திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1227 கட்டக் கணப்பறை (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1227 kattakkaNappaRai (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தத் தனத்ததன தத்தத் தனத்ததன தத்தத் தனத்த ...... தனதான ......... பாடல் ......... கட்டக் கணப்பறைகள் கொட்டக் குலத்திளைஞர் கட்டிப் புறத்தி ...... லணைமீதே கச்சுக் கிழித்ததுணி சுற்றிக் கிடத்தியெரி கத்திக் கொளுத்தி ...... யனைவோரும் சுட்டுக் குளித்துமனை புக்கிட் டிருப்பரிது சுத்தப் பொயொப்ப ...... துயிர்வாழ்வு துக்கப் பிறப்பகல மிக்கச் சிவத்ததொரு சொர்க்கப் பதத்தை ...... யருள்வாயே எட்டுக் குலச்சயில முட்டத் தொளைத்தமரர் எய்ப்புத் தணித்த ...... கதிர்வேலா எத்திக் குறத்தியிரு முத்தத் தனக்கிரியை யெற்பொற் புயத்தி ...... லணைவோனே வட்டக் கடப்பமலர் மட்டுற்ற செச்சைமலர் வைத்துப் பணைத்த ...... மணிமார்பா வட்டத் திரைக்கடலில் மட்டித் தெதிர்த்தவரை வெட்டித் துணித்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கட்டக் கணப் பறைகள் கொட்டக் குலத்து இளைஞர் கட்டிப் புறத்தில் அணை மீதே ... துயரத்தைக் குறிக்கும் தோல் பறை வகைகள் கொட்டப்பட்டு ஒலிக்க, (இறந்தவருடைய) சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் வாசலில் பாடையைக் கட்டி விறகுப் படுக்கையின் மேல் கச்சுக் கிழித்த துணி சுற்றிக் கிடத்தி எரி கத்திக் கொளுத்தி அனைவோரும் சுட்டுக் குளித்து மனை புக்கிட்டு இருப்பர் ... கிழிக்கப்பட்ட கந்தல் துணி கொண்டு சுற்றி, படுக்க வைத்து, நெருப்பு கொழுந்துவிட்டு எரியும்படி தீ இட்டு, சுடுகாட்டுக்கு வந்த அனைவரும் உடலைச் சுட்ட பிறகு நீராடி தத்தம் வீட்டுக்குப் போய் இருப்பார்கள். இது சுத்தப் பொய் ஒப்பது உயிர் வாழ்வு ... இவ்வாறு முற்றிலும் பொய்யான இந்த வாழ்க்கை நிலை இல்லாதது. துக்கப் பிறப்பு அகல மிக்கச் சிவத்தது ஒரு சொர்க்கப் பதத்தை அருள்வாயே ... துக்கத்துக்குக் காரணமான இந்தப் பிறவிச் சுழல் நீங்க, மிகவும் சிவந்ததானவையும் ஒப்பற்ற பேரின்பத்துக்கு இடமானவையுமான உனது திருவடிகளை எனக்குத் தந்தருள வேண்டும். எட்டுக் குலசயிலம் முட்டத் தொளைத்து அமரர் எய்ப்புத் தணித்த கதிர் வேலா ... எட்டுத் திக்குகளிலும் உள்ள மலைகளில் இருந்த அசுரர்களை அடியோடு கலக்கி, தேவர்களின் இளைப்பை நீக்கின ஒளி வீசும் வேலனே. எத்திக் குறத்தி இரு முத்தத் தனக் கிரியை எல் பொன் புயத்தில் அணைவோனே ... ஏமாற்றி, குறமகள் வள்ளியின் முத்துமாலை அணிந்த இரண்டு மலை போன்ற மார்பகங்களை ஒளி பொருந்திய அழகிய திருப் புயங்களில் தழுவுபவனே, வட்டக் கடப்ப மலர் மட்டு உற்ற செச்சை மலர் வைத்துப் பணைத்த மணி மார்பா ... வட்டமான கடப்ப மலர் மாலையையும், தேன் சொரியும் வெட்சி மலர் மாலையையும் இணைத்து அணிந்து பெருமையுறும் அழகிய மார்பனே, வட்டத் திரைக் கடலில் மட்டித்து எதிர்த்தவரை வெட்டித் துணித்த பெருமாளே. ... வட்ட வடிவமானதும் அலைகளை வீசுவதுமான கடலில் எதிர்த்து வந்த அசுரர்களை முறியடித்து, (அவர்களை) வெட்டிப் பிளந்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.548 pg 3.549 pg 3.550 pg 3.551 WIKI_urai Song number: 1226 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1227 - kattak kaNappaRaikaL (Common) kattak kaNappaRaikaL kottak kulaththiLainjar kattip puRaththi ...... laNaimeethE kacchuk kizhiththathuNi sutRik kidaththiyeri kaththik koLuththi ...... yanaivOrum suttuk kuLiththumanai pukkit tirupparithu suththap poyoppa ...... thuyirvAzhvu thukkap piRappakala mikkac chivaththathoru sorkkap pathaththai ...... yaruLvAyE ettuk kulacchayila muttath thoLaiththamarar eypputh thaNiththa ...... kathirvElA eththik kuRaththiyiru muththath thanakkiriyai yeRpoR puyaththi ...... laNaivOnE vattak kadappamalar mattut Rasecchaimalar vaiththup paNaiththa ...... maNimArpA vattath thiraikkadalil mattith thethirththavarai vettith thuNiththa ...... perumALE. ......... Meaning ......... kattak kaNap paRaikaL kottak kulaththu iLainjar kattip puRaththil aNai meethE: As the leather-bound drums are beaten indicating mourning, young men related to the deceased will be engaged in preparing the bier with wooden logs in front of the house; kacchuk kizhiththa thuNi sutRik kidaththi eri kaththik koLuththi anaivOrum suttuk kuLiththu manai pukkittu iruppar: using torn rags to tie the body to the bier, they will lay down the corpse and set fire to it with leaping flames; and all those people assembled at the cremation ground, will take a dip in the river after consigning the body to fire and go to their respective homes to rest. ithu suththap poy oppathu uyir vAzhvu: This kind of life is a total myth, lacking stability. thukkap piRappu akala mikkac chivaththathu oru sorkkap pathaththai aruLvAyE: In order that this cycle of birth, that is the cause for all miseries, is ended, kindly grant me Your reddish and hallowed feet that can confer eternal bliss! ettuk kulasayilam muttath thoLaiththu amarar eypputh thaNiththa kathir vElA: You shook up all the demons in the mountains in the eight directions by wielding the bright spear that removed the weakness of the celestials, Oh Lord! eththik kuRaththi iru muththath thanak kiriyai el pon puyaththil aNaivOnE: By coaxing and cajoling VaLLi, the damsel of the KuRavAs, You hugged her twin mountain-like bosom wearing pearl-necklace with Your bright and hallowed shoulders, Oh Lord! vattak kadappa malar mattu utRa secchai malar vaiththup paNaiththa maNi mArpA: A combination of round garlands of kadappa and vetchi flowers, oozing honey, adorn Your prominent chest, Oh Lord! vattath thiraik kadalil mattiththu ethirththavarai vettith thuNiththa perumALE.: In the circular and wavy sea, the demons came to fight aggressively, and You defeated them by splitting their bodies apart, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |