திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1157 சுருதி வெகுமுக (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1157 surudhivegumuga (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதனன தான தானன தனதனன தான தானன தனன தனதனன தான தானன தந்ததான ......... பாடல் ......... சுருதி வெகுமுகபு ராண கோடிகள் சரியை கிரியைமக யோக மோகிகள் துரித பரசமய பேத வாதிகள் ...... என்றுமோடித் தொடர வுணரஅரி தாய தூரிய பொருளை யணுகியநு போக மானவை தொலைய இனியவொரு ஸ்வாமி யாகிய ...... நின்ப்ரகாசங் கருதி யுருகியவி ரோதி யாயருள் பெருகு பரமசுக மாம கோததி கருணை யடியரொடு கூடியாடிம ...... கிழ்ந்துநீபக் கனக மணிவயிர நூபு ராரிய கிரண சரண அபி ராம கோமள கமல யுகளமற வாது பாடநி ...... னைந்திடாதோ மருது நெறுநெறென மோதி வேரோடு கருது மலகைமுலை கோதி வீதியில் மதுகை யொடுதறுக ணானை வீரிட ...... வென்றுதாளால் வலிய சகடிடறி மாய மாய்மடி படிய நடைபழகி யாயர் பாடியில் வளரு முகில்மருக வேல்வி நோதசி ...... கண்டிவீரா விருதர் நிருதர்குல சேனை சாடிய விஜய கடதடக போல வாரண விபுதை புளகதன பார பூஷண ...... அங்கிராத விமலை நகிலருண வாகு பூதர விபுத கடககிரி மேரு பூதர விகட சமரசத கோடி வானவர் ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... சுருதி வெகுமுக புராண கோடிகள் ... வேதமும், பலவிதமான கோடிக் கணக்கான புராணங்களும், சரியை கிரியை மக யோக மோகிகள் ... சரியை மார்க்கத்தில்* இருந்து கோவில்களுக்குத் தொண்டு செய்பவர்களும், கிரியை மார்க்கத்தில் நடந்து நியமமாய் மலர் தூவித் தொழுபவர்களும், மகாயோக மார்க்கத்தில் ஆசை பூண்டு யோக நிஷ்டையில் இருப்பவர்களும், துரித பர சமய பேத வாதிகள் என்றும் ஓடி ... கலக்கத்தைத் தரும் பர சமய பேதங்களை மேற்கொண்டு வாதிப்பவர்களும் என்றெல்லாம் ஓடி ஓடி ஆராய்ந்து, தொடர உணர அரிதாய தூரிய பொருளை அணுகி ... தொடர்ந்து பற்றுதற்கும், உணர்ந்து கொள்ளுவதற்கும் அரியதானதான சுத்த நிலைப் பரம் பொருளை அண்டி நெருங்கி, அநுபோகமானவை தொலைய இனிய ஒரு ஸ்வாமியாகிய நின் ப்ரகாசம் கருதி உருகி ... என் உலக அனுபவங்களும் ஆசைகளும் தொலைந்து ஒழிய, இன்பம் தரும் ஒரு ஸ்வாமியாகிய உன்னுடைய பேரொளியை தியானித்து மனம் உருகி, அவிரோதியாய் அருள் பெருகு பரம சுக மா மகா உததி ... எல்லா உயிரும் எனதுயிரின் பகுதிகளே என்னும் பேதமற்ற மனம் உடையவனாக, அருள் நிறைந்த மேலான இன்பப் பெரிய கடலில் கருணை அடியரொடு கூடி ஆடி மகிழ்ந்து ... கருணைமிக்க உன் அடியார்களுடன் கூடி மகிழ்ந்து, நீபக் கனக மணி வயிர நூபுர ... கடப்ப மலரும், பொன், இரத்தினம், வைரம் இவை விளங்கும் சிலம்பு அணிந்ததும், ஆரிய கிரண சரண அபிராம கோமள கமல உகளம் மறவாது பாட நினைந்திடாதோ ... மேலான ஒளி வீசுவதும், அடைக்கலம் தருவதும், அழகிய இளமை விளங்குவதுமான திருவடித் தாமரைகளை (நான்) மறக்காமல் பாட உனது திருவுள்ளம் நினைவு கொள்ளாதோ? மருது நெறு நெறு என மோதி வேரோடு ... மருத மரங்களை நெறுநெறு என்று ஒலிக்குமாறு வேருடன் முறியும்படி (இடுப்பில் கட்டிய உரலோடு) மோதியும், கருதும் அலகை முலை கோதி ... (தன்னை விஷப்பாலை ஊட்டுவித்துக் கொல்லும்) எண்ணத்துடன் வந்த அலகைப் பேய் பூதனையின் கொங்கையைக் குடைந்து தோண்டி அவள் உயிரைப் பருகியும், வீதியில் மதுகையொடு தறுகண் ஆனை வீரிட வென்று ... தெருவில் வலிமையுடன் வஞ்சகமாகக் கொல்ல வந்த (குவலயா பீடம் என்னும்) யானை அலறிக் கூச்சலிட அதை வென்றும், தாளால் வலிய சகடு இடறி மாயமாய் மடி படிய நடை பழகி ... பாதத்தால் வலிமை வாய்ந்த வண்டிச் சக்கரத்தை (சகடாசுரனை) எற்றி உதைத்து, தந்திரமாய் அவன் இறக்கும்படிச் செய்தும், மீண்டும் சாதாரணக் குழந்தை