திருப்புகழ் 1182 பொங்கும் கொடிய  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1182 pongkumkodiya  (common)
Thiruppugazh - 1182 pongkumkodiya - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தந் தனன தாத்தன தந்தந் தனன தாத்தன
     தந்தந் தனன தாத்தன ...... தனதான

......... பாடல் .........

பொங்குங் கொடிய கூற்றனு நஞ்சும் பொதுவில் நோக்கிய
     பொங்கும் புதிய நேத்திர ...... வலைவீசிப்

பொன்கண் டிளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டுயிர்
     புண்கொண் டுருகி யாட்படு ...... மயல்தீரக்

கொங்கின் புசக கோத்திரி பங்கங் களையு மாய்க்குடி
     கொங்கின் குவளை பூக்கிற ...... கிரிசோண

குன்றங் கதிரை பூப்பர முன்துன் றமரர் போற்றிய
     குன்றம் பிறவும் வாழ்த்துவ ...... தொருநாளே

எங்கும் பகர மாய்க்கெடி விஞ்சும் பகழி வீக்கிய
     வெஞ்சண் டதனு வேட்டுவர் ...... சரணார

விந்தம் பணிய வாய்த்தரு ளந்தண் புவன நோற்பவை
     மென்குங் குமகு யாத்திரி ...... பிரியாதே

எங்குங் கலுழி யார்த்தெழ எங்குஞ் சுருதி கூப்பிட
     எங்குங் குருவி யோச்சிய ...... திருமானை

என்றென் றவச மாய்த்தொழு தென்றும் புதிய கூட்டமொ
     டென்றும் பொழுது போக்கிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பொங்கும் கொடிய கூற்றனும் நஞ்சும் பொதுவில் நோக்கிய ...
சீறி எழும் பொல்லாத யமனையும் விஷத்தையும் (தம் இரு கண்களிலும்
கொண்டு) வித்தியாசம் இன்றி யாரிடத்தும் விருப்பத்துடன் பார்க்கும்,

பொங்கும் புதிய நேத்திர வலை வீசி ... ஆசை
பொங்கும் புதுமை வாய்ந்த கண்ணாகிய வலையை எறிந்து,

பொன்கண்டு இளகு கூத்திகள் புன்கண் கலவி வேட்டு ...
பொற்காசுகளைப் பார்த்து மன நெகிழ்ச்சி கொள்ளும் நடனமாடும்
கணிகையரின் துன்பத்தைத் தரும் புணர்ச்சியை விரும்பி,

உயிர் புண் கொண்டு உருகி ஆட்படும் மயல் தீர ... உயிர்
புண்பட்டு மனம் உருகி அந்த விலைமாதர்களுக்கு ஆளாகின்ற காம
மயக்கம் ஒழிய,

கொங்கின் புசக கோத்திரி பங்கம் களையும் ஆய்க்குடி ...
கொங்கு நாட்டில் உள்ள பாம்பு மலையாகிய திருச் செங்கோட்டையும்,
(தரிசித்தோர்களின்) பாவங்களைப் போக்கும் ஆய்க்குடி என்னும்
தலத்தையும்,

கொங்கின் குவளை பூக்கிற கிரி சோண குன்றம் கதிரை ...
வாசனையுடன் தினமும் நீலோற்பல மலர் பூக்கின்ற திருத்தணிகை
மலையையும், சோணாசலம் என்ற திருவண்ணாமலையையும்,
கதிர்காமத்தையும்,

பூப் பரம் முன் துன்று அமரர் போற்றிய குன்றம் ... அழகிய
பரம் என்னும் சொல் முன்னே வருகின்றதும், தேவர்கள்
போற்றுவதுமான திருப்பரங்குன்றத்தையும்,

பிறவும் வாழ்த்துவது ஒரு நாளே ... பிற தலங்களையும் போற்றி
வாழ்த்தக்கூடிய ஒரு நாள் எனக்குக் கிடைக்குமோ?

எங்கும் பகரமாய்க் கெடி விஞ்சும் பகழி வீக்கிய வெம் சண்ட
தனு
... எவ்விடத்தும் ஒளிர்வதும், வல்லமை மேம்பட்டு விளங்கும்
அம்புகளையும், கட்டப்பட்டுள்ள கொடிய வில்லையும் கொண்ட

வேட்டுவர் சரண் ஆர விந்தம் பணிய வாய்த்து அருள் ...
வேடர்கள் (உனது) திருவடிகளை வணங்க, உனது அருள் வாய்த்த
காரணத்தால்,

அம் தண் புவன(ம்) நோற்பவை ... அழகிய குளிர்ந்த இவ்வுலகு
செய்த தவப் பயனாய் உதித்த

மென் குங்கும குயாத்திரி பிரியாதே ... மென்மையான குங்குமம்
பூசிய மார்பகங்களாகிய மலைகளை உடையவளும்,

எங்கும் கலுழி ஆர்த்து எழ எங்கும் சுருதி கூப்பிட எங்கும்
குருவி ஓச்சிய திரு மானை
... எல்லாவிடத்தும் கான்யாறு பாய்ந்து
ஒலித்து எழவும், எங்கும் வேதங்களின் ஒலி பெருகவும் (விளங்கிய
வள்ளிமலைத் தினைப் புனத்தில்) குருவிகளைக் கவண் கல்லைக் கட்டி
ஓட்டிய அழகிய மான் போன்றவளுமான வள்ளியை,

என்றென்றும் அவசமாயத் தொழுது என்றும் புதிய
கூட்டமொடு
... நீ திரு என்றும், மான் என்றும் தன் வசம் இழந்து
வணங்க, நாள்தோறும் புதிதாகச் சந்திப்பது போன்ற மகிழ்ச்சியோடு

என்றும் பொழுது போக்கிய பெருமாளே. ... தினமும்
உல்லாசமாகக் காலம் கழித்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.446  pg 3.447  pg 3.448  pg 3.449  pg 3.450  pg 3.451 
 WIKI_urai Song number: 1181 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1182 - pongkum kodiya (common)

pongum kodiya kUtRanu nanjum pothuvil nOkkiya
     pongum puthiya nEththira ...... valaiveesip

ponkaN diLaku kUththikaL punkaN kalavi vEttuyir
     puNkoN duruki yAtpadu ...... mayaltheerak

kongin pusaka kOththiri pangam kaLaiyu mAykkudi
     kongin kuvaLai pUkkiRa ...... girisONa

kundRam kathirai pUppara munthun Ramarar pOtRiya
     kundRam piRavum vAzhththuva ...... thorunALE

engum pakara mAykkedi vinjum pakazhi veekkiya
     venjaN dathanu vEttuvar ...... saraNAra

vintham paNiya vAyththaru LanthaN puvana nORpavai
     menkun gumaku yAththiri ...... piriyAthE

engung kaluzhi yArththezha engum suruthi kUppida
     engung kuruvi yOcchiya ...... thirumAnai

enRen Ravasa mAyththozhu thenRum puthiya kUttamo
     denRum pozhuthu pOkkiya ...... perumALE.

......... Meaning .........

pongum kodiya kUtRanum nanjum pothuvil nOkkiya pongkum puthiya nEththira valai veesi: Their eyes were a novel net, consisting of the fiery God of Death (Yaman) in one eye and deadly poison in the other, cast at everyone without discrimination;

ponkaNdu iLaku kUththikaL punkaN kalavi vEttu: these were the dancing-whores who simply melted at the sight of gold coins; seeking the harmful carnal pleasure with them,

uyir puN koNdu uruki Atpadum mayal theera: my life was inflicted with wounds, with my mind blown apart, rendering me their slave; to eradicate this lustful delusion,

kongin pusaka kOththiri pangam kaLaiyum Aykkudi: (I must praise) ThiruchchengkOdu, the serpent-hill in KongunAdu, Aykkudi which washes the sins of all who visit that place,

kongin kuvaLai pUkkiRa giri sONa kundRam kathirai: ThiruththaNigai, where a fragrant and fresh blue lily blossoms everyday, ThiruvaNNAmalai (known as ChONAchalam), KadhirgAmam,

pUp param mun thunRu amarar pOtRiya kundRam: ThirupparamkundRam, the beautiful mountain having the holy word "Param" in front of its name and which is worshipped by the celestials,

piRavum vAzhththuvathu oru nALE: and other places; will I be fortunate one of these days to praise such holy places?

engum pakaramAyk kedi vinjum pakazhi veekkiya vem saNda thanu vEttuvar: Those hunters carried arrows and well-built bows which stood out dazzlingly showing their sharpness and strength;

saraN Ara vintham paNiya vAyththu aruL: as they prostrated at Your lotus feet in total surrender,

am thaN puvana(m) nORpavai: and as a result of the penance performed by this beautiful and cool earth, and due to Your grace, She was born;

men kunguma kuyAththiri piriyAthE: She has hill-like bosom soaked in soft red vermilion;

engum kaluzhi Arththu ezha engum suruthi kUppida engkum kuruvi Occhiya thiru mAnai enRenRum: against the background noise of the river (KAnyARu) gushing everywhere and the resonance of the vEdic chanting, She stood there in the millet-field (of VaLLimalai) chasing away the sparrows with stones tied to a sling; She was VaLLi whom You addressed as "Lakshmi and deer" repeatedly;

avasamAyath thozhuthu enRum puthiya kUttamodu: losing Your balance, You worshipped Her every time You came to see Her in a joyous mood as though You were meeting Her for the first time;

enRum pozhuthu pOkkiya perumALE.: in this way You took pleasure in passing Your time every day, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1182 pongkum kodiya - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]