திருப்புகழ் 1130 இடமருவுஞ் சீற்ற  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1130 idamaruvumcheetRa  (common)
Thiruppugazh - 1130 idamaruvumcheetRa - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனனந் தாத்த தான தத்த
     தனதனனந் தாத்த தான தத்த
          தனதனனந் தாத்த தான தத்த ...... தனதான

......... பாடல் .........

இடமருவுஞ் சீற்ற வேலெ டுத்து
     விடமுழுதுந் தேக்கி யேநி றைத்து
          இருகுழையுந் தாக்கி மீள்க யற்கண் ...... வலையாலே

இனிமையுடன் பார்த்து ளேய ழைத்து
     முகபடமுஞ் சேர்த்து வார ழுத்தும்
          இருவரையுங் காட்டி மாலெ ழுப்பி ...... விலைபேசி

மடலவிழும் பூக்க ளால்நி றைத்த
     சுருளளகந் தூற்றி யேமு டித்து
          மறுகிடைநின் றார்க்க வேந கைத்து ...... நிலையாக

வருபொருள்கண் டேற்க வேப றிக்கும்
     அரிவையர்தம் பேச்சி லேமு ழுக்க
          மனமுருகுந் தூர்த்த னாயி ளைத்து ...... விடலாமோ

படிமுழுதுங் கூர்த்த மாகு லத்தி
     முதுமறையின் பேச்சி நூலி டைச்சி
          பகிர்மதியம் பூத்த தாழ்ச டைச்சி ...... யிருநாழி

படிகொடறங் காத்த மாப ரைச்சி
     மணிவயிரங் கோத்த தோள்வ ளைச்சி
          பலதிசையும் போய்க்கு லாவி ருப்பி ...... நெடுநீலி

அடுபுலியின் தோற்ப டாமு டைச்சி
     சமரமுகங் காட்டு மால்வி டைச்சி
          அகிலமுமுண் டார்க்கு நேரி ளைச்சி ...... பெருவாழ்வே

அரியயனின் றேத்த வேமி குத்த
     விபுதர்குலம் பேர்க்க வாளெ டுத்த
          அசுரர்குலம் பாழ்க்க வேலெ டுத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இடம் மருவும் சீற்ற வேல் எடுத்து விடம் முழுதும் தேக்கியே
நிறைத்து
... சினம் தங்கிய வேலாயுதத்தை எடுத்து விஷம் முழுமையும்
நிரம்பும்படி நிறைவு செய்து,

இரு குழையும் தாக்கி மீள் கயல் கண் வலையாலே இனிமை
உடன் பார்த்து உ(ள்)ளே அழைத்து
... இரு காதுகளையும் மோதி
மீள்கின்றதும் கயல் மீன் போன்றதுமான (முன்பு சொன்ன வேலை ஒத்த)
கண்கள் என்னும் வலையால் விலைமாதர் (ஆடவரை) இன்பகரமாக
நோக்கி, தமது வீட்டுக்குள்ளே அழைத்துச் சென்று,

முக படமும் சேர்த்து வார் அழுத்தும் இரு வரையும் காட்டி
மால் எழுப்பி விலை பேசி
... முகத்தைத் துணியால் மூடி,
ரவிக்கையை அழுத்தும் மலை போன்ற இரு மார்பகங்களையும் காட்டி
காம ஆசையை ஊட்டி, கிடைக்க வேண்டிய பொருள் எவ்வளவு என்று
பேசி முடித்து,

மடல் அவிழும் பூக்களால் நிறைத்த சுருள் அளகம் தூற்றியே
முடித்து
... இதழ்கள் விரிந்த மலர்களால் நிறைக்கப்பட்ட சுருண்ட
கூந்தலை விரித்து உதறி முடித்து,

மருகிடை நின்று ஆர்க்கவே நகைத்து நிலையாக வரு
பொருள் கண்டு ஏற்கவே பறிக்கும்
... தெருவிடையே நின்று
நிரம்பச் சிரித்து, மாறுதல் இல்லாமல் என்றும் வருவதான பொருள்
உள்ளவர்களைக் கண்டதும் முன்னதாகவே பறிக்கின்ற,

அரிவையர் தம் பேச்சிலே முழுக்க மனம் உருகும்
தூர்த்தனாய் இளைத்து விடலாமோ
... விலைமாதர்களின் பேச்சிலே
முற்றிலும் மனம் உருகுகின்ற காமுகனாக நான் சோர்வு அடையலாமோ?

படி முழுதும் கூர்த்த மா குலத்தி முது மறையின் பேச்சி
நூல் இடைச்சி
... உலகம் முழவதும் நிறைந்து நிற்கும் சிறந்த அழகி,
வேதங்களால் பேசப்படுபவள், நுண்ணிய இடையை உடையவள்,

பகிர் மதியம் பூத்த தாழ் சடைச்சி இரு நாழி படி கொடு
அறம் காத்த மா பரைச்சி
... பிறைச் சந்திரன் விளங்கும், தாழ்ந்து
தொங்கும் சடையை உடையவள், இரண்டு நாழி எனப்படும் படி
நெல்லைக் கொண்டு (காஞ்சீபுரத்தில்) முப்பத்திரண்டு
அறங்களையும்* செய்த சிறந்த பரதேவதை,

மணி வயிரம் கோத்த தோள் வளைச்சி பல திசையும் போய்க்
குலா விருப்பி நெடு நீலி அடு புலியின் தோல் படாம்
உடைச்சி
... ரத்தினங்களும் வைரங்களும் கோத்த வளையல்களைக்
கொண்ட தோளை உடையவள், பல திக்குகளிலும் சென்று விளங்கும்
விருப்பத்தை உடையவள், பெருமை மிக்க நீல நிறம் உடையவள்,
கொல்ல வரும் புலியின் தோலைச் சேலையாக உடுத்துள்ளவள்,

சமர முகம் காட்டு(ம்) மால் விடைச்சி அகிலமும் உண்டார்க்கு
நேர் இளைச்சி பெருவாழ்வே
... போர் செய்யும் முகத்தைக் காட்டும்
(நந்தி என்ற) பெரிய ரிஷபத்தை வாகனமாக உடையவள், உலகம்
முழுதையும் உண்ட திருமாலுக்கு நேர் தங்கையாகிய பார்வதியின்
பெருஞ் செல்வமே,

அரி அயன் நின்று ஏத்தவே மிகுத்த விபுதர் குலம் பேர்க்க
வாள் எடுத்த
... திருமாலும் பிரமனும் நின்று வணங்கவும் சிறந்த
தேவர் கூட்டம் சிறையனின்று மீட்சி பெறவும் வாளாயுதத்தை
எடுத்தவனும்,

அசுரர் குலம் பாழ்க்க வேல் எடுத்த பெருமாளே. ... அசுரர்
கூட்டம் பாழாக வேலாயுதத்தை எடுத்தவனுமாகிய பெருமாளே.


* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:

சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு,
பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு
உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல்,
அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல்,
நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி
அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,
ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,
தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு
உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.306  pg 3.307  pg 3.308  pg 3.309 
 WIKI_urai Song number: 1133 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1130 - idamaruvum cheetRa (common)

idamaruvunj cheetRa vEle duththu
     vidamuzhuthun thEkki yEni Raiththu
          irukuzhaiyun thAkki meeLka yaRkaN ...... valaiyAlE

inimaiyudan pArththu LEya zhaiththu
     mukapadamunj chErththu vAra zhuththum
          iruvaraiyung kAtti mAle zhuppi ...... vilaipEsi

madalavizhum pUkka LAlni Raiththa
     suruLaLakan thUtRi yEmu diththu
          maRukidainin RArkka vEna kaiththu ...... nilaiyAka

varuporuLkaN dERka vEpa Rikkum
     arivaiyartham pEcchi lEmu zhukka
          manamurukun thUrththa nAyi Laiththu ...... vidalAmO

padimuzhuthung kUrththa mAku laththi
     muthumaRaiyin pEcchi nUli daicchi
          pakirmathiyam pUththa thAzhcha daicchi ...... yirunAzhi

padikodaRang kAththa mApa raicchi
     maNivayirang kOththa thOLva Laicchi
          palathisaiyum pOykku lAvi ruppi ...... neduneeli

adupuliyin thORpa dAmu daicchi
     samaramukang kAttu mAlvi daicchi
          akilamumuN dArkku nEri Laicchi ...... peruvAzhvE

ariyayanin REththa vEmi kuththa
     viputharkulam pErkka vALe duththa
          asurarkulam pAzhkka vEle duththa ...... perumALE.

......... Meaning .........

idam maruvum seetRa vEl eduththu vidam muzhuthum thEkkiyE niRaiththu: Picking up a furious spear and filling it completely with poison,

iru kuzhaiyum thAkki meeL kayal kaN valaiyAlE inimai udan pArththu u(L)LE azhaiththu: (using that spear as) the eyesthat run up to, and impinge on, both ears and come back to position, these whores spread their eyes, which are like the kayal fish, as the net, beckoning (men) sweetly and enticing them into their homes;

muka padamum sErththu vAr azhuththum iru varaiyum kAtti mAl ezhuppi vilai pEsi: hiding their face with a piece of cloth, they provocatively expose their two mountain-like breasts that press the blouse; then, they conclude negotiation of the price due to them;

madal avizhum pUkkaLAl niRaiththa suruL aLakam thUtRiyE mudiththu: they loosen their curly hair filled with flowers with petals fully blossomed, shake the hair and then refasten it into a tuft;

marukidai ninRu ArkkavE nakaiththu nilaiyAka varu poruL kaNdu ERkavE paRikkum: they stand in the street giggling uncontrollably; when they spot people from whom steady income is assured without any change, they readily grab their money in advance;

arivaiyar tham pEcchilE muzhukka manam urukum thUrththanAy iLaiththu vidalAmO: why am I losing my heart utterly to these whores' speech and weakening due to excessive passion?

padi muzhuthum kUrththa mA kulaththi muthu maRaiyin pEcchi nUl idaicchi: She is the most beautiful Goddess pervading the entire world; She is praised by the VEdAs; She has a very slender waist;

pakir mathiyam pUththa thAzh chadaicchi iru nAzhi padi kodu aRam kAththa mA paraicchi: Her matted hair, adorned with the crescent moon, falls down gracefully; with two measures of paddy, this Supreme Deity performed (in Kanchipuram) the thirty-two religious duties*;

maNi vayiram kOththa thOL vaLaicchi pala thisaiyum pOyk kulA viruppi nedu neeli adu puliyin thOl padAm udaicchi: Her shoulder-bands are studded with precious gems and diamonds; She goes with relish in several directions looking prominent; She has the complexion of a famous blue tinge; She wears the sari made of the skin of the murderous tiger;

samara mukam kAttu(m) mAl vidaicchi akilamum uNdArkku nEr iLaicchi peruvAzhvE: She mounts the huge bull (Nandhi) which has a raging face ready to go to war; She is the younger sister of Lord VishNu, who gobbled up the entire world; and You are the great Treasure of that Goddess PArvathi, Oh Lord!

ari ayan ninRu EththavE mikuththa viputhar kulam pErkka vAL eduththa: You brandished the sword upon the fervent prayer of Lord VishNu and Lord Brahma and liberated the vast multitude of the celestials;

asurar kulam pAzhkka vEl eduththa perumALE.: and You wielded Your spear to annihilate the entire clan of demons, Oh Great One!


* Thirty-two religious duties are listed in Periya PurANam as follows:

Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1130 idamaruvum cheetRa - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]