போலத் தவழ்ந்தும், நடந்தும், ஆயர் பாடியில் வளரும் முகில் மருக வேல் விநோத சிகண்டி வீரா ... இடைச் சேரியில் வளர்ந்த மேக வண்ணனாகிய திருமாலின் மருகனே, வேலாயுதத்தை ஏந்தும் அற்புத மூர்த்தியே, மயில் வீரனே, விருதர் நிருதர் குல சேனை சாடிய விஜய ... வீரர்களாகிய அசுரர்களின் குலச் சேனைகளைத் துகைத்தழித்த வெற்றியாளனே, கட தட கபோல வாரண விபுதை புளக தன பார பூஷண ... விசாலமான தாடையை உடைய யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானையின் புளகம் கொண்ட மார்பகங்களை உன் மார்பில் அணிகளாகத் தரித்துள்ளவனே, அம் கிராத விமலை நகில் அருண வாகு பூதர ... அழகிய, வேடர் குலத்துத் தூயவளான வள்ளியின் மார்பினை அணைத்துக் கொள்ளும் சிவந்த தோள் மலையை உடையவனே, விபுத கடக கிரி மேரு பூதர விகட சமர ... தேவர்கள் சேனைக்கு நாயகனே, மலைகளுள் மேருமலையுடன் மாறுபட்டு போர் செய்தவனே, சத கோடி வானவர் தம்பிரானே. ... நூறு கோடி தேவர்களுக்குத் தம்பிரானே. |
* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு: 1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'. 2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'. 3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'. 4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. . . . சிவஞான சித்தியார் சூத்திரம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.386 pg 3.387 pg 3.388 pg 3.389 WIKI_urai Song number: 1159 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1157 - surudhi vegumuga (common) suruthi vekumukapu rANa kOdikaL sariyai kiriyaimaka yOka mOkikaL thuritha parasamaya pEtha vAthikaL ...... enRumOdith thodara vuNara ari thAya thUriya poruLai yaNukiyanu pOka mAnavai tholaiya iniyavoru SvAmi yAkiya ...... ninprakAsam karuthi yurukiyavi rOthi yAyaruL peruku paramasuka mAma kOthathi karuNai yadiyarodu kUdiyAdima ...... kizhnthuneepak kanaka maNivayira nUpu rAriya kiraNa saraNa api rAma kOmaLa kamala yukaLamaRa vAthu pAdani ...... nainthidAthO maruthu neRuneRena mOthi vErOdu karuthu malakaimulai kOthi veethiyil mathukai yoduthaRuka NAnai veerida ...... venRuthALAl valiya sakadidaRi mAya mAymadi padiya nadaipazhaki yAyar pAdiyil vaLaru mukilmaruka vElvi nOthasi ...... kaNdiveerA viruthar nirutharkula sEnai sAdiya vijaya kadathadaka pOla vAraNa viputhai puLakathana pAra pUshaNa ...... angirAtha vimalai nakilaruNa vAku pUthara viputha kadakakiri mEru pUthara vikada samarasatha kOdi vAnavar ...... thambirAnE. ......... Meaning ......... suruthi vekumuka purANa kOdikaL: The VEdAs, millions of diverse mythologies (purANams), sariyai kiriyai maka yOka mOkikaL: people who offer services for worship (sariyai), people whose oblations are ritual offerings of flowers (kiriyai), people who zealously practise the yOgA method (yOgam)*, thuritha para samaya pEtha vAthikaL enRum Odi: people who endlessly argue citing contradictory and confusing tenets of other religions - all these run about forever to research, thodara uNara arithAya thUriya poruLai aNuki: comprehend and grasp It; however, It is beyond their reach. It is that Pure and Supreme principle with which I wish to have a close encounter anupOkamAnavai tholaiya iniya oru SvAmiyAkiya nin prakAsam karuthi uruki: to destroy my