திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1242 சீறிட்டு உலாவு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1242 seeRittuulAvu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானத்த தான தந்த தானத்த தான தந்த தானத்த தான தந்த ...... தனதான ......... பாடல் ......... சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு சேவித்து மாசை கொண்டு ...... முழல்வேனைச் சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு சீரற்று வாழு மின்பம் ...... நலியாதே ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று மாருக்கு மேவி ளம்ப ...... அறியாதே ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம் ஆவிக்கு ளேது லங்கி ...... அருளாதோ மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம் வாய்விட்டு மாதி ரங்கள் ...... பிளவாக வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும் வான்முட்ட வீறு செம்பொன் ...... வரையோடு கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த கோதற்ற வேடர் தங்கள் ...... புனம்வாழுங் கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு கூடிக்கு லாவு மண்டர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சீறிட்டு உலாவு கண்கள் மாதர்க்கு நாள் மருண்டு சேவித்தும் ஆசைகொண்டும் உழல்வேனை ... கோபத்துடன் உலவுகின்ற கண்களை உடைய விலைமாதர்களுக்கு நாள்தோறும் மருட்சி உற்று, அவர்களை வணங்கியும், அவர்கள் மீது காம ஆசை கொண்டும் திரிகின்ற என்னை சீர் இட்டமாக நின்ற காசைக் கொடாத பின்பு சீர் அற்று வாழும் இன்பம் நலியாதே ... சீராகவும் மிக விருப்பத்துடனும் முதலில் கொடுத்த பொருளை மீண்டும் கொடுக்காத பின்னர், அந்தச் சீரும் சிறப்பும் அழிந்து வாழச் செய்யும் சிற்றின்பத்தில் நான் ஈடுபட்டு வறுமையில் வருந்தாமல், ஆறு எட்டுமாய் விரிந்தும் ஆறு எட்டுமாகி நின்றும் ஆருக்குமே விளம்ப அறியாதே ... நாற்பத்து எட்டாக விரிந்து நாற்பத்து எட்டு கூடச் சேர்ந்து தொண்ணூற்றாறு* தத்துவங்களாக விளங்கி நின்று யாராலும் சொல்லுதற்கு முடியாத வகையில், ஆகத்து உ(ள்)ளே மகிழ்ந்த ஜோதி ப்ரகாச இன்பம் ஆவிக்கு உ(ள்)ளே துலங்கி அருளாதோ ... உடலிடத்தே பூரித்த ஜோதி ஒளி இன்பம் என் ஆவிக்குள்ளே உயிருக்கு உயிராய் விளங்கி எனக்கு அருள் பாலிக்காதோ? மாறிட்டு வான் நடுங்க மேலிட்டு மேல கண்டம் வாய் விட்டு மாதிரங்கள் பிளவாக ... பகைமை பூண்டு தேவர்கள் நடுங்கும்படி ஆகாயத்தில் கிளம்பி, மேலே உள்ள பொன்னுலகம் வாய்விட்டு ஓலமிட, திசைகள் பிளவுபடும்படி, வாள் தொட்டு நேர் நடந்த சூர் வஜ்ர மார்பு நெஞ்சும் வான் முட்ட ... வாள் ஏந்தி நேரே எதிர்த்துச் சென்ற சூரனுடைய வலிய மார்பும் நெஞ்சமும் வான் முகடு வரை சிதற, வீறு செம் பொன் வரையோடு கூறு இட்ட வேல் அபங்க வீரர்க்கு வீர கந்த ... விளங்குகின்ற பொன் மலையான மேரு, கிரெளஞ்ச கிரியையும் கூறு செய்த வேலாயுதனே, குறைவு இல்லாதவனே, வீரர்களுக்கும் வீரனே, கந்தனே, கோது அற்ற வேடர் தங்கள் புனம் வாழும் கோலப் பெண் வாகு கண்டு ... குற்றமில்லாத வேடர்களின் தினைப் புனத்தில் வாழ்ந்திருந்த அழகிய வள்ளியின் அழகைப் பார்த்து மால் உற்ற வேளை கொண்டு கூடிக் குலாவும் அண்டர் பெருமாளே. ... ஆசை கொண்டு, தக்க சமயம் அறிந்து, அவளோடு கூடிக் குலாவிய, தேவர்களின் பெருமாளே. |
* 96 தத்துவங்கள் பின்வருமாறு: 36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி. ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.578 pg 3.579 pg 3.580 pg 3.581 WIKI_urai Song number: 1241 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1242 - seeRittu ulAvu (common) seeRittu lAvu kaNkaL mAtharkku nALma ruNdu sEviththu mAsai koNdu ...... muzhalvEnaic seeritta mAka ninRa kAsaikko dAtha pinpu seeratRu vAzhu minpam ...... naliyAthE ARettu mAyvi rinthu mARettu mAki ninRu mArukku mEvi Lampa ...... aRiyAthE Akaththu LEma kizhntha jOthipra kAsa inpam Avikku LEthu langi ...... aruLAthO mARittu vAna dunga mElittu mEla kaNdam vAyvittu mAthi rangaL ...... piLavAka vALthottu nErna dantha Varvajra mAarpu nenjum vAnmutta veeRu sempon ...... varaiyOdu kURitta vEla panga veerarkku veera kantha kOthatRa vEdar thangaL ...... punamvAzhum kOlappeN vAku kaNdu mAlutRu vELai koNdu kUdikku lAvu maNdar ...... perumALE. ......... Meaning ......... seeRittu ulAvu kaNkaL mAtharkku nAL maruNdu sEviththum AsaikoNdum uzhalvEnai: Every day, I used to be intimidated by those whores who rolled their eyes in anger; I roamed about prostrating at their feet, being passionately involved with them; seer ittamAka ninRa kAsaik kodAtha pinpu seer atRu vAzhum inpam naliyAthE: I used to grandly shower gifts on them with pleasure, making sure that those were never repeated; that grandeur deteriorated due to my excessive indulgence in carnal pleasure; lest I suffer any more indigence, ARu ettumAy virinthum ARu ettumAki ninRum ArukkumE viLampa aRiyAthE: the One that cannot be described by any one and permeates in forty-eight tenets with additional forty-eight tenets (in all 96 tenets*) Akaththu u(L)LE makizhntha jOthi prakAsa inpam Avikku u(L)LE thulangi aruLAthO: and which grows within the body as a bliss of effulgence, will It not sustain me as the life of my life and bless me? mARittu vAn nadunga mElittu mEla kaNdam vAy vittu mAthirangaL piLavAka: He developed an animosity against the DEvAs, soared high in the sky, making the celestial world shriek in pain and tore off all the cardinal directions; vAL thottu nEr nadantha cUr vajra mArpu nenjum vAn mutta: he was the demon SUran who drew his sword and fought aggressively; his strong chest and heart were scattered right up to the top of the sky; veeRu sem pon varaiyOdu kURu itta vEl apanga veerarkku veera kantha: and the famous mounts of MEru and Krouncha were shattered by Your spear, Oh Lord! You do not have any blemish, and You are the warrior among all warriors, Oh KanthA! kOthu atRa vEdar thangaL punam vAzhum kOlap peN vAku kaNdu mAl utRa: You were enchanted by the beauty of VaLLi, the damsel of the innocent hunters, who guarded the crop in the millet field; vELai koNdu kUdik kulAvum aNdar perumALE.: biding Your time for an opportune moment, You embraced her lovingly, Oh Lord! You are the Lord of the celestials, Oh Great One! |
* The 96 thathvAs (tenets) are as follows: 36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5. 5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos. 35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |