொடி எழ,

நடநவில் மரகத துரகதம் வரவல பெருமாளே. ... நடனம் செய்யும்
மரகதப் பச்சைக் குதிரையாம் மயில் மீது ஏறி (போர்க்களத்துக்கு)
வரவல்ல பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.586  pg 3.587  pg 3.588  pg 3.589 
 WIKI_urai Song number: 1246 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1247 - thavaneRi (common)

thavaneRi thavaRiya kurudukaL thalaipaRi kathaRiya ...... parapAthath

tharumikaL karumikaL vekuvitha samayika Lavarodu ...... saruvAnin

Ravaniva nuvanuda navaLiva LuvaLathu ithuvuthu ...... venumARaR

Raruvuru vozhitharu vuruvudai yathupathi thamiyanu ...... muNarvEnO

kuvalaya muzhuvathum mathirpada vadakuva didipada ...... vurakEsan

kodumudi palaneri tharanedu muthukurai kadalpunal ...... vaRithAkath

thuvalkodu muRaiyidu surarpathi thuyarathu kedanisi ...... sararsEnai

thukaLezha nadanavil marakatha thurakatham varavala ...... perumALE.

......... Meaning .........

thavaneRi thavaRiya kurudukaL: The blind people who departed from the righteous path;

thalaipaRi kathaRiya parapAthath tharumikaL: the proponents of other religions who boisterously thrust their tenets by plucking the hair of others (like the ChamaNas);

karumikaL vekuvitha samayikaL: the evil-doers and various religious zealots -

avarodu saruvAninRu: I have been locking horns with all these people.

avan ivanuvan udan avaL ivaL uvaL athu ithu uthu enumARaRRu: It is something that cannot be denoted by any masculine, feminine or neutral pronouns, nor can it be described as someone or something far away, near or anywhere;

aru uru ozhitharu uruvudai: It is neither formless nor of any specific form;

athupathi thamiyanum uNarvEnO: It is what is called God; will I ever realise this truth?

kuvalaya muzhuvathum mathirpada vadakuvadu idipada: The entire earth was shaking and the Mount MEru in the North was shattered;

urakEsan kodumudi palanerithara: many of the thousand curved hoods of AdhisEshan, the great serpent, were crushed;

nedu muthukurai kadalpunal vaRithAka: water in the long, old roaring oceans dried up;

thuvalkodu muRaiyidu surarpathi thuyarathu keda: the miseries of IndrA, the Leader of the Celestials, who worshipped You ardently by offering flowers, were removed;

nisi sararsEnai thukaLezha: and dust arose from the destroyed armies of the demons;

nadanavil marakatha thurakatham varavala perumALE.: when You mounted the dancing, horse-like peacock of emerald-green hue and came (to the battlefield), Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1247 thavaneRi - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]