திருப்புகழ் 1219 இருநோய் மலத்தை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1219 irunOymalaththai  (common)
Thiruppugazh - 1219 irunOymalaththai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனா தனத்ததன தனனா தனத்ததன
     தனனா தனத்ததன ...... தனதான

......... பாடல் .........

இருநோய்ம லத்தைசிவ வொளியால்மி ரட்டியெனை
     யினிதாவ ழைத்தெனது ...... முடிமேலே

இணைதாள ளித்துனது மயில்மேலி ருத்தியொளி
     ரியல்வேல ளித்துமகி ...... ழிருவோரும்

ஒருவாகெ னக்கயிலை யிறையோன ளித்தருளு
     மொளிர்வேத கற்பகந ...... லிளையோனே

ஒளிர்மாம றைத்தொகுதி சுரர்பார்து தித்தருள
     உபதேசி கப்பதமு ...... மருள்வாயே

கருநோய றுத்தெனது மிடிதூள்ப டுத்திவிடு
     கரிமாமு கக்கடவு ...... ளடியார்கள்

கருதாவ கைக்குவர மருள்ஞான தொப்பைமகிழ்
     கருணாக டப்பமல ...... ரணிவோனே

திருமால ளித்தருளு மொருஞான பத்தினியை
     திகழ்மார்பு றத்தழுவு ...... மயில்வேலா

சிலைதூளெ ழுப்பிகவ டவுணோரை வெட்டிசுரர்
     சிறைமீள விட்டபுகழ் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இருநோய்மலத்தை ... பிறப்பு, இறப்பு என்ற இரு பெரு நோயையும்,
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலத்தையும்,

சிவ வொளியால் மிரட்டி ... சிவ தேஜஸ் கொண்டு விரட்டி ஓட்டி,

எனை யினிதா அழைத்தெனது முடிமேலே ... என்னை
இனிமையாக அழைத்து என் சிரசின் மீது

இணைதாள் அளித்து உனது மயில்மேல் இருத்தி ... உன் இரு
திருவடிகளைச் சூட்டி, உனது மயிலின் மீது என்னையும் இருக்கச் செய்து,

ஒளிர் இயல்வேல் அளித்து மகிழ் ... ஒளி வீசி விளங்கும் வேலினை
என் கையில் அளித்து நான் மகிழும்படியாக,

இருவோரும் ஒருவாகென ... நாம் இருவரும் (வேறாக இன்றி)
ஒன்று படுவோமாக என்று,

கயிலை யிறையோன் அளித்தருளும் ... கயிலாச நாதன் சிவபிரான்
பெற்று அருளிய

ஒளிர்வேத கற்பகநல் இளையோனே ... விளங்கும் வேத நாயகன்
கற்பக விநாயக மூர்த்திக்கு நல்ல தம்பியே,

ஒளிர்மாமறைத்தொகுதி சுரர்பார்துதித்தருள ... தேவர்களும்
பூவுலகில் உள்ளவர்களும் போற்றும்படியாக, பிரகாசமான சிறந்த
வேதப்பகுதிகளையும்,

உபதேசிகப்பதமும் அருள்வாயே ... உபதேச மொழிகளையும்
எனக்குக் கற்பித்து அருள்வாயாக.

கருநோய் அறுத்தெனது மிடிதூள்படுத்திவிடு ... மீண்டும்
கருவிற் சேரும் பிறவி நோயை ஒழித்து, எனது தரித்திரத்தையும்
தூளாக்கி அழித்துவிடக்கூடிய

கரிமாமுகக்கடவுள் ... யானையின் சிறந்த முகத்தை உடைய கடவுள்,

அடியார்கள் கருதா வகைக்கு வரமருள் ஞான தொப்பை ...
அடியார்கள் நினைத்திராத வகைக்கு வரங்களை அள்ளித் தந்தருளும்
ஞானமூர்த்தியாம் தொந்திக் கணபதி

மகிழ் கருணாகடப்பமலர் அணிவோனே ... உன்னிடம் மகிழ்ச்சி
அடைகின்ற கருணாமூர்த்தியே, கடப்பமலர் மாலையை அணிகின்றவனே,

திருமால் அளித்தருளும் ஒருஞான பத்தினியை ... திருமால்
பெற்றருளிய ஒப்பற்ற ஞான பத்தினியாகிய வள்ளியை,

திகழ்மார்புறத்தழுவும் அயில்வேலா ... விளங்கும் மார்பில்
பொருந்த அணைத்த கூர் வேலனே,

சிலைதூளெழுப்பி கவட அவுணோரை வெட்டி ... கிரெளஞ்ச
மலையைத் தூளாக்கி, கபட வஞ்சனை உள்ள அசுரர்களை வெட்டிச்
சாய்த்து,

சுரர் சிறைமீள விட்டபுகழ் பெருமாளே. ... தேவர்களைச்
சிறைமீட்ட பெருமையுடைய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.534  pg 3.535  pg 3.536  pg 3.537 
 WIKI_urai Song number: 1218 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1219 - irunOy malaththai (common)

irunOy malaththai siva voLiyAl miratti enai
     inidhA azhaith enadhu ...... mudimElE

iNai thAL aLith unadhu mayilmEl iruththi oLir
     iyalvEl aLiththu magizh ...... iruvOrum

oruvAgenak kayilai iRaiyOn aLith aruLum
     oLir vEdha kaRpaga nal ...... iLaiyOnE

oLir mAmaRaith thogudhi surar pArthudhith aruLa
     upadhEsikap padhamum ...... aruLvAyE

karunOy aRuth enadhu midithUL paduththividu
     kari mAmukak kadavuL ...... adiyArgaL

karudhA vagaikku varam aruLnyAna thoppai magizh
     karuNA kadappa malar ...... aNivOnE

thirumAl aLith aruLum orunyAna paththiniyai
     thigazh mArbuRath thazhuvum ...... ayil vElA

silai thULezhuppi kavad avuNorai vetti surar
     siRai meeLavitta pugazh ...... perumALE.

......... Meaning .........

irunOy malaththai: The two diseases called birth and death and the three slags known as arrogance, karma and delusion

siva voLiyAl miratti: should be driven away by the effulgent beam of SivA;

enai inidhA azhaith enadhu mudimElE: I should be invited nicely, and on my head

iNai thAL aLiththu: Your two holy feet should be placed;

unadhu mayilmEl iruththi oLir iyalvEl aLiththu magizh: I too should be seated upon Your peacock and handed Your bright and sparkling spear to my elation;

iruvOrum oruvAgena: and then we both would become one single entity (not being separated).

kayilai iRaiyOn aLith aruLum: SivA, the Lord of KailAsh, delivered graciously

oLir vEdha kaRpaga nal iLaiyOnE: the head of the distinguished VEdAs, namely, KaRpaga (Wish-yielding) VinAyagA; and You are His younger brother!

oLir mAmaRaith thogudhi surar pArthudhith aruLa: In order that both the celestials and terrestrials praise with reverence, portions of the great scriptures and

upadhEsikap padhamum aruLvAyE: the salient instructive words may kindly be preached to me.

karunOy aRuth enadhu midithUL paduththividu: He slays the disease of birth through reentry into a womb and shatters my indigence;

kari mAmukak kadavuL: He is the elephant-faced God;

adiyArgaL karudhA vagaikku varam aruLnyAna thoppai: He is the wise Lord, with a pot-belly, capable of granting boons to His devotees far beyond their expectation;

magizh karuNA: and that Ganapathi is delighted with You, Oh compassionate one!

kadappa malar aNivOnE: You wear the garland made of kadappa flowers.

thirumAl aLith aruLum orunyAna paththiniyai: She is VaLLi, the matchless and the wisest daughter of Vishnu,

thigazh mArbuRath thazhuvum ayil vElA: and You embrace her with Your hallowed chest, Oh Lord with a sharp spear!

silai thULezhuppi kavad avuNorai vetti: You smashed Mount Krouncha into powder; You slashed the heinous demons;

surar siRai meeLavitta pugazh perumALE.: and You have the great honour of releasing all the celestials from SUran's prison, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1219 irunOy malaththai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]