திருப்புகழ் 1169 ஆரவாரமாய்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1169 AravAramAy  (common)
Thiruppugazh - 1169 AravAramAy - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தான தான தந்த தான தான தான தந்த
     தான தான தான தந்த ...... தனதான

......... பாடல் .........

ஆர வார மாயி ருந்து ஏம தூத ரோடி வந்து
     ஆழி வேலை போன்மு ழங்கி ...... யடர்வார்கள்

ஆக மீதி லேசி வந்து ஊசி தானு மேநு ழைந்து
     ஆலைமீதி லேக ரும்பு ...... எனவேதான்

வீர மான சூரி கொண்டு நேரை நேரை யேபி ளந்து
     வீசு வார்கள் கூகு வென்று ...... அழுபோது

வீடு வாச லான பெண்டிர் ஆசை யான மாதர் வந்து
     மேலை வீழ்வ ரீது கண்டு ...... வருவாயே

நாரி வீரி சூரி யம்பை வேத வேத மேபு கழ்ந்த
     நாதர் பாலி லேயி ருந்த ...... மகமாயி

நாடி யோடி வாற அன்பர் காண வேண தேபு கழ்ந்து
     நாளு நாளு மேபு கன்ற ...... வரைமாது

நீரின் மீதி லேயி ருந்த நீலி சூலி வாழ்வு மைந்த
     நீப மாலை யேபு னைந்த ...... குமரேசா

நீல னாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட
     நீத னான தோர்கு ழந்தை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆரவாரமாயிருந்து ... ஆடம்பரமாக வாழ்க்கையை நடத்திவந்த
நாளிலே,

ஏம தூதரோடி வந்து ... யமனுடைய தூதர்கள் ஓடிவந்து

ஆழி வேலை போன்முழங்கி யடர்வார்கள் ... சமுத்திரத்தின்
அலைகளைப் போலப் பேரொலியைச் செய்து என்னை நெருக்கி
வருத்துவார்கள்.

ஆக மீதிலே சிவந்து ஊசி தானுமே நுழைந்து ... என் உடலிலே
கோபத்துடன் ஊசியைக் குத்தி நுழைப்பார்கள்.

ஆலைமீதிலே கரும்பு எனவேதான் ... ஆலையில் நசுக்கப்படும்
கரும்பு என்று சொல்லும்படி என் உடலைக் கசக்கி,

வீரமான சூரி கொண்டு நேரை நேரையேபிளந்து
வீசுவார்கள்
... வீரம் பொருந்திய சூரிக்கத்தியைக் கொண்டுவந்து
உடலை நேர் பாதியாகப் பிளந்து எறிவார்கள்.

கூகு வென்று அழுபோது ... (இந்த மரண வேதனையை நான்
படுகையில்) வீட்டில் உள்ளோர் கூ கூ என அழுது
கொண்டிருக்கும்போது

வீடு வாசலான பெண்டிர் ஆசையான மாதர் வந்து ... வீடு
வாசலில் உள்ள மாதர்களும், என்மீது அன்பு வைத்த மாதர்களும் வந்து

மேலை வீழ்வர் ஈது கண்டு வருவாயே ... என் உடல் மீது
வீழ்வார்கள். இந்தக் கோலத்தைக் கண்டு நீ வந்து அருள் புரிவாயாக.

நாரி வீரி சூரி யம்பை வேத வேதமே புகழ்ந்த ... தேவி,
வீரமுள்ளவள், அச்சத்தைத் தருபவள், அம்பிகை, எல்லா வேதங்களும்
புகழ்கின்ற

நாதர் பாலிலேயிருந்த மகமாயி ... தலைவராம் சிவனாரின் இடது
பாகத்தில் இருக்கும் ஆதியாம் அன்னை,

நாடி யோடி வாற அன்பர் காண வேணதே புகழ்ந்து ... தன்னை
விரும்பி ஓடிவருகின்ற அன்பர்கள் கண்டு நிரம்பவே புகழ்ந்து

நாளு நாளுமே புகன்ற வரைமாது ... தினந்தோறும் துதித்த
மலைமகள்,

நீரின் மீதி லேயிருந்த நீலி ... பாற்கடலில் பள்ளி கொண்ட நீல
நிறத்து திருமாலின் அம்சமான விஷ்ணுசக்தி,

சூலி வாழ்வு மைந்த ... சூலம் ஏந்தியவள் - ஆகிய உமைக்குச்
செல்வமாக அமைந்த மைந்தனே,

நீப மாலையேபுனைந்த குமரேசா ... கடப்பமலர் மாலையையே
சூடியுள்ள குமரேசனே,

நீலனாக வோடி வந்த சூரை வேறு வேறு கண்ட ... நீல
நிறத்துடன் (மாறுவேடம் புனைந்து) ஓடிவந்த சூரனை துண்டம்
துண்டமாகப் பிளந்த,

நீதனான தோர்குழந்தை பெருமாளே. ... நியாய மூர்த்தியான
ஒப்பற்ற பாலசுப்பிரமணியப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.418  pg 3.419 
 WIKI_urai Song number: 1168-1 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1169 - Ara vAramAy (common)

Aara vAramAy irundhu Ema dhUtharOdi vandhu
     AzhivElai pOn muzhangi ...... adarvArgaL

Aaga meedhilE sivandhu Usi thAnumE nuzhaindhu
     Alai meedhilE karumbu ...... enavEthAn

veera mAna sUri koNdu nErai nEraiyE piLandhu
     veesu vArgaL kUku vendru ...... azhupOdhu

veedu vAsal Ana peNdir AsaiyAna mAdhar vandhu
     mElai veezhva reedhu kaNdu ...... varuvAyE

nAri veeri sUri ambai vEdha vEdhamE pugazhndha
     nAthar pAlilE irundha ...... magamAyi

nAdi Odi vARa anbar kANa vENadhE pugazhndhu
     nALu nALumE pugandra ...... varaimAdhu

neerin meedhilE irundha neeli sUli vAzhvu maindha
     neepa mAlaiyE puNaindha ...... kumarEsA

neela nAga Odi vandha sUrai vERu vERu kaNda
     neetha nAnadhOr kuzhandhai ...... perumALE.

......... Meaning .........

Ara vAramAy irundhu: Having lived a pompous life,

Ema dhUtharOdi vandhu: I shall face the messengers of Yaman (God of Death) who will come running to me.

AzhivElai pOn muzhangi adarvArgaL: They will roar like the waves of the ocean and advance towards me.

Aga meedhilE sivandhu Usi thAnumE nuzhaindhu: With anger, they will thrust needles into my body.

Alai meedhilE karumbu enavEthAn: They will squeeze my body as if it were sugarcane being crushed in the mill.

veera mAna sUri koNdu nErai nEraiyE piLandhu veesu vArgaL: They will take a powerful sword and bisect my body and throw away the pieces.

kUku vendru azhupOdhu: (When I am going through this torture) there will be so much of crying and wailing going on;

veedu vAsal Ana peNdir AsaiyAna mAdhar vandhu mElai veezhvar: the womenfolk from my household and all those women who loved me will assemble and fall upon my body.

eedhu kaNdu varuvAyE: Seeing this pathetic scene, kindly come to bless me.

nAri veeri sUri ambai: She is Devi; She is valorous; She is frightening; She is the Mother;

vEdha vEdhamE pugazhndha nAthar pAlilE irundha magamAyi: She is the Primordial Mother who is seated on the left side of the Leader (SivA) who is adulated by all the VEdAs;

nAdi Odi vARa anbar kANa vENadhE pugazhndhu: She is lauded extensively by the devotees running to Her seeking Her vision

nALu nALumE pugandra varaimAdhu: and is worshipped everyday; She is the daughter of Mount HimavAn;

neerin meedhilE irundha neeli: She has the blue complexion of Vishnu who slumbers on the milky ocean (She is in the form of Vishnu-Shakthi);

sUli vAzhvu maindha: and She holds the trident in Her hand. She is Mother UmA, and You are Her Treasure and Her Son!

neepa mAlaiyE puNaindha kumarEsA: You wear the garland made of kadappa flowers, Oh Lord Kumara!

neela nAga Odi vandha sUrai vERu vERu kaNda: SUran, who came running to You (in disguise) assuming a blue complexion, was shattered to pieces

neetha nAnadhOr kuzhandhai perumALE.: by You, the Dispenser of justice. You are unique as Balasubramaniyam, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1169 Ara vAramAy - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]