திருப்புகழ் 1162 ஞானா விபூஷணி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1162 gnAnAvibUshaNi  (common)
Thiruppugazh - 1162 gnAnAvibUshaNi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தானன தானன தானன
     தானான தானன தானன தானன
          தானான தானன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

ஞானாவி பூஷணி காரணி காரணி
     காமாவி மோகினி வாகினி யாமளை
          மாமாயி பார்வதி தேவிகு ணாதரி ...... உமையாள்தன்

நாதாக்ரு பாகர தேசிகர் தேசிக
     வேதாக மேயருள் தேவர்கள் தேவந
          லீசாச டாபர மேசர்சர் வேசுரி ...... முருகோனே

தேனார்மொ ழீவளி நாயகி நாயக
     வானாடு ளோர்தொழு மாமயில் வாகன
          சேணாளு மானின்ம னோகர மாகிய ...... மணவாளா

சீர்பாத சேகர னாகவு நாயினன்
     மோகாவி காரவி டாய்கெட ஓடவெ
          சீராக வேகலை யாலுனை ஓதவும் ...... அருள்வாயே

பேணார்கள் நீறதி டாஅம ணோர்களை
     சூராடி யேகழு மீதினி லேறிட
          கூனான மீனனி டேறிட கூடலில் ...... வருவோனே

பேராண்மை யாளனி சாசரர் கோனிரு
     கூறாக வாளிதொ டூரகு நாயகன்
          பூவாய னாரணன் மாயனி ராகவன் ...... மருகோனே

வாணாள்ப டாவரு சூரர்கள் மாளவெ
     சேணாடு ளோரவர் வீடதி டேறிட
          கோனாக வேவரு நாதகு ரூபர ...... குமரேசா

வாசாம கோசர மாகிய வாசக
     தேசாதி யோரவர் பாதம தேதொழ
          பாசாவி நாசக னாகவு மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஞானா விபூஷணி கார் அணி காரணி ... ஞானத்தை விசேஷமான
அணிகலனாகக் கொண்டவள், கரிய நிறம் கொண்டு, எல்லாவற்றுக்கும்
காரணமாக இருப்பவள்,

காமா விமோகினி வாகினி* யாமளை ... காமத்தை உயிர்களுக்கு
ஊட்டும் சிறந்த மோகினி, பாதிரி மர நிழலில் சிவபெருமானைப் பூஜித்த
உமை, மரகதப் பச்சை நிறத்தி,

மா மாயி பார்வதி தேவி குணாதரி ... மாயையில் வல்லவள், பார்வதி
தேவி, நற் குணங்களை உடையவள்,

உமையாள் தன் நாதா க்ருபாகர தேசிகர் தேசிக ... (ஆகிய)
உமா தேவியின் தலைவரும், அருளுக்கு இருப்பிடமானவரும் ஆன
சிவபெருமானுக்கும் குருவே,

வேதாகமே அருள் தேவர்கள் தேவ நல் ஈசா ... (சிவனுக்கு)
வேதாமங்களை அருளிய தேவதேவனே, நல்ல ஈசனே,

சடா பரமேசர் சர்வேசுரி முருகோனே ... சடையை உடைய
பரமேசுரர், எல்லாவற்றுக்கும் தலைவியாகிய ஈசுவரி இருவருடைய
குழந்தையே,

தேன் ஆர் மொழீ வ(ள்)ளி நாயகி நாயக ... தேன் போலும் இனிய
மொழிகளைப் பேசும் வள்ளி நாயகிக்குக் கணவனே,

வான் நாடு உளோர் தொழு மா மயில் வாகன ... விண்ணுலகத்தில்
உள்ளோர்கள் வணங்கும் சிறந்த மயில் வீரனே,

சேண் ஆளும் மானின் மனோகரம் ஆகிய மணவாளா ...
விண்ணுலகத்தை ஆளும் இந்திரனின் மகளான தேவயானையின்
இனிமையான கணவனே,

சீர்பாத சேகரன் ஆகவு நாயினன் மோகா விகார விடாய்கெட
ஓடவெ
... உனது திருவடியை என் தலை மேல் சூடியவனாகிய, நாயினும்
இழிந்த, அடியேனுடைய காம விகார தாகம் கெட்டு ஓட்டம் பிடிக்க,

சீராகவே கலையால் உனை ஓதவும் அருள்வாயே ... நன்றாக
கலை ஞானத்துடன் உன்னை நான் பாட அருள்வாயாக.

பேணார்கள் நீறு அது இடா அமணோர்களை சூர் ஆடியே
கழு மீதினில் ஏறிட
... (உன்னைப்) போற்றாதவர்களும், திரு நீற்றை
அணியாதவர்களுமாகிய சமணர்களை அச்சத்துடன் சுழற்சி கொள்ளுமாறு
(வாது செய்து) அலைத்து, கழுவில் ஏறும்படிச் செய்து,

கூன் ஆன மீனன் இடேறிட கூடலில் வருவோனே ...
கூனனாயிருந்த, மீன் கொடியை உடைய, பாண்டியன் (கூன் நீங்கி)
ஈடேறுமாறு மதுரைக்கு (ஞானசம்பந்தராகச்) சென்றவனே,

பேர் ஆண்மையாளன் நிசாசரர் கோன் இரு கூறாக வாளி
தொடூ ரகுநாயகன்
... மிக்க வீரம் கொண்டவனும், அரக்கர்கள்
அரசனுமான இராவணன் இரண்டு பிளவாக அம்பைச் செலுத்திய
ரகுராமன்,

பூ வாயன் நாரணன் மாயன் இராகவன் மருகோனே ...
தாமரை மலரிதழ் ஒத்த வாயை உடைய நாராயண மூர்த்தி, மாயவன்
ஆகிய இராகவனுடைய மருகனே,

வாழ் நாள் படா வரு சூரர்கள் மாளவெ ... வாழ் நாள் அழியும்படி
வந்த சூரர்கள் இறக்க,

சேண் நாடு உளோர் அவர் வீடது ஈடேறிட ... விண்ணுலகத்தில்
வாழும் தேவர்கள் வீடாகிய பொன்னுலகம் ஈடேறி வாழ,

கோன் ஆகவே வரு நாத குரூ பர குமரேசா ... சேனைக்குத்
தலைவனாக வந்த நாதனே, குருபரனே, குமரேசனே,

வாசா மகோசரமாகிய வாசக ... வாக்குக்கு எட்டாத திருவாக்கை
உடையவனே,

தேச ஆதியோர் அவர் பாதம் அதே தொழ ... நாடுகள்
பலவற்றிலும் உள்ளவர்கள் உனது திருவடிகளைத் தொழுது நிற்க,

பாசா விநாசகனாகவும் மேவிய பெருமாளே. ... பாசங்களை
நீக்குபவனாக விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே.


* திருப்பாதிரிப் புலியூர் என்னும் தலத்தில் பார்வதி சிவபெருமானது அருளைப்
பெற பாதிரி மரத்தின் நிழலில் தவம் செய்தாள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.400  pg 3.401  pg 3.402  pg 3.403 
 WIKI_urai Song number: 1163-1 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1162 - gnAnA vibUshaNi (common)

gnAnAvi bUshaNi kAraNi kAraNi
     kAmAvi mOkini vAkini yAmaLai
          mAmAyi pArvathi thEvigu NAthari ...... umaiyALthan

nAthAkru pAkara thEsikar thEsika
     vEthAka mEyaruL thEvarkaL thEvanal
          eesAsa dApara mEsarsar vEsuri ...... murukOnE

thEnArmo zheevaLi nAyaki nAyaka
     vAnAdu LOrthozhu mAmayil vAkana
          sENALu mAninma nOkara mAkiya ...... maNavALA

seerpAtha sEkara nAkavu nAyinan
     mOkAvi kAravi dAykeda Odave
          seerAka vEkalai yAlunai Othavum ...... aruLvAyE

pENArkaL neerathi dAama NOrkaLai
     chUrAdi yEkazhu meethini lERida
          kUnAna meenani dERida kUdalil ...... varuvOnE

pErANmai yALani sAsarar kOniru
     kURAka vALitho dUragu nAyagan
          pUvAya nAraNan mAyani rAgavan ...... marukOnE

vANALpa dAvaru chUrarkaL mALave
     sENAdu LOravar veedathi dERida
          kOnAka vEvaru nAthagu rUpara ...... kumarEsA

vAsAma kOsara mAkiya vAsaka
     thEsAthi yOravar pAthama thEthozha
          pAsAvi nAsaka nAkavu mEviya ...... perumALE.

......... Meaning .........

gnAnA vibUshaNi kAr aNi kAraNi: She wears a unique ornament called the Knowledge; She is of the hue of dark cloud, She remains the Causal One for everything;

kAmA vimOkini vAkini* yAmaLai: She is the enchantress who instils desire in all lives; She is the Goddess who did penance under the shade of a pAthiri tree (in ThiruppAthirip puliyUr); She has an emerald-green complexion;

mA mAyi pArvathi thEvi guNAthari: She is the great illusionist; She is PArvathi, the possessor of all virtues;

umaiyAL than nAthA krupAkara thEsikar thEsika: and She is UmAdEvi whose consort and a compassionate master is Lord SivA; and You are the Master of that SivA!

vEthAkamE aruL thEvarkaL thEva nal eesA: You graciously taught Him the VEdAs and the scriptural texts, Oh Lord of Lords! You are the most virtuous Lord!

sadA paramEsar sarvEsuri murukOnE: You are the child of the great Lord SivA, with matted hair, and the Supreme Goddess, PArvathi!

thEn Ar mozhee va(L)Li nAyaki nAyaka: You are the consort of VaLLi whose speech is sweet like honey!

vAn nAdu uLOr thozhu mA mayil vAkana: You mount the great peacock that is worshipped by all the DEvAs in the celestial land!

sEN ALum mAnin manOkaram Akiya maNavALA: You are also the beloved consort of DEvayAnai, who is the deer-like damsel ruling the celestial kingdom!

seerpAtha sEkaran Akavu nAyinan mOkA vikAra vidAykeda Odave: In order that the thirst for lust suffered by me, worse than a wretched dog, is destroyed and driven away from me, holding Your hallowed feet upon my head,

seerAkavE kalaiyAl unai Othavum aruLvAyE: bless me kindly with the ability to sing Your glory in artistic language!

pENArkaL neeRu athu idA amaNOrkaLai chUr AdiyE kazhu meethinil ERida: Those camaNAs never respected You nor did they wear the holy ash; You thrashed them (in debate) leaving them stranded and dazed, eventually sending them to the gallows;

kUn Ana meenan idERida kUdalil varuvOnE: and You came to Madhurai (as ThirugnAna Sambandhar) and uplifted (by straightening his back) the hunch-backed king, PANdiyan, whose staff has the emblem of fish!

pEr ANmaiyALan nisAsarar kOn iru kURAka vALi thodU ragunAyagan: He was a very valorous one, leading the clan of the demons; that RAvaNan's body was split into two by the arrow wielded by RaghurAman

pU vAyan nAraNan mAyan irAgavan marukOnE: whose mouth resembles a flower; He is Lord NArAyaNan, the great mystic one who came as RAghavan; and You are His nephew!

vAzh nAL padA varu chUrarkaL mALavE: The demons came to the battlefield to perish;

sEN nAdu uLOr avar veedathu eedERida: the celestials living in the golden land prospered and flourished;

kOn AkavE varu nAtha kurU para kumarEsA: as You came as the leader of the army, Oh Lord! Oh Great Master, Lord KumarA!

vAsA makOsaramAkiya vAsaka: Your words are beyond the reach of any word, Oh Lord!

thEsa AthiyOr avar pAtham athE thozha: The people in all the countries prostate at Your hallowed feet;

pAsA vinAsakanAkavum mEviya perumALE.: and You prominently prevail as the Lord removing all their attachments, Oh Great One!


* ThiruppAthirip puliyUr is the place where Goddess PArvathi did penance under the shade of a pAthiri tree for union with Lord SivA.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1162 gnAnA vibUshaNi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]