திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1209 அலமலமிப் புலால் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1209 alamalamippulAl (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தத்தனாத் தனதன தத்தனாத் தனதன தத்தனாத் ...... தனதான ......... பாடல் ......... அலமல மிப்புலாற் புலையுடல் கட்டனேற் கறுமுக நித்தர்போற் ...... றியநாதா அறிவிலி யிட்டுணாப் பொறியிலி சித்தமாய்த் தணிதரு முத்திவீட் ...... டணுகாதே பலபல புத்தியாய்க் கலவியி லெய்த்திடாப் பரிவொடு தத்தைமார்க் ...... கிதமாடும் பகடிது டுக்கன்வாய்க் கறையனெ னத்தராப் படியில்ம னித்தர்தூற் ...... றிடலாமோ குலகிரி பொற்றலாய்க் குரைகடல் வற்றலாய்க் கொடியஅ ரக்கரார்ப் ...... பெழவேதக் குயவனை நெற்றியேற் றவனெதிர் குட்டினாற் குடுமியை நெட்டைபோக் ...... கியவீரா கலைதலை கெட்டபாய்ச் சமணரை நட்டகூர்க் கழுநிரை முட்டஏற் ...... றியதாளக் கவிதையும் வெற்றிவேற் கரமுடன் வற்றிடாக் கருணையு மொப்பிலாப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கட்டனேற்கு அலம் அலம் இப் புலால் புலை உடல் அறுமுக ... துன்பப் படுவதற்கென்றே பிறந்தவனாகிய எனக்கு, போதும் போதும், இந்த மாமிசப் பிண்டமாகிய இழிவான உடல், ஓ ஆறுமுக நாதனே, நித்தர் போற்றிய நாதா ... ஜீவன் முக்தர்கள் போற்றும் தலைவனே, அறிவிலி இட்டு உணாப் பொறியிலி சித்தம் மாய்த்து அணி தரு முத்தி வீட்டு அணுகாதே ... அறிவல்லாதவன் நான், ஒருவருக்கு இட்ட பின் சாப்பிட வேண்டும் என்ற அறிவு இல்லாதவன், மனதை ஒடுக்கி அழகு நிறைந்த முக்தி வீட்டைச் சேராமல், பலபல புத்தியாயக் கலவியில் எய்த்திடாப் பரிவொடு தத்தைமார்க்கு இதமாடும் பகடி துடுக்கன் ... பலப்பல வகையில் புத்தியைச் செலுத்தி, சிற்றின்பத்தில் களைத்து, காதலுடன் கிளி போன்ற பெண்களுக்கு இனிமைப் பேச்சுகளைப் பேசும் வெளி வேஷக்காரன், துடுக்கானவன், வாய்க் கறையன் எனத் தராப் படியில் மனித்தர் தூற்றிடலாமோ ... வாய் மாசு படிந்தவன் என்று பூமியில் உள்ள மனிதர்கள் என்னைக் குறை கூறிப் பழிக்க இடம் தரலாமோ? குல கிரி பொற்றலாய்க் குரை கடல் வற்றலாய்க் கொடிய அரக்கரார் ஆர்ப்பு எழ ... குலகிரிகளான ஏழு மலைகளும் கிரெளஞ்சமும் பாழ் இடமாய் அழிபட்டு, ஒலிக்கும் கடல் வற்றிப்போய், கொடுமை வாய்ந்த அரக்கர்களின் ஆரவாரம் கிளம்ப, வேதக் குயவனை நெற்றி ஏற்று அவன் எதிர் குட்டினால் குடுமியை நெட்டை போக்கிய வீரா ... வேதம் படைத்த பிரமனை, நெற்றியில் படும்படி அவனைக் குட்டிய குட்டால், அவனுடைய குடுமியையும் ஆணவத்தையும் ஒருங்கே சிதற அடித்த வீரனே, கலை தலை கெட்ட பாயச் சமணரை நட்ட கூர்க் கழு நிரை முட்ட ஏற்றிய ... கலை ஞானம் அடியோடு கெட்டுப் போன, கோரைப்பாய் உடை உடுத்தியவர்களான சமணர்களை, நடப்பட்டிருந்த கூர்மையான கழு மரங்களில் வரிசையாக, ஒருவர் மீதம் இல்லாமல், ஏற்றின (திருஞானசம்பந்தராக வந்த பெருமாளே), தாளக் கவிதையும் வெற்றி வேல் கரமுடன் வற்றிடாக் கருணையும் ஒப்பிலாப் பெருமாளே. ... தாளத்துடன் பாடும் பாடல்களும், வெற்றி வேல் ஏந்தும் திருக்கரமும், வற்றாத கருணையும் உள்ள இணை இல்லாத பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.512 pg 3.513 pg 3.514 pg 3.515 WIKI_urai Song number: 1208 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1209 - alamalamip pulAl (common) alamala mippulAR pulaiyudal kattanER kaRumuka niththarpOt ...... RiyanAthA aRivili yittuNAp poRiyili siththamAyth thaNitharu muththiveet ...... taNukAthE palapala puththiyAyk kalaviyi leyththidAp parivodu thaththaimArk ...... kithamAdum pakadithu dukkanvAyk kaRaiyane naththarAp padiyilma niththarthUt ...... RidalAmO kulakiri potRalAyk kuraikadal vatRalAyk kodiya arakkarArp ...... pezhavEthak kuyavanai netRiyEt Ravanethir kuttinAR kudumiyai nettaipOk ...... kiyaveerA kalaithalai kettapAyc camaNarai nattakUrk kazhunirai muttaEt ...... RiyathALak kavithaiyum vetRivER karamudan vatRidAk karuNaiyu moppilAp ...... perumALE. ......... Meaning ......... kattanERku alam alam ip pulAl pulai udal aRumuka: Oh Six-faced Lord ARumugA, I am fed up with this bundle of flesh, the body of mine, which is born only to suffer. niththar pOtRiya nAthA: Oh Lord, You are praised by the enlightened ones; aRivili ittu uNAp poRiyili siththam mAyththu aNi tharu muththi veettu aNukAthE: I am a stupid one without even the sense of sharing food with others before eating; I do not control my mind nor do I seek the path of liberation; palapala puththiyAyak kalaviyil eyththidAp parivodu thaththaimArkku ithamAdum pakadi thudukkan: I let my mind wander all over in many ways, indulging in carnal pleasure until exhaustion; I am an outward showman, feigning love, and uttering sweet words to parrot-like women; I am an impertinent fellow; vAyk kaRaiyan enath tharAp padiyil maniththar thUtRidalAmO: and I am a foul-mouthed person- so say the people in this world about me; should I give room to these people to ridicule me so derisively? kula kiri potRalAyk kurai kadal vatRalAyk kodiya arakkarAr Arppu ezha: The renowned seven mountains of the demons and Mount Krouncha were destroyed leaving a gaping hole; the scream of the evil demons surged roaringly; vEthak kuyavanai netRi EtRu avan ethir kuttinAl kudumiyai nettai pOkkiya veerA: and You knocked with Your knuckles on the forehead of BrahmA, the creator of the vEdAs, blowing away His tuft and arrogance together, Oh valorous One! kalai thalai ketta pAyac camaNarai natta kUrk kazhu nirai mutta EtRiya: You (coming as ThirugnAna Sambandhar) sent all the ChamaNas, without exception, whose knowledge of art was abysmal and who covered themselves with mats of reeds, to the sharp gallows installed in a row, Oh Lord! thALak kavithaiyum vetRi vEl karamudan vatRidAk karuNaiyum oppilAp perumALE.: You are the Lord of all poems sung precisely to the meter; You hold in Your hallowed hand the triumphant spear; and You have an inexhaustible quantity of compassion, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |