திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1246 தலைவலய போகம் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1246 thalaivalayabhOgam (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தானனம் தனதனன தானனம் தனதனன தானனம் ...... தனதான ......... பாடல் ......... தலைவலய போகமுஞ் சலனமிகு மோகமுந் தவறுதரு காமமுங் ...... கனல்போலுந் தணிவரிய கோபமுந் துணிவரிய லோபமுஞ் சமயவெகு ரூபமும் ...... பிறிதேதும் அலமலமெ னாஎழுந் தவர்களநு பூதிகொண் டறியுமொரு காரணந் ...... தனைநாடா ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின் றபரிமித மாய்விளம் ...... புவதோதான் கலகஇரு பாணமுந் திலகவொரு சாபமுங் களபமொழி யாதகொங் ...... கையுமாகிக் கவருமவ தாரமுங் கொடியபரி தாபமுங் கருதியிது வேளையென் ...... றுகிராத குலதிலக மானுடன் கலவிபுரி வாய்பொருங் குலிசகர வாசவன் ...... திருநாடு குடிபுகநி சாசரன் பொடிபடம கீதரன் குலையநெடு வேல்விடும் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தலைவலய போகமும் ... மேலான எல்லையைக் கண்ட இன்ப சுகங்களும், சலனமிகு மோகமும் ... மனச்சலனம் மிக்க ஆசைகளும், தவறுதரு காமமும் ... பிழையான நெறியில் செல்லும்படி தூண்டும் காம இச்சையும், கனல்போலுந் தணிவரிய கோபமும் ... தீப்போல அடங்குதற்கு அரிதான கோபமும், துணிவரிய லோபமும் ... துணிந்து ஒரு நல்ல செய்கையைச் செய்ய விடாத ஈயாமைக்குணமும், சமயவெகு ரூபமும் ... சமயக் கோட்பாடுகளால் புனையும் பல வேஷங்களும், பிறிதேதும் ... மற்ற எந்த வெளிப்பாடும், அலம் அலம் எனா எழுந்தவர்கள் ... போதும் போதும் என்று தள்ளிய ஞான உணர்ச்சி உள்ளவர்கள் அநுபூதிகொண்டறியுமொரு காரணந்தனைநாடா ... தங்கள் அநுபவம் கொண்டு அறிகின்ற ஒரு மூலப்பொருளை விரும்பி உணராமல், ததிமதபு ராணமுஞ் சுருதிகளு மாகிநின்று ... நிரம்ப மதக்கொள்கைகளையே கூறும் புராணங்களையும், வேத மொழிகளையும் எடுத்துக்கொண்டு அபரிமிதமாய் விளம்புவதோதான் ... அளவிலாத வகையில் வெறும் பேச்சு பேசுவதால் என்ன பயன்? கலகஇரு பாணமும் ... காமப் போரை விளைக்கும் இரு அம்புகளான கண்களும், திலகவொரு சாபமும் ... பொட்டு வைத்த, ஒப்பற்ற வில்லைப் போன்ற, அழகிய நெற்றியும், களபம் ஒழியாதகொங்கையுமாகி ... சந்தனக் கலவை நீங்காத மார்புமாகி, கவரும் அவதாரமும் ... உள்ளத்தைக் கவருமாறு உலகில் அவதரித்த தோற்றத்தையும், கொடியபரிதாபமும் ... (தினைப்புனம் காக்கும்) மிக்க பரிதாபமான தொழிலையும் கருதியிது வேளையென்று ... கருத்திலே வைத்து, இந்த வள்ளியை ஆட்கொள்ளும் வேளை வந்ததென, கிராத குலதிலக மானுடன் கலவிபுரிவாய் ... வேடர் குலத்தின் சிறந்த மான் போன்ற வள்ளியுடன் கலந்தாய். பொருங் குலிச கர வாசவன் திருநாடு குடிபுக ... போர் செய்ய வல்ல வஜ்ராயுதத்தைக் கரத்திலே கொண்ட இந்திரன் தன் பொன்னுலகமாம் தேவர் நாட்டுக்குக் குடியேற, நிசாசரன் பொடிபட ... அசுரன் சூரன் தூள்பட்டுப் போக, மகீதரன் குலைய ... இந்தப் பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் நடுநடுங்க, நெடு வேல்விடும் பெருமாளே. ... நீண்ட வேலைச் செலுத்திய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.586 pg 3.587 WIKI_urai Song number: 1245 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1246 - thalaivalaya bhOgam (common) thalai valaya bOgamunj chalanamigu mOhamun thavaRu tharu kAmamung ...... kanal pOlun thaNi ariya kOpamun thuNi ariya lObamun samaya vegu rUpamum ...... piRidhEdhum alamalamenA ezhundhavargaL anubUthi koNd aRiyum oru kAraNan ...... thanai nAdA thadhi madha purANamun surudhigaLum Agi nindr aparimithamAy viLam ...... buvadhOthAn kalaga irubANamun thilaka oru sApamung kaLabam ozhiyAdha kon ...... gaiyumAgik kavarum avathAramung kodiya parithApamung karudhi idhu vELaiyendr ...... ukirAdha kulathilaka mAnudan kalavi purivAy porung kulisakara vAsavan ...... thirunAdu kudipuga nisAcharan podipada maheedharan kulaiya nedu vElvidum ...... perumALE. ......... Meaning ......... thalai valaya bOgamunj: Pleasures of the highest quality, chalanamigu mOhamun: desires accompanied by extreme agitation, thavaRu tharu kAmamung: lust leading to unrighteous ways, kanal pOlun thaNi ariya kOpamun: uncontrollable anger like the fire, thuNi ariya lObamunj: stinginess that inhibits any spontaneous and righteous action; samaya vegu rUpamum: many false fronts put on due to religious fanaticism; piRidhEdhum: and all other similar displays alamalamenA ezhundhavargaL: are given up by the seekers of True Knowledge, saying "enough is enough". anubUthi koNdaRiyum oru: Those enlightened ones have understood the fundamental principle through self-realisation. kAraNan thanai nAdA: Not seeking the causal principle, thadhi madha purANamun surudhigaLum Agi nindru: resorting to legends and scriptures that emphasise the religious aspects aparimithamAy viLam buvadhOthAn: and indulgence in excessive talking will be of no avail. kalaga irubANamun: Her eyes are like two arrows waging a war of love; thilaka oru sApamung: Her forehead is like a bow with a unique dot of vermilion; kaLabam ozhiyAdha kon gaiyumAgi: Her bosoms are fresh with the undried sandalwood paste; kavarum avathAramung kodiya parithApamung karudhi: Keeping in mind Her attractive figure on this earth and pitying Her for Her menial work (of guarding the millet field), idhu vELaiyendru: You waited for an opportune moment to kirAdha kulathilaka mAnudan kalavi purivAy: woo VaLLi, the deer-like and distinguished damsel of the hunters and unite with Her in wedlock. porung kulisakara vAsavan thirunAdu kudipuga: Enabling IndrA, who holds in his hand the battling weapon VajrAyutham, to resettle in the golden land of the celestials, nisAcharan podipada: destroying the demon, SUran, into pieces, and maheedharan kulaiya: sending AdhisEshan, the serpent holding the earth on his hood, into a trembling in panic, nedu vElvidum perumALE.: You threw the long spear, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |