திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1181 பூசல் வந்திரு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1181 pUsalvandhiru (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன தான தந்தன தானா தானன ...... தனதான ......... பாடல் ......... பூசல் வந்திரு தோடார் காதொடு மோதி டுங்கயல் மானார் மானமில் போக மங்கையர் கோடா கோடிய ...... மனதானார் பூர குங்கும தூளா மோதப டீர சண்பக மாலா லாளித பூத ரங்களின் மீதே மூழ்கிய ...... அநுராக ஆசை யென்கிற பாரா வாரமு மேறு கின்றில னானா பேதஅ நேக தந்த்ரக்ரி யாவே தாகம ...... கலையாய ஆழி யுங்கரை காணே னூபுர பாத பங்கய மோதே னேசில னாயி னுங்குரு நாதா நீயருள் ...... புரிவாயே வாச வன்பதி பாழா காமல்நி சாச ரன்குலம் வாழா தேயடி மாள வன்கிரி கூறாய் நீறெழ ...... நெடுநேமி மாத வன்தரு வேதா வோடலை மோது தெண்கடல் கோகோ கோவென மாமு றிந்திட நீள்வே லேவிய ...... இளையோனே வீசு தென்றலும் வேள்பூ வாளியு மீறு கின்றமை யாமோ காமவி டாய்கெ டும்படி காவா யாவியை ...... யெனஏனல் மீது சென்றுற வாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால்கொடு வேடை கொண்டபி ரானே வானவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பூசல் வந்து இரு தோடு ஆர் காதொடு மோதிடும் கயல் மானார் மானம் இல் போக மங்கையர் கோடா கோடிய மனது ஆனார் ... சண்டைக்கு எழுந்தது என்று சொல்லும்படி இரண்டு தோடுகள் அணிந்த காதுகளுடன் மோதுகின்ற கயல் மீன் போன்ற கண்களை உடைய மாதர்கள் மானமே இல்லாமல் (உடலால்) போகம் கொடுக்கும் வேசிகள். கோடிக் கணக்கான மனத்தைக் கொண்டவர்கள். பூர குங்கும தூள் ஆமோத படீர சண்பக மாலால் லாளித(ம்) பூதரங்களின் மீதே மூழ்கிய அநுராக ஆசை என்கிற பாராவாரமும் ஏறுகின்றிலன் ... பச்சைக் கற்பூரம், குங்குமம் இவைகளின் பொடி, மிக்க மகிழ்ச்சி தரும் சந்தனம், சண்பகம் இவைகள் கொண்டு மோகத்தால அழகு செய்யப்பட்ட மலை போன்ற மார்பகங்களின் மேலே முழுகிய காமப் பற்று என்னும் ஆசையாகிய கடலைத் தாண்டி கரை ஏறாதவன் நான். நானா பேத அநேக தந்த்ர க்ரியா வேத ஆகம கலை ஆய ஆழியும் கரை காணேன் நூபுர பாத பங்கயம் ஓதேன் நேசிலன் ... பலவிதப்பட்ட அனேகமான சாஸ்திர மந்திரங்களைக் கூறும் வேத ஆகம கலைகளாகிய கடலின் கரையையும் காணாதவன். உனது சிலம்பணிந்த தாமரைத் திருவடிகள் ஓதிப் போற்றுகின்றேன் இல்லை. அன்பு சிறிதும் இல்லாதவன். ஆயினும் குரு நாதா நீ அருள் புரிவாயே ... இருந்த போதிலும் குரு நாதனே, நீ அருள் புரிவாயாக. வாசவன் பதி பாழாகாமல் நிசாசரன் குலம் வாழாதே அடி மாள வன் கிரி கூறாய் ... இந்திரனுடைய தலைநகர் (அமராவதி) பாழாகாதபடியும், அசுரர்கள் கூட்டம் வாழாமல் அடியோடு மாண்டு போகவும், வலிமை வாய்ந்த கிரவுஞ்ச மலை இரண்டாய் பிளவுபடவும், நீறு எழு நெடு நேமி மாதவன் தரு வேதாவோடு அலை மோதும் தெண் கடல் கோகோ கோ என மா முறிந்திட நீள் வேல் ஏவிய இளையோனே ... நீண்ட சக்ரவாள கிரி பொடிபடவும், திருமால் பெற்ற பிரமனும் அலைகள் வீசும் தெளிந்த கடலும் கோகோகோ என்று அஞ்சி அரற்றவும், (சூரனாகிய) மாமரம் முறிந்திடவும், நீண்ட வேலாயுதத்தைச் செலுத்திய இளையவனே, வீசு தென்றலும் வேள் பூ வாளியும் மீறுகின்றமை ஆமோ காம விடாய் கெடும்படி காவாய் ஆவியை என ... வீசுகின்ற தென்றல் காற்றும் மன்மத வேளின் மலர்ப் பாணங்களும் என் பொறுமைக்கு அப்பாற்பட்டு வாட்டுதல் நன்றோ? இந்தக் காம தாகம் ஒழியும்படி என்னுடைய ஆவியைக் காத்தருள்க என்று கூறிக்கொண்டு, ஏனல் மீது சென்று உறவாடா வேடுவர் பேதை கொங்கையின் மீதே மால் கொடு வேடை கொண்ட பிரானே வானவர் பெருமாளே. ... தினைப் புனம் உள்ள அந்த இடத்துக்குச் சென்று (வள்ளியுடன்) உறவாடி, வேடர்கள் மகளாகிய அவளது மார்பின் மேல் மோகம் பூண்டு விருப்பம் கொண்டவனே, தேவர்களின் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.444 pg 3.445 pg 3.446 pg 3.447 WIKI_urai Song number: 1180 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1181 - pUsal vandhiru (common) pUsal vanthiru thOdAr kAthodu mOthi dungayal mAnAr mAnamil pOka mangaiyar kOdA kOdiya ...... manathAnAr pUra kunguma thULA mOthapa deera saNpaka mAlA lALitha pUtha rangaLin meethE mUzhkiya ...... anurAka Asai yenkiRa pArA vAramu mERu kinRila nAnA pEtha a nEka thanthrakri yAvE thAkama ...... kalaiyAya Azhi yungarai kANE nUpura pAtha pangaya mOthE nEsila nAyi nunguru nAthA neeyaruL ...... purivAyE vAsa vanpathi pAzhA kAmalni sAsa rankulam vAzhA thEyadi mALa vankiri kURAy neeRezha ...... nedunEmi mAtha vantharu vEthA vOdalai mOthu theNkadal kOkO kOvena mAmu Rinthida neeLvE lEviya ...... iLaiyOnE veesu thenRalum vELpU vALiyu meeRu kinRamai yAmO kAmavi dAyke dumpadi kAvA yAviyai ...... yenaEnal meethu senRuRa vAdA vEduvar pEthai kongaiyin meethE mAlkodu vEdai koNdapi rAnE vAnavar ...... perumALE. ......... Meaning ......... pUsal vanthu iru thOdu Ar kAthodu mOthidum kayal mAnAr mAnam il pOka mangaiyar kOdA kOdiya manathu AnAr: Their kayal-fish-like eyes appear to have declared war, confronting the two ears wearing the studs; these whores are shameless in providing pleasure with their flesh; their mind is made up of millions of patterns; pUra kunguma thUL AmOtha padeera saNpaka mAlAl lALitha(m) pUtharangaLin meethE mUzhkiya anurAka Asai enkiRa pArAvAramum ERukinRilan: I am drowned in a sea of obsession for their mountain-like bosom, smeared with a passionate paste of camphor, vermillion, elating sandalwood powder and champak flower; I am yet to get on to the shore from that sea of desire; nAnA pEtha anEka thanthra kriyA vEtha Akama kalai Aya Azhiyum karai kANEn nUpura pAtha pangayam OthEn nEsilan: nor have I reached the shore of the ocean of VEdAs and Scriptures that teach a variety of ritual manthrAs; I fail to praise and worship Your hallowed lotus feet wearing the anklets; and I do not have an iota of love; Ayinum kuru nAthA nee aruL purivAyE: nonetheless, Oh Master, kindly bless me! vAsavan pathi pAzhAkAmal nisAsaran kulam vAzhAthE adi mALa van kiri kURAy: Protecting the capital (AmarAvathi) of IndrA, annihilating the entire clan of the demons, splitting the mighty mount Krouncha into two, neeRu ezhu nedu nEmi mAthavan tharu vEthAvOdu alai mOthum theN kadal kOkO kO ena mA muRinthida neeL vEl Eviya iLaiyOnE: shattering the long range of Mount ChakravALa into pieces, terrifying Brahma, Son of Lord VishNu, and the serene sea full of waves into screaming nervously, and chopping down the mango tree (in which disguise the demon SUran hid), You wielded Your long spear, Oh Young One! veesu thenRalum vEL pU vALiyum meeRukinRamai AmO kAma vidAy kedumpadi kAvAy Aviyai ena: You asked her "Is it fair that the gently-blowing southerly wind and the flowery arrows of Manmathan (God of Love) should torture me unbearably? Destroying my thirst of passion, kindly save my life" - Enal meethu senRu uRavAdA vEduvar pEthai kongaiyin meethE mAl kodu vEdai koNda pirAnE vAnavar perumALE.: with those words You went up to that field of millet to show Your intimacy with VaLLi, the damsel of the hunters, and went head over heels in love with her bosom; You are the Lord of the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |