திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1113 மைச்சுனமார் மாமன் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1113 maichchunamArmAman (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்ததனா தான தத்ததனா தான தத்ததனா தான ...... தனதான ......... பாடல் ......... மைச்சுனமார் மாம னைச்சியுமா தாவு மக்களுமா றாத ...... துயர்கூர மட்டிலதோர் தீயி லிக்குடில்தான் வேவ வைத்தவர்தா மேக ...... மதிமாய நிச்சயமாய் நாளு மிட்டொருதூ தேவு நெட்டளவாம் வாதை ...... யணுகாமுன் நெக்குருகா ஞான முற்றுனதா ளோதி நித்தலும்வாழ் மாறு ...... தருவாயே நச்சணைமேல் வாழு மச்சுதனால் வேத னற்றவர்தா நாட ...... விடையேறி நற்புதல்வா சூரர் பட்டிடவே லேவு நற்றுணைவா ஞால ...... மிகவாழப் பச்செனுநீள் தோகை மெய்ப்பரியூர் பாக பத்தியதா மாறு ...... முகநாளும் பக்ஷமுமே லாய்ஷ டக்ஷரசூழ் பாத பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மைச்சுனமார் மா மனைச்சியு(ம்) மாதாவு(ம்) மக்களும் மாறாத துயர் கூர ... மைத்துனர்களும், சிறந்த மனைவியும், தாயும், குழந்தைகளும் நீங்காத துயரம் மிக அடைய, மட்டு இலது ஓர் தீயில் இக் குடில் தான் வேவ வைத்தவர் தாம் ஏக ... குறைவில்லாது (நன்கு எரியும்) ஒரு நெருப்பில் இந்த உடம்பையே வேகும்படி வைத்துவிட்டு, அவரவர்களின் வீட்டுக்குச் செல்ல, மதி மாய நிச்சயமாய் நாளும் இட்டு ஒரு தூது ஏவு(ம்) நெட்டு அளவாம் வாதை அணுகா முன் ... அறிவு கலங்கும்படி உறுதியாக ஒரு நாளைக் குறிப்பிட்டு, (அந்த நாளில் யமன்) தனது தூதர்களை அனுப்பும், பெரும் அளவுக்குப் பட வேண்டிய வேதனைகள் என்னை நெருங்குவதற்கு முன்பாக, நெக்கு உருகா ஞானம் உற்று உன தாள் ஓதி நித்தலும் வாழ்மாறு தருவாயே ... மனம் நெகிழ்ந்து உருகி, ஞான நிலையை அடைந்து, உனது திருவடிகளை வணங்கி நாள் தோறும் நான் வாழும் பொருட்டு அருள் புரிவாயாக. நச்சு அணை மேல் வாழும் அச்சுதன் நால் வேதன் நல் தவர் தா(ம்) நாட விடை ஏறி நல் புதல்வா ... விஷம் கொண்ட பாம்பணையின் மேல் துயில் கொள்ளும் திருமால், நான்கு வேதங்களிலும் சிறந்த பிரமன், நல்ல தவசிகள் ஆகியோர்கள் தேடி நிற்க, ரிஷப வாகனத்தில் ஏறி விளங்கும் சிவபெருமானுடைய சிறப்புள்ள புதல்வனே, சூரர் பட்டிட வேல் ஏவு நல் துணைவா ... சூரர்கள் அழியும்படி வேலாயுதத்தைச் செலுத்திய நல்ல துணைவனே, ஞாலம் மிக வாழப் பச்செனு நீள் தோகை மெய்ப்பரி ஊர் பாக ... உலகோர் சிறப்பாக வாழும்படி, பச்சையான ஒளி வீசும் தோகையைக் கொண்ட உடலை உடைய குதிரையாகிய மயிலைச் செலுத்தும் பாகனே, பத்தியது ஆம் ஆறு முக நாளும் பக்ஷமும் மேலாய் ... வரிசையாயுள்ள ஆறு திருமுகங்களிலும் நாள் தோறும் அன்பு மேற் கொண்டவனே, ஷடாக்ஷர சூழ் பாத பத்தி செய் வான் நாடர் பெருமாளே. ... (சரவணபவ என்ற) ஆறெழுத்துக்கு உரியவனே, உலகெல்லாம் வலம் வந்த திருவடிகளை உடையவனே, உன்னைப் பக்தியுடன் போற்றிப்பணியும் தேவர்களின் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.262 pg 3.263 WIKI_urai Song number: 1116 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1113 - maichchunamAr mAman (common) maicchunamAr mAma naicchiyumA thAvu makkaLumA RAtha ...... thuyrkUra mattilathOr theeyi likkudilthAn vEva vaiththavarthA mEka ...... mathimAya nicchayamAy nALu mittoruthU thEvu nettaLavAm vAthai ...... yaNukAmun nekkurukA njAna mutRunathA LOthi niththalumvAzh mARu ...... tharuvAyE nacchaNaimEl vAzhu macchuthanAl vEtha natRavarthA nAda ...... vidaiyERi naRputhalvA cUrar pattidavE lEvu natRuNaivA njAla ...... mikavAzhap pacchenuneeL thOkai meyppariyUr pAka paththiyathA mARu ...... mukanALum pakshamumE lAysha daksharasUzh pAtha paththiseyvA nAdar ...... perumALE. ......... Meaning ......... maicchunamAr mA manaicchiyu(m) mAthAvu(m) makkaLum mARAtha thuyar kUra: My brothers-in-law, my wonderful wife, mother and children being grief-stricken uncontrollably, mattu ilathu Or theeyil ik kudil thAn vEva vaiththavar thAm Eka: this body being consigned to fiery flame that burns intensely, and all the people returning to their homes, mathi mAya nicchayamAy nALum ittu oru thUthu Evu(m) nettu aLavAm vAthai aNukA mun: on a firm date being determined in a mind-boggling manner by Yaman, God of Death, when he sends his emissaries; before unsurmountable miseries that I have to experience begin to close in, nekku urukA njAnam utRu una thAL Othi niththalum vAzhmARu tharuvAyE: kindly thaw my heart and bless me to attain True Knowledge so that I may continue to live prostrating at Your hallowed feet every day! nacchu aNai mEl vAzhum acchuthan nAl vEthan nal thavar thA(m) nAda vidai ERi nal puthalvA: He is sought everywhere by Lord VishNu, who slumbers on a poisonous serpent-bed, BrahmA who is well-versed in the four VEdAs, and great sages; He mounts the Bull (Nandi); and You are the famous son of that Lord SivA! cUrar pattida vEl Evu nal thuNaivA: You are the great protector who wielded the spear to destroy all the demons! njAlam mika vAzhap pacchenu neeL thOkai meyppari Ur pAka: You drive Your vehicle, the green and bright horse-like peacock, to protect the entire world and for its prosperity! paththiyathu Am ARu muka nALum pakshamum mElAy: The gracious love on Your six hallowed faces in a row enhances every day, Oh Lord! shadAkshara sUzh pAtha paththi sey vAn nAdar perumALE.: You are in the form of the six sacred letters (SA-RA-VA-NA-BHA-VA)! Your hallowed feet have gone round the entire world, Oh Lord! You are the Lord of the celestials who worship You ardently, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |