திருப்புகழ் 1204 அடி இல் விடாப் பிணம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1204 adiilvidAppiNam  (common)
Thiruppugazh - 1204 adiilvidAppiNam - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தாத்தன தனதன தாத்தன
     தனதன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
     தழியுமுன் வீட்டுமு ...... னுயர்பாடை

அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
     யழுகையை மாற்றுமி ...... னொதியாமுன்

எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
     யிடைகொடு போய்த்தமர் ...... சுடுநாளில்

எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
     தெனதுயிர் காத்திட ...... வரவேணும்

மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
     மதகரி கூப்பிட ...... வளையூதி

மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
     மகிபதி போற்றிடு ...... மருகோனே

படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
     பரவையி லார்ப்பெழ ...... விடும்வேலாற்

படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
     பதிகுடி யேற்றிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அடி இல் விடாப் பிணம் அடைய விடாச் சிறிது அழியு முன் ...
வீட்டின் உள்ளே விடாது கிடந்திருக்கும் பிணத்தை அங்கேயே
இருக்க விடாமல், கொஞ்சம் அழுகிப் போவதற்கு முன்னமேயே

வீட்டு முன் உயர் பாடை அழகொடு கூட்டுமின் அழையுமின்
வார்ப்பறை அழுகையை மாற்றுமி(ன்)
... வீட்டுக்கு எதிரில்
சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள். நன்கு கட்டப்பட்ட பறை
வாத்தியங்களை வரவழையுங்கள். அழுகையை நிறுத்துங்கள்.

நொதியா முன் எடுமின் யாக்கையை என இடு காட்டு எரி
இடை கொ(ண்)டு போய்த் தமர் சுடுநாளில்
... பிணம் கெட்டு
அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள். - என்று கூறி
சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார்
சுட்டெரிக்கும் அந்த நாளில்,

எயினர் குல உத்தமை உடன் மயில் மேல் கடிது எனது உயிர்
காத்திட வரவேணும்
... வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம்
உடைய, வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக்
காப்பதற்கு வரவேண்டும்.

மடு இடை போய்ப் பரு முதலையின் வாய்ப்படு மத கரி
கூப்பிட வளை ஊதி
... மடு இருந்த இடத்துக்குப் போய் பெரிய
முதலையின் வாயில் அகப்பட்டிருந்த மதயானையாகிய கஜேந்திரன்
கூப்பிட, சங்கை ஊதுபவனும்,

மழை முகில் போல் கக பதி மிசை தோற்றிய மகிபதி
போற்றிடு மருகோனே
... கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின்
அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இப்பூவுலகின்
தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருகனே,

படர் சடை ஆத்திகர் பரி உற ராட்சதர் பரவையில் ஆர்ப்பு
எழ விடும் வேலால் பட முனியா
... பரந்த சடையை உடைய,
கடவுள் உண்டென்று நம்புவோர்க்குப் பொருளாயுள்ள, சிவபெருமான்
அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு
அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி கோபித்து,

பணி தமனிய நாட்டவர் பதி குடி ஏற்றிய பெருமாளே. ...
தன்னைப் பணிந்த, பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின்
தலைவனான, இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.502  pg 3.503  pg 3.504  pg 3.505 
 WIKI_urai Song number: 1203 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1204 - adi il vidAp piNam (common)

adiyilvi dAppiNa madaiyavi dAcchiRi
     thazhiyumun veettumu ...... nuyarpAdai

azhakodu kUttumi nazhaiyumin vAarppaRai
     yazhukaiyai mAtRumi ...... nothiyAmun

edumini yAkkaiyai yenaidu kAtteri
     yidaikodu pOyththamar ...... sudunALil

eyinarku lOththamai yudanmayil mERkadi
     thenathuyiar kAththida ...... varavENum

maduvidai pOypparu muthalaiyin vAyppadu
     mathakari kUppida ...... vaLaiyUthi

mazhaimukil pORkaka pathimisai thOtRiya
     makipathi pOtRidu ...... marukOnE

padarsadai yAththikar parivuRa rAtchathar
     paravaiyi lAarppezha ...... vidumvElAR

padamuni yAppaNi thamaniya nAttavar
     pathikudi yEtRiya ...... perumALE.

......... Meaning .........

adi il vidAp piNam adaiya vidAc chiRithu azhiyu mun: The corpse is lying still inside the house; not letting it remain there, before it begins to rot,

veettu mun uyar pAdai azhakodu kUttumin azhaiyumin vArppaRai azhukaiyai mAtRumi(n): people start saying "Build a grand bier for the body in front of the house; send for drums, well bound with leather straps; stop this loud crying;

nothiyA mun edumin yAkkaiyai ena idu kAttu eri idai ko(N)du pOyth thamar sudunALil: before the corpse decays any further, take the body out"; and then the relatives lay the body on the funeral pyre in the cremation ground; on that day,

eyinar kula uththamai udan mayil mEl kadithu enathu uyir kAththida varavENum: You must come fast, mounted on the peacock, along with Your consort, VaLLi, the virtuous damsel of the hunters, to save my life!

madu idai pOyp paru muthalaiyin vAyppadu matha kari kUppida vaLai Uthi: He went all the way to the pond where the wild elephant, GajEndran, in pain from the bite of the attacking crocodile, beseeched for help and blew His conch-shell;

mazhai mukil pOl kaka pathi misai thOtRiya makipathi pOtRidu marukOnE: He, with the complexion of the rain-bearing dark cloud, came mounted on the Garudan, the King of all birds; He is the leader of the entire world; and You are the nephew of that Lord VishNu who extols You!

padar sadai Aththikar pari uRa rAtchathar paravaiyil Arppu ezha vidum vElAl pada muniyA: Lord SivA, with His dense and matted hair, who is the substance of all those believers in the existence of God, was exhilarated when You wielded, with rage, Your spear that drove the screaming demons into the sea and destroyed them!

paNi thamaniya nAttavar pathi kudi EtRiya perumALE.: When IndrA, the leader of the DEvAs in the celestial land, prostrated at Your feet, You redeemed his kingdom and re-established him, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1204 adi il vidAp piNam - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]