திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1154 கொலைவிழி சுழல (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1154 kolaivizhisuzhala (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனனத் தனனத், தனதன தனனத் தனனத் தனதன தனனத் தனனத் ...... தனதான ......... பாடல் ......... கொலைவிழி சுழலச் சுழலச் சிலைநுதல் குவியக் குவியக் கொடியிடை துவளத் துவளத் ...... தனபாரக் குறியணி சிதறச் சிதறக் கரவளை கதறக் கதறக் குயில்மொழி பதறப் பதறப் ...... ப்ரியமோகக் கலவியி லொருமித் தொருமித் திலவிதழ் பருகிப் பருகிக் கரமொடு தழுவித் தழுவிச் ...... சிலநாளிற் கையிலுள பொருள்கெட் டருள்கெட் டனைவரும் விடுசிச் சியெனக் கடியொரு செயலுற் றுலகிற் ...... றிரிவேனோ சலநிதி சுவறச் சுவறத் திசைநிலை பெயரப் பெயரத் தடவரை பிதிரப் பிதிரத் ...... திடமேருத் தமனிய நெடுவெற் பதிரப் பணிமணி சிரம்விட் டகலச் சமனுடல் கிழியக் கிழியப் ...... பொருசூரன் பெலமது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறையப் பிறநரி தொடரத் தொடரத் ...... திரள்கூகை பெடையொடு குழறக் குழறச் சுரபதி பரவப் பரவப் ப்ரபையயில் தொடுநற் குமரப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கொலை விழி சுழலச் சுழலச் சிலை நுதல் குவியக் குவியக் கொடி இடை துவளத் துவள ... கொலை செய்வது போன்ற கொடுமையைக் காட்டும் கண் மேலும் மேலும் சுழல, வில்லைப் போல் வளைந்த புருவம் மேலும் மேலும் குவிந்து நெருங்க, கொடி போன்ற இடுப்பு மேலும் மேலும் துவண்டு போக, தன பாரக் குறி அணி சிதறச் சிதறக் கரம் வளை கதறக் கதறக் குயில் மொழி பதறப் பதறப் ப்ரிய மோகக் கலவியில் ஒருமித்து ஒருமித்து ... மார்பக பாரங்களாகக் குறிக்கப்பட்ட இடத்தில் உள்ள ஆபரணங்கள் மேலும் மேலும் சிதற, கைகளில் அணிந்துள்ள வளையல்கள் மேலும் மேலும் ஒலிக்க, குயில் போன்ற பேச்சு மேலும் மேலும் கலக்கம் உற, ஆசை மோகத்தால் ஏற்பட்ட புணர்ச்சியில் மேலும் மேலும் ஒன்று பட்டு, இலவு இதழ் பருகிப் பருகிக் கரமொடு தழுவித் தழுவிச் சில நாளில் கையில் உள பொருள் கெட்டு அருள் கெட்டு அனைவரும் விடு சீச் சீ எனக் கடி ஒரு செயல் உற்று உலகில் திரிவேனோ ... இலவம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறல்களை மேலும் மேலும் பருகி, கைகளால் மேலும் மேலும் தழுவி அணைத்து, சில நாட்களில் கையில் உள்ள பொருள்கள் அழிந்து போய், நல்ல அருள் குணமும் கெட்டுப் போய், யாவரும் சீ சீ விலகு என்று அதட்டுகின்ற நிலைமையை அடைந்து இந்த உலகத்தில் திரிவேனோ? சல நிதி சுவறச் சுவறத் திசை நிலை பெயரப் பெயரத் தட வரை பிதிரப் பிதிரத் திட மேருத் தமனிய நெடு வெற்பு அதிர ... கடலடி மேலும் மேலும் வற்றிட, திக்குகளின் நிலையும் மேலும் மேலும் அலைய, பெரிய கிரெளஞ்ச மலை மேலும் மேலும் சிதறுண்டு விழ, வலிமை பொருந்திய மேரு என்னும் பொன் மலையாகிய நீண்ட மலை அதிர்ச்சி அடைய, பணி மணி சிரம் விட்டு அகலச் சமன் உடல் கிழியக் கிழியப் பொரு சூரன் பெலம் அது குறையக் குறையக் கருவிகள் பறையப் பறைய ... பாம்பு (ஆதிசேஷனின்) சிரத்தில் உள்ள மணி அதனுடைய தலையை விட்டுச் சிதறி விழ, யமனுடைய உடல் (பல உயிர்களைக் கவர்வதால்) அலுப்புண்டு குலைய, சண்டை செய்யும் சூரனுடய உடல் வலிமை மேலும் மேலும் குறைய, (பகைவர்களின்) ஆயுதங்கள் மேலும் மேலும் அழிபட்டு ஒழிய, பிற நரி தொடரத் தொடரத் திரள் கூகை பெடையொடு குழறக் குழறச் சுர பதி பரவப் பரவ ... நரிகளும் கழுகுகள் முதலிய பிறவும் மேலும் மேலும் (பிணங்களைத் தின்னத்) தொடர்ந்து நெருங்க, கூட்டமான கோட்டான்கள் பெண் கோட்டான்களோடு மேலும் மேலும் கூவ, தேவேந்திரன் தொழுது கொண்டே இருக்க, ப்ரபை அயில் தொடு நல் குமரப் பெருமாளே. ... ஒளி வீசும் வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல குமரப் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.380 pg 3.381 pg 3.382 pg 3.383 WIKI_urai Song number: 1157 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1154 - kolaivizhi suzhala (common) kolaivizhi suzhalac chuzhalac chilainuthal kuviyak kuviyak kodiyidai thuvaLath thuvaLath ...... thanapArak kuRiyaNi sithaRac chithaRak karavaLai kathaRak kathaRak kuyilmozhi pathaRap pathaRap ...... priyamOkak kalaviyi lorumith thorumith thilavithazh parukip parukik karamodu thazhuvith thazhuvic ...... chilanALiR kaiyiluLa poruLket taruLket tanaivarum vidusic chiyenak kadiyoru seyalut Rulakit ...... RirivEnO salanithi suvaRac chuvaRath thisainilai peyarap peyarath thadavarai pithirap pithirath ...... thidamEruth thamaniya neduveR pathirap paNimaNi siramvit takalac chamanudal kizhiyak kizhiyap ...... porucUran pelamathu kuRaiyak kuRaiyak karuvikaL paRaiyap paRaiyap piRanari thodarath thodarath ...... thiraLkUkai pedaiyodu kuzhaRak kuzhaRac churapathi paravap paravap prapaiyayil thodunaR kumarap ...... perumALE. ......... Meaning ......... kolai vizhi suzhalac chuzhalac chilai nuthal kuviyak kuviyak kodi idai thuvaLath thuvaLa: Their murderous and evil eyes keep on rolling; their bow-like eye-brows converge shrivelling further and further; their creeper-like waist goes limp twirling more and more; thana pArak kuRi aNi sithaRac chithaRak karam vaLai kathaRak kathaRak kuyil mozhi pathaRap pathaRap priya mOkak kalaviyil orumiththu orumiththu: the jewellery adorning the places covering their bosom breaks off and gets scattered one by one; the bangles adorning their wrists keep on jingling; their cuckoo-like speech sounds more and more jumbled; I have been indulging in making love to these whores led by an obsessive passion; ilavu ithazh parukip parukik karamodu thazhuvith thazhuvic chila nALil kaiyil uLa poruL kettu aruL kettu anaivarum vidu seec chee enak kadi oru seyal utRu ulakil thirivEnO: imbibing more and more of the saliva oozing in their lips, red like the silk-cotton flower, hugging them tighter and tighter with my arms, losing in a few days whatever money that was left with me and seeing my good virtue and grace destroyed, I have reached a stage where everyone scornfully rebukes me to get lost; am I supposed to roam about in this world in such a plight? sala nithi suvaRac chuvaRath thisai nilai peyarap peyarath thada varai pithirap pithirath thida mEruth thamaniya nedu veRpu athira: The sea-bed went lower and lower being dried out; the large mount Krouncha kept on getting shattered being bombarded; the strong and long range of the golden Mount mEru kept on shaking; paNi maNi siram vittu akalac chaman udal kizhiyak kizhiyap poru cUran pelam athu kuRaiyak kuRaiyak karuvikaL paRaiyap paRaiya: the precious gemstone in the hood of the serpent (AdhisEshan) was spewed out and smashed to pieces; the body of Yaman (God of Death) withered and lost its form (due to excessive work of taking many a life); the strength of the warring demon SUran deteriorated further and further; the enemies' weapons were destroyed to a greater and greater extent; piRa nari thodarath thodarath thiraL kUkai pedaiyodu kuzhaRak kuzhaRac chura pathi paravap parava: the foxes, eagles and others gathered in an increasing number on the battlefield (to devour the corpses); a bunch of owls with their female counter-parts assembled there making a din of noise; and Indra, the Leader of the celestials, kept on worshipping incessantly; prapai ayil thodu nal kumarap perumALE.: when You wielded the dazzling spear, Oh Virtuous Lord KumarA, the Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |