திருப்புகழ் 1174 பழுது அற ஓதி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1174 pazhudhuaRaOdhi  (common)
Thiruppugazh - 1174 pazhudhuaRaOdhi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானத் தனந்த தனதன தானத் தனந்த
     தனதன தானத் தனந்த ...... தனதான

......... பாடல் .........

பழுதற வோதிக் கடந்து பகைவினை தீரத் துறந்து
     பலபல யோகத் திருந்து ...... மதராசன்

பரிமள பாணத் தயர்ந்து பனைமட லூர்தற் கிசைந்து
     பரிதவி யாமெத்த நொந்து ...... மயல்கூர

அழுதழு தாசைப் படுங்க ணபிநய மாதர்க் கிரங்கி
     யவர்விழி பாணத்து நெஞ்ச ...... மறைபோய்நின்

றழிவது யான்முற் பயந்த விதிவச மோமற்றையுன்ற
     னருள்வச மோஇப்ர மந்தெ ...... ரிகிலேனே

எழுதரு வேதத்து மன்றி முழுதினு மாய்நிற்கு மெந்தை
     யெனவொரு ஞானக் குருந்த ...... ருளமேவும்

இருவுரு வாகித் துலங்கி யொருகன தூணிற் பிறந்து
     இரணியன் மார்பைப் பிளந்த ...... தனியாண்மை

பொழுதிசை யாவிக்ர மன்தன் மருகபு ராரிக்கு மைந்த
     புளகப டீரக் குரும்பை ...... யுடன்மேவும்

புயல்கரி வாழச் சிலம்பின் வனசர மானுக் குகந்து
     புனமிசை யோடிப் புகுந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பழுது அற ஓதிக் கடந்து பகை வினை தீரத் துறந்து ... குற்றம்
இல்லாத நல்ல வகையில் கல்விகளை ஓதியும், உலக ஆசைகளைக்
கடந்தும், உட்பகையாக வரும் இரண்டு வினைகளை முற்றும் உதறி
விலக்கியும்,

பல பல யோகத்து இருந்து ... பல வகையான யோக மார்க்கங்களை
அநுஷ்டித்து இருந்தும்,

மத ராசன் பரிமள பாணத்து அயர்ந்து ... மன்மத ராஜனான
காமனுடைய நறு மணம் வீசும் பாணங்களால் மனக் கவலையும்
சோர்வும் கொண்டு,

பனை மடல் ஊர்தற்கு இசைந்து ... பனை மடலால் செய்த
குதிரையில் ஏறுதற்கும் இணங்கி*

பரிதவியா மெத்த நொந்து மயல் கூர ... பரிதவித்து, மிகவும் மனம்
நொந்து, காம இச்சை மிகுதிப்பட,

அழுது அழுது ஆசைப் படுங்கண் அபிநய மாதர்க்கு இரங்கி ...
அன்பு போல் நடித்து மிகவும் அழுது, விரும்புவது போலக் கண்களால்
அபிநயிக்கும் விலைமாதர்களின் மேல் ஆசை வைத்து,

அவர் விழி பாணத்து நெஞ்சம் அறை போய் நின்று அழிவது ...
அவர்களுடைய கண்களாகிய அம்பினால் உள்ளம் குமைந்து நின்று
அழிந்துபோவது,

யான் முன் பயந்த விதி வசமோ மற்றை உன் தன் அருள்
வசமோ
... நான் முன்பு செய்த விதியின் விளைவோ? அல்லது
உன்னுடைய திருவருளின் கூத்தோ?

இ ப்ரமம் தெரிகிலேனே ... இந்த மயக்கத்தின் காரணம் எனக்கு
விளங்கவில்லையே?

எழுத அரு வேதத்தும் அன்றி முழுதினுமாய் நிற்கும் எந்தை
என
... யாராலும் எழுதுவதற்கு முடியாத வேதத்தில் மாத்திரம் அல்லாமல்,
மற்று எல்லாப் பொருள்களிலும் விளங்கி நிற்கும் எம்பெருமான் என்று
கூறிய

ஒரு ஞானக் குருந்தர் உ(ள்)ளம் மேவும் ... ஒப்பற்ற ஞானக்
குழந்தையாகிய பிரகலாதருடைய உள்ளத்தில் வீற்றிருப்பவரும்,

இரு உருவாகித் துலங்கி ஒரு கன தூணில் பிறந்து ... மனிதன்,
சிங்கம் என இரண்டு உருவம் அமைந்த (நரசிம்ம) மூர்த்தியாய்த்
துலங்கித் தோன்றி, ஒரு பெரிய தூணில் விளக்கம் உற்று எழுந்து,

இரணியன் மார்பைப் பிளந்த தனி ஆண்மை ... இரணியனின்
மார்பைப் பிளந்த ஒப்பற்ற வீரத்தை,

பொழுது இசையா விக்ரமன் தன் மருக ... பிரகலாதன் வேண்டிய
அந்தப் பொழுதிலேயே உடன்பட்டுக் காட்டிய வலிமைசாலியானவரும்
ஆகிய திருமாலின் மருகனே,

புராரிக்கு மைந்த ... திரிபுரத்தை எரித்த சிவபெருமானுக்கு மைந்தனே,

புளக படீரக் குரும்பை உடன் மேவும் ... புளகாங்கிதம்
கொண்டதும், சந்தனம் பூசியதும், தென்னங்குரும்பை போன்ற இள
மார்பு விளங்கியவளும்,

புயல் கரி வாழச் சிலம்பின் வனசர மானுக்கு உகந்து ...
மேகமும், யானையும் வாழ்கின்ற வள்ளி மலையின் வேடர் குலத்து மான்
போன்றவளுமான வள்ளியின் மீது தீராக்காதல் பூண்டு,

புனம் மிசை ஓடிப் புகுந்த பெருமாளே. ... அவள் காத்துவந்த
தினைப்புனத்தில் ஓடிப்புகுந்து நின்ற பெருமாளே.


* மடல் எழுதுதல்:

தலைவன் தலைவியின் அழகை வர்ணித்து ஓர் ஏட்டில்
மடலாக எழுதி அவளது ஊருக்குச் சென்று நாற்சந்தியில் ஒன்றும் பேசாமல்
ஒருவரது வசைக்கும் கூசாமல் படத்தில் எழுதிய உருவத்தைப் பார்த்தவாறு
பகலும் இரவுமாக நிற்பான். அவனது உறுதிகண்டு தலைவியின் வீட்டார்
தலைவனுக்கு அவளை மணம் செய்து வைப்பர். முருகன் வள்ளியை ஊரறிய
மடல் எழுதி மணம் செய்துகொண்ட காட்சி கந்த புராணத்தில் வருகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.428  pg 3.429  pg 3.430  pg 3.431 
 WIKI_urai Song number: 1173 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1174 - pazhudhu aRa Odhi (common)

pazhuthaRa vOthik kadanthu pakaivinai theerath thuRanthu
     palapala yOkath thirunthu ...... matharAsan

parimaLa pANath thayarnthu panaimada lUrthaR kisainthu
     parithavi yAmeththa nonthu ...... mayalkUra

azhuthazhu thAsaip padunka Napinaya mAthark kirangi
     yavarvizhi pANaththu nenja ...... maRaipOynin

Razhivathu yAnmuR payantha vithivasa mOmatRaiyunRan
     aruLvasa mOipra manthe ...... rikilEnE

ezhutharu vEthaththu manRi muzhuthinu mAyniRku menthai
     yenavoru njAnak kuruntha ...... ruLamEvum

iruvuru vAkith thulangi yorukana thUNiR piRanthu
     iraNiyan mArpaip piLantha ...... thaniyANmai

pozhuthisai yAvikra manthan marukapu rArikku maintha
     puLakapa deerak kurumpai ...... yudanmEvum

puyalkari vAzhac cilampin vanasara mAnuk kukanthu
     punamisai yOdip pukuntha ...... perumALE.

......... Meaning .........

pazhuthu aRa Othik kadanthu pakai vinai theerath thuRanthu: My learning was blemishless; I passed beyond all the worldly desires; I fought and conquered my inner enemies, namely my good and bad deeds which I completely shook off;

pala pala yOkaththu irunthu: I practised very many Yogic exercises; (despite all that)

matha rAsan parimaLa pANaththu ayarnthu: I was knocked down by the fragrant flowery arrows of Manmathan (God of Love) which caused me anguish and mental depression;

panai madal UrthaRku isainthu: I was even prepared to publicise my passion through the palm-leaf doodles*;

parithaviyA meththa nonthu mayal kUra: feeling miserable and disheartened, I saw my obsession increase day by day;

azhuthu azhuthu Asaip padunkaN apinaya mAtharkku irangi: I was carried away by pity for the whores who feigned love towards me with their sobbing and play-acting;

avar vizhi pANaththu nenjam aRai pOy ninRu azhivathu: the arrows of their eyes knocked me down, making me feel battered, with a depressed heart;

yAn mun payantha vithi vasamO matRai unthan aruL vasamO: Is this all the act of fate because of my past deeds? Or is this a practical joke You are graciously playing on me?

i pramam therikilEnE: I am unable to understand the reason for this malady!

ezhutha aru vEthaththum anRi muzhuthinumAy niRkum enthai ena: He declared that Lord Almighty not only prevailed in the VEdAs whose greatness one could not even write about but that He was also omnipresent;

oru njAnak kurunthar u(L)Lam mEvum: He was the matchless and extremely wise child-devotee, PrahlAdhan; the Lord was seated in that child's heart;

iru uruvAkith thulangi oru kana thUNil piRanthu: taking a dual form of half man and half lion, He emerged as Narasimha MUrthy and materialised from a solid pillar;

iraNiyan mArpaip piLantha thani ANmai: the unique valour displayed by the Lord in splitting the chest of HiraNyan

pozhuthu isaiyA vikraman than maruka: was spontaneously revealed upon the request of PrahlAdhan; You are the nephew of such a valiant Lord VishNu!

purArikku maintha: You are the son of Lord SivA who burnt down the Thiripuram!

puLaka padeerak kurumpai udan mEvum: She is the proud possessor of enthralled bosoms like baby coconut, having a nice coating of sandalwood paste;

puyal kari vAzhac cilampin vanasara mAnukku ukanthu: She is the deer-like VaLLi, living among the hunters of Mount VaLLimalai where clouds hover and elephants stroll about; You fell madly in love with her

punam misai Odip pukuntha perumALE.: and dashed to the millet-field guarded by her, Oh Great One!


* madal - is a type of palm leaf used as a canvas on which Murugan drew the descriptive picture of VaLLi and went alone to VaLLimalai. There, He chose a junction of four streets and stood staring at the picture day in and day out, oblivious of other peoples' comments and jeers. Ultimately, VaLLi's people were so moved by Murugan's devotion that they decided to formally give VaLLi in marriage to Murugan - according to Kandha PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1174 pazhudhu aRa Odhi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]