திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1143 எட்டுடன் ஒரு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1143 ettudanoru (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்தன தனதன தானா தனதன தத்தன தனதன தானா தனதன தத்தன தனதன தானா தனதன ...... தனதான ......... பாடல் ......... எட்டுட னொருதொளை வாயா யதுபசு மட்கல மிருவினை தோயா மிகுபிணி யிட்டிடை செயவொரு போதா கிலுமுயிர் ...... நிலையாக எப்படி யுயர்கதி நாமே றுவதென எட்பகி ரினுமிது வோரார் தமதம திச்சையி னிடருறு பேரா சைகொள்கட ...... லதிலேவீழ் முட்டர்க ணெறியினில் வீழா தடலொடு முப்பதி னறுபதின் மேலா மறுவரு முற்றுத லறிவரு ஞானோ தயவொளி ...... வெளியாக முக்குண மதுகெட நானா வெனவரு முத்திரை யழிதர ஆரா வமுதன முத்தமிழ் தெரிகனி வாயா லருளுவ ...... தொருநாளே திட்டென எதிர்வரு மாகா ளியினொடு திக்கிட தரிகிட தீதோ மெனவொரு சித்திர வெகுவித வாதா டியபத ...... மலராளன் செப்புக வெனமுன மோதா துணர்வது சிற்சுக பரவெளி யீதே யெனஅவர் தெக்ஷண செவிதனி லேபோ தனையருள் ...... குருநாதா மட்டற அமர்பொரு சூரா திபனுடல் பொட்டெழ முடுகிவை வேலா லெறிதரு மற்புய மரகத மாதோ கையில்நட ...... மிடுவோனே வச்சிர கரதல வானோ ரதிபதி பொற்புறு கரிபரி தேரோ டழகுற வைத்திடு மருமக னேவா ழமரர்கள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... எட்டுடன் ஒரு தொளை வாயாயது ... (8+1) ஒன்பது தொளை வாயில்களை* உடைய பசுமண் கலம் இரு வினை தோயா ... பச்சை மண்ணாலாகிய பாத்திரம் (ஆகிய இந்த உடல்), நல் வினை, தீ வினை ஆகிய இரு வினைகளிலும் தோய்ந்து, மிகு பிணி இட்டிடை செய ஒரு போதாகிலும் உயிர் நிலையாக ... மிக்கு வரும் நோய்கள் ஒரு பொழுதினிலேனும் (உடலில்) உயிர் நிலைத்திருப்பதற்குத் தடைகள் செய்ய, எப்படி உயர் கதி நாம் ஏறுவது என ... எவ்வாறு மேலான நற்கதியை நாம் கரை ஏறி அடைவது என்று எள் பகிரினும் இது ஓரார் தம தமது ... எள் பிளவுபட்ட அளவு கூட இதன் உண்மையை அறியாதவர்களாய் தங்கள் தங்களுடைய இச்சையின் இடர் உறு பேராசை கொள் கடல் அதிலே வீழ் ... ஆசை போன வழியே துன்பத்தைத் தருகின்ற பேராசை என்கின்ற கடலில் வீழ்கின்ற முட்டர்கள் நெறியினில் வீழாது ... மூடர்களின் தீயவழியில் நான் விழாமல், அடலொடு முப்பதின் அறுபதின் மேலாம் அறுவரும் ... வலிமை கொண்டதான தொண்ணூற்று ஆறு தத்துவங்களை** முற்றுதல் அறி வரு ஞானோதய ஒளி வெளியாக ... முற்றிக் கடந்த அறிவுக்கு எட்டாத ஞானம் உதயமாகும்படியான விளக்கமானது வெளிப்பட, முக்குணமது கெட நானா என வரும் ... சத்துவம், இராசதம், தாமதம் என்ற முக்குணங்கள் அழிய, நான் நான் என்று எழுகின்ற ஆணவ உணர்ச்சியாகிய முத்திரை அழிதர ... அந்த அடையாள முத்திரை அழிய, ஆரா அமுது அ(ன்)ன முத்தமிழ் தெரி கனி வாயால் ... தெவிட்டாத அமுது என்னும்படியான முத்தமிழை தெரிந்து போதிக்க வல்ல (உனது) இனிய வாக்கால் அருளுவது ஒருநாளே ... உபதேசித்து அருளுவதும் ஒரு நாள் எனக்குக் கிட்டுமா? திட்டென எதிர் வரு மாகாளியினொடு ... திடீரென்று (வாதித்து) எதிர்த்து நின்ற மகா காளியுடன் திக்கிட தரிகிட தீதோம் என ஒரு ... திக்கிட தரிகிட தீதோம் என்ற ஒரு ஓசையுடன் சித்திர வெகுவித வாதாடிய பத மலராளன் ... ஒப்பற்ற, விசித்திரமான, பல வகையதான, எதிர்நடனம் ஆடிய திருவடி மலர்களைக் கொண்ட சிவபெருமான், செப்புக என முனம் ஓதாது உணர்வது ... உபதேச மொழியாகிய பிரணவத்தின் உட்பொருளைச் சொல்லுவாயாக என்று கேட்க, முன்பு ஓதாமலே உணர வேண்டியதும், சிற் சுக பர வெளி ஈதே என ... ஞான ஆனந்தமானதுமான மேலான ஞான ஆகாசமானதுமான பொருள் இதுதான் என்று அவர் தெக்ஷண செவிதனிலே போதனை அருள் குரு நாதா ... அவருடைய வலது காதில் உபதேசித்து அருளிய குரு நாதனே, மட்டு அற அமர் பொரும் சூராதிபன் உடல் ... குறையற்ற வழியில் சண்டை செய்த சூரனாகிய தலைவனுடைய உடல் பொட்டு எழ முடுகி வை வேலால் எறி தரு மல் புய ... பொடிபட்டு அழிய வேகமாய் எதிர்த்து, கூரிய வேல் கொண்டு எறிந்திட்ட வளப்பம் பொருந்திய புயங்களைக் கொண்டவனே, மரகத மா தோகையில் நடம் இடுவோனே ... பச்சை நிறம் கொண்ட அழகிய மயிலின் மீது நடனம் செய்பவனே, வச்சிர கர தல வானோர் அதிபதி ... வஜ்ராயுதத்தைக் கையில் கொண்ட தேவர்கள் தலைவனாகிய இந்திரன், பொற்பு உறு கரி பரி தேரோடு அழகுற ... அழகு கொண்ட (ஐராவதம் என்ற) யானை, (உச்சைச்சிரவம் என்ற) குதிரை, தேர் இவைகளோடு பொலிவு பெற்று விளங்கும்படி வைத்திடும் மருமகனே வாழ் அமரர்கள் பெருமாளே. ... அவனை வாழ வைத்த மருமகனே, வாழ்ந்து விளங்கும் தேவர்களின் பெருமாளே. |
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள். |
** 96 தத்துவங்கள் பின்வருமாறு: 36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5. ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி. ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.342 pg 3.343 pg 3.344 pg 3.345 pg 3.346 pg 3.347 WIKI_urai Song number: 1146 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1143 - ettudan oru (common) ettudan oruthoLai vAyAyadhu pasu matkalam iruvinai thOyA migupiNi ittidai seya oru pOdhAgilum uyir ...... nilaiyAga eppadi uyargathi nAm ERuvadhena etpagirinum idhu OrAr thama thamadh ichchaiyin idar uRu perAsaikoL kadal ...... adhilE veezh muttarga NeRiyinil veezhA thadalodu muppadhin aRupadhin mElAm aRuvaru mutrudhal aRivaru nyAnOdhaya oLi ...... veLiyAga mukguNam adhukeda nAnA enavaru mudhdhirai azhithara ArA amudhana muththamizh theri kani vAyAl aruLuvadh ...... orunALE dhittena edhirvaru mAkALiyinodu dhikkita tharikita dhee thOmena oru chiththira veguvidha vAdhAdiya padha ...... malarALan seppuga ena munam OdhAdh uNarvadhu siRsuka paraveLi eedhE ena avar dhekshaNa sevithanilE bOdhanai aruL ...... gurunAthA mattaRa amarporu sUrA dhipan udal pottezha mudugi vaivElAl eRitharum maRbuya marakatha mAthOgaiyil nata ...... miduvOnE vajjira karathala vAnOr adhipathi poRpuRu karipari thErOd azhaguRa vaiththidu marumaganE vAzh amarargaL ...... perumALE. ......... Meaning ......... ettudan oruthoLai vAyAyadhu: This body has (8+1) nine portals*; pasumatkalam iruvinai thOyA: this vessel is made of raw clay, mingled with both good and bad deeds; migupiNi ittidai seya oru pOdhAgilum uyir nilaiyAga: the excessive diseases inflicted thereon hinder the existence of life in this body at any time. eppadi uyargathi nAm ERuvadhena: Not knowing how they are going to climb up to the shore of salvation, etpagirinum idhu OrAr thama thamadh: many people, who have never realised an iota of truth, pursue, ichchaiyin idar uRu perAsaikoL kadal adhilE veezh: the path of desire, eventually falling into the disastrous sea of greed; muttarga NeRiyinil veezhAthu: I do not want to follow the lead of those fools. adalodu muppadhin aRupadhin mElAm aRuvarum mutrudhal: Conquering the powerful tenets, numbering ninety-six**, aRivaru nyAnOdhaya oLi veLiyAga: and in order that the True Knowledge, beyond my intellect, dawns on me and for the emergence of that effulgence, mukguNam adhukeda: for the destruction of the three characteristics (namely, tranquility, aggressiveness and insipidity), nAnA enavaru mudhdhirai azhithara: and for the erasure of the stamp of egoism and arrogance, ArA amudhana muththamizh theri kani vAyAl aruLuvadh orunALE: will there be a day when You will open Your sweet mouth and preach to me in nectar-like Tamil language? dhittena edhirvaru mAkALiyinodu: Goddess KALi suddenly confronted Him in a challenging posture; dhikkita tharikita dhee thOmena oru: (taking up that challenge) to the meter of "dhikkita tharikita dhee thOm", chiththira veguvidha vAdhAdiya padha malarALan: He danced the Cosmic Dance beautifully and in a unique way; that Lord SivA, with the hallowed feet, seppuga ena munam OdhAdh uNarvadhu: beseeched You to reveal to Him the significance of the PraNava ManthrA, which was never before stated and which could only be perceived; siRsuka paraveLi eedhE ena: Stating that It was the only blissful and Cosmic Truth, avar dhekshaNa sevithanilE bOdhanai aruL gurunAthA: You graciously preached into His right ear the significance of that ManthrA, Oh Master of Masters! mattaRa amarporu sUrA dhipan udal: The body of SUran, the leader of the Demons, who fought a meticulous war, pottezha mudugi vaivElAl eRitharum maRbuya: was shattered to pieces when You swiftly wielded Your sharp spear; You have such powerful and strong shoulders! marakatha mAthOgaiyil nata miduvOnE: Mounting the emerald-green peacock, You dance so beautifully! vajjira karathala vAnOr adhipathi: IndrA, the Leader of the celestials, who wields the weapon vajra, poRpuRu karipari thErOd azhaguRa vaiththidu marumaganE: who has the elegant elephant (AirAvadham), the horse (Uchchaisravas) and chariots, owes His status to You, His dear son-in-law! vAzh amarargaL perumALE.: You are also the Lord of the prosperous celestials, Oh Great One! |
* The nine portals of the body: two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs. |
** The 96 thathvAs (tenets) are as follows: 36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5. 5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos. 35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |