திருப்புகழ் 1168 நிருதரார்க்கு ஒரு  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1168 nirudharArkkuoru  (common)
Thiruppugazh - 1168 nirudharArkkuoru - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தாத்தன தானா தானன
     தனன தாத்தன தானா தானன
          தனன தாத்தன தானா தானன ...... தனதான

......... பாடல் .........

நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய
     சுரர்க ளேத்திடு வேலா ஜேஜெய
          நிமல னார்க்கொரு பாலா ஜேஜெய ...... விறலான

நெடிய வேற்படை யானே ஜேஜெய
     எனஇ ராப்பகல் தானே நான்மிக
          நினது தாட்டொழு மாறே தானினி ...... யுடனேதான்

தரையி னாழ்த்திரை யேழே போலெழு
     பிறவி மாக்கட லூடே நானுறு
          சவலை தீர்த்துன தாளே சூடியு ...... னடியார்வாழ்

சபையி னேற்றியின் ஞானா போதமு
     மருளி யாட்கொளு மாறே தானது
          தமிய னேற்குமு னேநீ மேவுவ ...... தொருநாளே

தருவி னாட்டர சாள்வான் வேணுவி
     னுருவ மாய்ப்பல நாளே தானுறு
          தவசி னாற்சிவ னீபோய் வானவர் ...... சிறைதீரச்

சகல லோக்கிய மேதா னாளுறு
     மசுர பார்த்திப னோடே சேயவர்
          தமரை வேற்கொடு நீறா யேபட ...... விழமோதென்

றருள ஏற்றம ரோடே போயவ
     ருறையு மாக்கிரி யோடே தானையு
          மழிய வீழ்த்தெதிர் சூரோ டேயம ...... ரடலாகி

அமரில் வீட்டியும் வானோர் தானுறு
     சிறையை மீட்டர னார்பால் மேவிய
          அதிப ராக்ரம வீரா வானவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிருத ரார்க்கொரு காலா ஜேஜெய ... அசுரர்களுக்கு ஒரு யமனாக
ஏற்பட்டவனே, வெல்க, வெல்க,

சுரர்கள் ஏத்திடு வேலா ஜேஜெய ... தேவர்கள் போற்றித் துதிக்கும்
வேலனே, வெல்க, வெல்க,

நிமலனார்க்கு ஒரு பாலா ஜேஜெய ... பரிசுத்த மூர்த்தியாம்
சிவனாருக்கு ஒப்பற்ற குமாரனே, வெல்க, வெல்க,

விறலான நெடிய வேற்படையானே ஜேஜெய ... மிக வலிமையான
வேலினை ஆயுதமாய்க் கொண்டோனே, வெல்க, வெல்க,

எனஇராப்பகல் தானே நான்மிக ... என்றெல்லாம் இரவும்
பகலுமாக நான் நிரம்பவுமே

நினது தாள் தொழு மாறே தான் ... உன்னுடைய திருவடியைப்
பணிந்து போற்றும் படியாக

இனி யுடனேதான் ... இனியும் சிறிதும் தாமதம் செய்யாமலேதான்,

தரையின்ஆழ்த்திரை யேழே போலெழு ... இந்தப் புவியில்
ஆழமுள்ள ஏழு கடல்களைப் போல் எழுகின்ற

பிறவி மாக்கட லூடே நான் உறு ... பிறவி என்னும் பெருங்கடலில்
நான் அனுபவிக்கும்

சவலை தீர்த்து உன தாளே சூடி ... மனக் குழப்பங்களைத் தீர்த்து,
உன் பாதமே தலையில் சூடியவனாய்,

உன் அடியார்வாழ் சபையி னேற்றி ... உன் அடியார்கள் வாழ்கின்ற
கூட்டத்திலே கூட்டி வைத்து,

இன் ஞானா போதமும் அருளி ... இனிய ஞான உபதேசத்தையும்
எனக்கு அருளி,

ஆட்கொளு மாறே தானது ... என்னை ஆண்டுகொண்டு
அருள்வதன் பொருட்டே

தமியனேற்கு முனே நீ மேவுவது ஒருநாளே ... தனியேனாக
உள்ள என் முன் நீ தோன்றும் ஒருநாள் உண்டோ?

தருவி னாட்டரசாள்வான் ... கற்பகத் தருக்கள் நிறைந்த தேவநாட்டு
அரசாட்சியைப் புரியும் இந்திரன்*

வேணுவினுருவமாய்ப்பல நாளே ... மூங்கிலின் உருவம் எடுத்து,
பல நாட்களாக

தானுறு தவசினால் ... தான் செய்த தவத்தின் பயனாக

சிவன் நீபோய் வானவர் சிறைதீர ... சிவபிரான் உன்னை
அழைத்து நீ சென்று தேவர்களின் சிறையை நீக்க,

சகல லோக்கியமே தான் ஆளுறும் ... எல்லாவிதமான
உலகப்பற்றும் சுகபோகமும் ஆண்டு அனுபவிக்கும்

அசுர பார்த்திபனோடே சேயவர் தமரை ... அசுரர்களின் அரசன்
சூரனையும், அவனது மக்கள், சுற்றத்தாரையும்

வேற்கொடு நீறாயேபட விழ மோதென்று ... வேல் கொண்டு
அவர்கள் பொடியாக விழும்படி தாக்கு என்று

அருள ஏற்று அமரோடே போய் ... திருவாய் மலர்ந்து ஆணையிட,
அதனை ஏற்று போர்க்களத்துக்குச் சென்று

அவருறையு மாக்கிரியோடே தானையும் ... அசுரர் தங்கிய பெரிய
கிரெளஞ்சம், ஏழு மலைகளுடன், சேனையும்

அழிய வீழ்த்து எதிர் சூரோடே அமர் அடலாகி ... அழிந்து
விழச்செய்து, எதிர்த்து வந்த சூரனுடன் பகை பூண்டு,

அமரில் வீட்டியும் ... போரிலே அவனை அழித்தும்,

வானோர் தானுறு சிறையை மீட்டு ... அடைபட்டிருந்த
சிறையினின்றும் தேவர்களை விடுவித்துக் காத்தும்,

அரனார்பால் மேவிய அதி பராக்ரம வீரா ... சிவபிரானிடம்
திரும்பி வந்து சேர்ந்த மகா பராக்ரம வீரனே,

வானவர் பெருமாளே. ... தேவர்கள் தொழும் பெருமாளே.


* சூரனை அஞ்சி இந்திரன் சீகாழிப் பதியில் மூங்கில் உருவில் தவம்
செய்துவந்த குறிப்பு கந்த புராணத்தில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.414  pg 3.415  pg 3.416  pg 3.417  pg 3.418  pg 3.419 
 WIKI_urai Song number: 1168 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1168 - nirudharArkku oru (common)

nirudharArk koru kAlA jE jeya
     surargaL Eththidyu vElA jE jeya
          nimalanArk koru bAlA jE jeya ...... viRalAna

nediya vER padaiyAnE jE jeya
     ena irAp pagal thAnE nAn miga
          ninadhu thAL thozhumARE thAnini ...... udanEthAn

tharaiyi nAzhth thirai EzhE pOlezhu
     piRavi mAk kadalUdE nAnuRu
          savalai theerththuna thALE sUdi yun ...... adiyAr vAzh

sabaiyin Etri innyAnA bOdhamum
     aruLi AtkoLu mARE thAnadhu
          thamiyanERku munE nee mEvuvadhu ...... orunALE

tharuvinAt arasALvAn vENuvin
     uruvamAyp pala nALE thAnuRu
          thava sinAR siva nee pOy vAnavar ...... siRaitheera

sakala lOkkiya mEdhA nALuRum
     asura pArthiba nOdE sEyavar
          thamarai vERkodu neeRA yEpada ...... vizhamOdhendru

aruLa EtramarOdE pOyavar
     uRaiyu mAggiriyOdE thAnaiyum
          azhiya veezhththedhir sUrOdE ...... amar adalAgi

amaril veettiyum vAnOr thAnuRu
     siRaiyai meet aranAr pAl mEviya
          athi parAkrama veerA vAnavar ...... perumALE.

......... Meaning .........

nirudharArk koru kAlA jE jeya: "You became Yaman (Death-God) for all the asuras (demons), Victory to You, Victory to You,

surargaL Eththidyu vElA jE jeya: You are worshipped by all the DEvAs, Victory to You, Victory to You,

nimalanArk koru bAlA jE jeya: You are the peerless Son of SivA who is the purest form, Victory to You, Victory to You,

viRalAna nediya vER padaiyAnE jE jeya: You hold the extremely strong weapon of Spear, Victory to You, Victory to You",

ena irAp pagal thAnE nAn miga: With these words, I want to profusely praise You day and night.

ninadhu thAL thozhumARE thAnini udanEthAn: I should be able to worship Your feet without any further delay;

tharaiyi nAzhth thirai EzhE pOlezhu: just like the seven deep oceans of this world rise,

piRavi mAk kadalUdE nAnuRu: the big ocean called birth also rises, and in that ocean, I suffer

savalai theerththu: unbearable mental agonies which should be removed;

una thALE sUdi: I should bear Your feet on my head;

un adiyAr vAzh sabaiyin Etri: I should be elevated to the congregation of Your devotees;

innyAnA bOdhamum aruLi AtkoLu mARE thAn: and I should be graciously preached the meaning of the Sweet and True Knowledge by You and completely taken over by You.

adhu thamiyanERku munE nee mEvuvadhu orunALE: All this can happen only when You appear before this lonely soul; will there be a day when this happens?

tharuvinAt arasALvAn: IndrA, the ruler of the land of DEvAs known for its KaRpaga trees

vENuvin uruvamAyp pala nALE thAnuRu: was doing penance (at SikAzhi) taking the form of a bamboo tree*.

thava sinAR siva nee pOy vAnavar siRaitheera: Impressed by the penance, Lord SivA commanded You as follows - "Go and free all DEvAs from their imprisonment;

sakala lOkkiya mEdhA nALuRum asura pArthiba nOdE: along with SUran, the King of Asuras, who is enjoying all worldly pleasures,

sEyavar thamarai vERkodu neeRA yEpada: his children and entire lineage must be uprooted and destroyed; and

vizhamOdhendru aruLa EtramarOdE pOy: fell them all by attacking them". Accepting the command, You went to war,

avaruRaiyu mAggiriyOdE thAnaiyum azhiya: destroyed their mount Krouncha, the seven hills, all their armies,

veezhththedhir sUrOdE amar adalAgi amaril veettiyum: and fought with SUran who opposed You, killing him.

vAnOr thAnuRu siRaiyai meet aranAr pAl mEviya: Then You released the DEvAs from prison before returning to Lord SivA.

athi parAkrama veerA vAnavar perumALE.: You are such a superb warrior and the Lord of all the DEvAs, Oh Great One!


* According to the legend, being afraid of SUran chasing him, IndrA assumed the disguise of a bamboo tree and hid himself at Seekazhi for continuous prayer to Lord SivA - Kantha PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1168 nirudharArkku oru - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]