worldly experiences and desires. You are such a nonpareil and exhilirating Lord that I want to meditate, with a melting heart, on your dazzling form of effulgence. avirOthiyAy aruL peruku parama suka mA makA uthathi: I wish to gain the true spiritual knowledge with which I could see all lives as non-distinct parts of myself; in that blissful and great ocean of kindness, karuNai adiyarodu kUdi Adi makizhnthu: I wish to happily mingle with Your compassionate devotees. neepak kanaka maNi vayira nUpura: Adorned with kadappa flowers, golden anklets embedded with gems and diamonds, Ariya kiraNa saraNa apirAma kOmaLa kamala ukaLam maRavAthu pAda ninainthidAthO: radiating bright rays, and offering refuge are Your gorgeous and youthful lotus feet; will You not kindly bless me with the ability to remember and sing the glory of those hallowed feet? maruthu neRu neRu ena mOthi vErOdu: He rammed into the two marutha trees (with the stone-barrel tied to His waist), uprooting and felling them with a thunderous noise; karuthum alakai mulai kOthi: He killed the fiend (PUthanai) who plotted to murder Him (with poisonous milk) by sucking her breast and life away; veethiyil mathukaiyodu thaRukaN Anai veerida venRu: when the ferocious and arrogant elephant (KuvalayApeetam) came charging in the street, He fought with and defeated the treacherous elephant which screamed in pain; thALAl valiya sakadu idaRi mAyamAy madi padiya nadai pazhaki: with His foot He forcefully kicked the demon (ChakatAsuran) who came disguised as a cart-wheel and killed him craftily; after accomplishing such miracles, He casually crawled and walked about like a child, Ayar pAdiyil vaLarum mukil maruka: growing up in the shepherds' quarters; He is of the hue of dark cloud; He is Krishna, and You are the nephew of that Lord VishNu! vEl vinOtha sikaNdi veerA: You hold the spear in Your hand, Oh wonderful Lord! You mount the peacock valiantly! viruthar niruthar kula sEnai sAdiya vijaya: You conquered the valorous armies of the demons and killed them triumphantly! kada thada kapOla vAraNa viputhai puLaka thana pAra pUshaNa: You wear on Your chest the precious jewels of the enthralled bosom of DEvayAnai, who was reared by the celestial and wide-jawed elephant (AirAvadham)! am kirAtha vimalai nakil aruNa vAku pUthara: You have mountain-like reddish shoulders that embrace the bosom of VaLLi, the blemishless and beautiful damsel of the hunters! viputha kadaka kiri mEru pUthara vikada samara: You are the Commander-in-Chief of the armies of the celestials! You found fault with Mount MEru, the mountain of mountains, and fought with it, Oh Lord! satha kOdi vAnavar thambirAnE.: You are the Lord of millions of celestials, Oh Great One! |
* The four methods of worship are: 1. sariyai: Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'. 2. kiriyai: Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'. 3. yOgam: Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'. 4. gnAnam: Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |