திருப்புகழ் 1134 இருகுழை மீதோடி  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1134 irukuzhaimeedhOdi  (common)
Thiruppugazh - 1134 irukuzhaimeedhOdi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானான தானன
     தனதன தானான தானன
          தனதன தானான தானன ...... தனதான

......... பாடல் .........

இருகுழை மீதோடி மீளவும்
     கயல்களு மாலால காலமும்
          ரதிபதி கோலாடு பூசலு ...... மெனவேநின்

றிலகிய கூர்வேல்வி லோசன
     ம்ருகமத பாடீர பூஷித
          இளமுலை மாமாத ரார்வச ...... முருகாதே

முருகவிழ் கூதாள மாலிகை
     தழுவிய சீர்பாத தூளியின்
          முழுகிவி டாய்போம னோலயம் ...... வரவோது

முழுமதி மாயாவி காரமு
     மொழிவது வாசாம கோசர
          முகுளித ஞானோப தேசமு ...... மருள்வேணும்

அருமறை நூலோதும் வேதியன்
     இரணிய ரூபாந மோவென
          அரிகரி நாராய ணாவென ...... ஒருபாலன்

அவனெவ னாதார மேதென
     இதனுள னோவோது நீயென
          அகிலமும் வாழ்வான நாயக ...... னெனவேகி

ஒருகணை தூணோடு மோதிட
     விசைகொடு தோள்போறு வாளரி
          யுகிர்கொடு வாராநி சாசர ...... னுடல்பீறும்

உலகொரு தாளான மாமனும்
     உமையொரு கூறான தாதையும்
          உரைதரு தேவாசு ராதிபர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரு குழை மீது ஓடி மீளவும் கயல்களும் ஆலாலகாலமும்
ரதி பதி கோல் ஆடு பூசலும் எனவே நின்று
... இரண்டு
குண்டலங்களின் மீது ஓடித் தாக்கி மீள்வனவும், கயல் மீன்களும்
ஆலகால விஷமும் போன்றவையும், ரதியின் கணவனான
மன்மதனுடைய மலர் அம்புகள் செய்யும் கலகம் என்றும் கூறும்படி நின்று

இலகிய கூர் வேல் விலோசன ... விளங்கும் கூரிய வேலைப் போன்ற
கண்கள் உடையவர்களாகி,

ம்ருகமத பாடீர பூஷித இள முலை மா மாதரார் வசம்
உருகாதே
... கஸ்தூரி, சந்தனம் ஆகியவை அலங்கரிக்கும் இள
மார்பகங்களை உடைய அழகிய விலைமாதர்களின் வசத்தில் பட்டு
உருகாமல்,

முருகு அவிழ் கூதாள மாலிகை தழுவிய சீர் பாத தூளியின்
முழுகி
... நறு மணம் வீசுகின்ற கூதாள மலர் மாலை தழுவும் (உனது)
சிறப்பு வாய்ந்த திருவடிப் பொடிகளில் நான் முழுகி,

விடாய் போம் மனோலயம் வர ஓது முழு மதி ... எல்லாவிதமான
ஆசைகளை ஒழிக்கக் கூடிய மன ஒடுக்கம் வரும்படிக் கற்பிக்க வல்ல
முற்றின அறிவையும்,

மாயா விகாரமும் ஒழிவது வாசா மகோசர ... உலக மாயையின்
துர்க்குணங்களை நீக்க வல்லதும், வாக்குக்கு எட்டாததாய்

முகுளித ஞான உபதேசமும் அருள்
வேணும்
... அரும்பு விட்டு விளங்குவதுமான ஞான உபதேசத்தையும்
தந்து எனக்கு நீ அருள் புரிய வேண்டும்.

அரு மறை நூல் ஓதும் வேதியன் இரணிய ரூபா நமோ என ...
அருமை வாய்ந்த வேத நூல்களில் வல்ல வேதியன் இரணிய ரூபா
நமோ என்று பாடம் சொல்லிக்கொடுத்த போது,

அரி கரி நாராயணா என ஒரு பாலன் ... ஹரி ஹரி நாராயணா
நமோ என்று சொன்ன ஒப்பற்ற குழந்தையாகிய பிரகலாதனை

அவன் எவன் ஆதாரம் ஏது என இதன் உளனோ ஓது நீ
என
... (நோக்கி இரணியன்) அவன் எவன், என்ன ஆதாரம், (இந்தத்
தூணில் இருக்கிறானா) நீ சொல்லுக என்று கேட்க,

அகிலமும் வாழ்வான நாயகன் என ஏகி ஒரு கணை
தூணோடு மோதிட
... (பிரகலாதன்) எங்கள் நாயகன் உலகில்
எல்லாப் பொருள்களிலும் வாழ்கின்ற நாயகன் என்று சொல்லவும்,
இரணியன் சென்று எதிரிலிருந்த பெரிய தூணை மோதி அறைய,

விசை கொடு தோள் போறு வாள் அரி உகிர் கொடு வாரா ...
வேகத்துடன், பெரும் தோள்களுடனும், ஒளி பொருந்திய நரசிங்க
வடிவத்துடனும் கையில் நகங்களுடன் வந்து

நிசாசரன் உடல் பீறும் உலகு ஒரு தாள் ஆன மாமனும் ...
அரக்கன் இரணியனுடைய உடலைக் கிழித்தவனும், உலகம்
எல்லாம் ஒரு அடியால் அளந்த மாமனுமாகிய திருமாலும்,

உமை ஒரு கூறான தாதையும் ... உமா தேவியை உடம்பில் ஒரு
பாகத்தில் தன்னிடம் வைத்துள்ள தந்தையாகிய சிவபெருமானும்

உரை தரு தேவா சுர அதிபர் பெருமாளே. ... போற்றிப் புகழும்
தேவனே, தேவர் தலைவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.316  pg 3.317  pg 3.318  pg 3.319  pg 3.320  pg 3.321 
 WIKI_urai Song number: 1137 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1134 - irukuzhai meedhOdi (common)

irukuzhai meethOdi meeLavum
     kayalkaLu mAlAla kAlamum
          rathipathi kOlAdu pUsalu ...... menavEnin

Rilakiya kUrvElvi lOchana
     mrukamatha pAdeera pUshitha
          iLamulai mAmAtha rArvasa ...... murukAthE

murukavizh kUthALa mAlikai
     thazhuviya seerpAtha thULiyin
          muzhukivi dAypOma nOlayam ...... varavOthu

muzhumathi mAyAvi kAramu
     mozhivathu vAsAma kOsara
          mukuLitha njAnOpa thEsamu ...... maruLvENum

arumaRai nUlOthum vEthiyan
     iraNiya rUpAna mOvena
          arikari nArAya NAvena ...... orupAlan

avaneva nAthAra mEthena
     ithanuLa nOvOthu neeyena
          akilamum vAzhvAna nAyaka ...... nenavEki

orukaNai thUNOdu mOthida
     visaikodu thOLpORu vALari
          yukirkodu vArAni sAsara ...... nudalpeeRum

ulakoru thALAna mAmanum
     umaiyoru kURAna thAthaiyum
          uraitharu thEvAsu rAthipar ...... perumALE.

......... Meaning .........

iru kuzhai meethu Odi meeLavum kayalkaLum AlAlakAlamum rathi pathi kOl Adu pUsalum enavE ninRu: They swiftly extend upto the ear-studs and return after attacking them; they look like kayal fish and act like the AlakAla poison; they represent the riotous flowery arrows shot by Manmathan (God of Love), the consort of Rathi;

ilakiya kUr vEl vilOsana: they are the sharp spear-like eyes of the whores;

mrukamatha pAdeera pUshitha iLa mulai mA mAtharAr vasam urukAthE: these whores have young bosom smeared with musk and sandal paste; I do not wish to melt down under their spell;

muruku avizh kUthALa mAlikai thazhuviya seer pAtha thULiyin muzhuki: instead, I wish to be drown in the specks of Your hallowed feet hugged by the fragrant KUthAla garland;

vidAy pOm manOlayam vara Othu muzhu mathi: kindly teach me the mature knowledge that will inculcate a mental discipline to get rid of all kinds of desires;

mAyA vikAramum ozhivathu vAsA makOsara mukuLitha njAna upathEsamum aruL vENum: also grant me graciously the realisation, that will blossom within me beyond any description in words, to abolish all vices of this delusory world!

aru maRai nUl Othum vEthiyan iraNiya rUpA namO ena: The priest who was well-versed in scriptures began his lesson with the words "HiraNya RUpA namO" (oblations to the form of HiraNya);

ari kari nArAyaNA ena oru pAlan: but the matchless little boy (Prahladhan) said "Hari, Hari nArAyaNA namO" (oblations to Hari Hari, Lord VishNu);

avan evan AthAram Ethu ena ithan uLanO Othu nee ena: (HiraNyA challenged PrahlAdhan) "Who is he? What is the proof? (Is he in this pillar?) Tell me now";

akilamum vAzhvAna nAyagan ena Eki oru kaNai thUNOdu mOthida: PrahlAthan replied "our Lord is the Lord who is omnipresent"; then, HiraNyA went across and banged the huge pillar;

visai kodu thOL pORu vAL ari ukir kodu vArA: swiftly came out of the pillar, the dazzling form of Narasimhan (Half-human and Half-Lion) with large shoulders and sharp nails in His hands;

nisAsaran udal peeRum ulaku oru thAL Ana mAmanum: He tore the body of the demon, HiraNyA; He is the One who measured the entire earth with one foot; He is Lord VishNu, Your uncle, who along with

umai oru kURAna thAthaiyum: Lord SivA, Your father, who has UmAdEvi concorporate on a part of His body,

urai tharu thEvA sura athipar perumALE.: praises You in worship, Oh Lord! You are the Lord of all leaders of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1134 irukuzhai meedhOdi - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]