திருப்புகழ் 1179 புவிக்குன் பாதம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1179 puvikkunpAdham  (common)
Thiruppugazh - 1179 puvikkunpAdham - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்தந் தான தனதன தனத்தந் தான தனதன
     தனத்தந் தான தனதன ...... தனதான

......... பாடல் .........

புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை
     புலக்கண் கூடு மதுதனை ...... அறியாதே

புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை
     புழுக்கண் பாவ மதுகொளல் ...... பிழையாதே

கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
     களைக்கும் பாவ சுழல்படு ...... மடிநாயேன்

கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை
     கணக்குண் டாதல் திருவுள ...... மறியாதோ

சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ
     சிறக்குஞ் சாமி சொருபமி ...... தொளிகாணச்

செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை
     தெறிக்குஞ் சாமி முனிவர்க ...... ளிடமேவுந்

தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
     தரிக்குஞ் சாமி யசுரர்கள் ...... பொடியாகச்

சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண
     தகப்பன் சாமி யெனவரு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

புவிக்கு உன் பாதம் அதைநினைபவர்க்கும் ... இந்தப் பூமியில்
உன் திருவடிகளை நினைத்துத் தியானிப்பவர்களுக்கும்,

கால தரிசனை புலக்கண் கூடும் ... இறப்பு, நிகழ்வு, எதிர் என்ற
முக்கால நிகழ்ச்சிகள் அவர்களின் அறிவுக் கண்ணில் புலப்படும்.

அதுதனை அறியாதே ... அந்த உண்மையை அறியாமலே,

புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது ... புரட்டிப் பேசும்
பாபநெறிச் சமயவாதிகளின் வழியிலே நடக்கின்ற

படிறரை புழுக்கண் பாவம் அதுகொளல் பிழையாதே ... வஞ்சகப்
பொய்யர்களை பாவத்திற்கு என்று ஏற்பட்ட, புழுக்கள் நிறைந்த, நரகம்
ஏற்றுக்கொள்ளுதல் ஒருநாளும் தவறாது.

கவிக்கொண்டாடு புகழினை ... பெரியோர்களின் பாடல்களில்
போற்றப் பெறும் உனது புகழினை

படிக்கும் பாடு திறமிலி ... படிக்கும் திறமும், பாடும் திறமும்
இல்லாதவன்,

களைக்கும் பாவ சுழல்படும் அடிநாயேன் ... இளைப்பை
உண்டாக்கும் பாவச் சுழற்சியில் சிக்குண்டு சுழலும் நாயினும்
கீழ்மகனான எனக்கு,

கலக்குண் டாகு புவிதனில் எனக்கு ... மனக் கலக்கத்தைத் தரும்
இப்புவியில் உள்ள எனக்கு,

உண்டாகு பணிவிடை ... யான் செய்யுமாறு விதிக்கப்பட்ட தொண்டு
இவ்வளவு என்று உள்ளதான ஒரு

கணக்குண் டாதல் திருவுளம் அறியாதோ ... கணக்கு இருப்பது
உன் உள்ளத்திற்கு தெரியாமலா போகும்?

சிவத்தின் சாமி ... சிவபிரானிடத்தில் தோன்றிய சுவாமி,

மயில்மிசை நடிக்குஞ் சாமி ... மயிலின் மீது நடனம் செய்யும் சுவாமி,

எமதுளெ சிறக்குஞ் சாமி ... எம்முடைய உள்ளத்திலே சிறப்பாக
விளங்கும் சுவாமி,

சொருபமி தொளிகாணச் செழிக்குஞ் சாமி ... தனது
திருவுருவத்தின் பேரொளியை அடியார்கள் காணுமாறு விளக்கமாகத்
தோன்றும் சுவாமி,

பிறவியை யொழிக்குஞ் சாமி ... பிறவியை அடியோடு
தொலைத்தருளும் சுவாமி,

பவமதை தெறிக்குஞ் சாமி ... பாவங்களைப் போக்கி ஒழிக்கும் சுவாமி,

முனிவர்களிடமேவுந் தவத்தின் சாமி ... முநிவர்கள் செய்யும்
தவப்பொருளாக விளங்கும் சுவாமி,

புரிபிழை பொறுக்குஞ் சாமி ... அடியார்கள் செய்யும் பிழைகளை
எல்லாம் பொறுத்தருளும் சுவாமி,

குடிநிலை தரிக்குஞ் சாமி ... தேவர்களை விண்ணில் குடிபுகச்
செய்து அங்கு நிலைபெற வைத்த சுவாமி,

அசுரர்கள் பொடியாகச் சதைக்குஞ் சாமி ... அசுரர்களைப்
பொடியாகும்படி நெரித்து அழித்த சுவாமி,

எமைபணி விதிக்குஞ் சாமி ... யாம் செய்ய வேண்டிய தொண்டு
இன்னதென்று நிர்ணயிக்கும் சுவாமி,

சரவண தகப்பன் சாமி யெனவரு பெருமாளே. ... சரவணபவனே,
தந்தைக்கு குருஸ்வாமியாக வந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.440  pg 3.441  pg 3.442  pg 3.443 
 WIKI_urai Song number: 1178 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1179 - puvikkun pAdham (common)

puvikkun pAdham adhai ninaibavarkkun kAla dharisanai
     pulakkaN kUdum adhu thanai ...... aRiyAdhE

purattum pAdha samayigaL neRikkaN pUdhu padiRarai
     puzhukkaN pAvam adhu koLal ...... pizhaiyAdhE

kavik koNdAdu pugazhinai padikkum pAdu thiRamili
     kaLaikkum pAva suzhal padum ...... adinAyEn

kalak kuNdAgu buvidhanil enak kuNdAgu paNividai
     kaNak kuNdAdhal thiRuvuLam ...... aRiyAdhO

sivaththin sAmi mayil misai nadikkun sAmi emadhuLe
     siRakkun sAmi sorupamidhu ...... oLikANach

sezhikkun sAmi piRaviyai ozhikkun sAmi bavamadhai
     theRikkun sAmi minivargaL ...... idamEvun

thavaththin sAmi puripizhai poRukkun sAmi kudinilai
     tharikkun sAmi asurargaL ...... podiyAga

sadhaikkun sAmi emaipaNi vidhikkun sAmi saravaNa
     thagappan sAmi enavaru ...... perumALE.

......... Meaning .........

buvikkun pAdham adhai ninaibavarkkum: In this world, those contemplating upon Your two feet

kAla dharisanai pulakkaN kUdum: are capable of seeing the past, the present and the future!

adhu thanai aRiyAdhE: Without knowing this significance,

purattum pAdha samayigaL neRikkaN pUdhu padiRarai: some devious people are led into improper religious paths by certain fanatics;

puzhukkaN pAvam adhu koLal pizhaiyAdhE: and they will all go, without fail, to the worst hell full of worms!

kavik koNdAdu pugazhinai padikkum pAdu thiRamili: I do not have the capability of singing Your glory in poetry.

kaLaikkum pAva suzhal padum adinAyEn: I am caught in a whirlpool of sins which has tired me out.

kalak kuNdAgu buvidhanil enak kuNdAgu paNividai: In this troublesome world, I must be given certain duties

kaNak kuNdAdhal thiRuvuLam aRiyAdhO: of which there should be an account; and how can You not know that?

sivaththin sAmi mayil misai nadikkun sAmi: You are the Lord of SivA; You are the Lord dancing on the Peacock;

emadhuLe siRakkun sAmi: You are the Lord grandly etched inside our hearts;

sorupamidhu oLikANach sezhikkun sAmi: You are the luminous Lord whose form is visible only to Your devotees;

piRaviyai ozhikkun sAmi: You are the Lord that destroys birth;

bavamadhai theRikkun sAmi: You are the Lord that shatters all sins;

munivargaL idamEvun thavaththin sAmi: You are the Lord that manifests in the penance of the sages;

puripizhai poRukkun sAmi: You are the Lord that forgives all our mistakes;

kudinilai tharikkun sAmi: You are the Lord who redeemed the land of the DEvAs and re-established them;

asurargaL podiyAga sadhaikkun sAmi: You are the Lord who destroyed and reduced the asuras (demons) into powder;

emaipaNi vidhikkun sAmi: You are the Lord determining what services we must do in this world;

saravaNa: You are Saravanabhava (the Lord who emerged from a pond of reeds);

thagappan sAmi enavaru perumALE.: and You are the Lord who preached to His own father, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1179 puvikkun pAdham - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]