திருப்புகழ் 1112 சுட்டதுபோல் ஆசை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1112 suttadhupOlAsai  (common)
Thiruppugazh - 1112 suttadhupOlAsai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததனா தான தத்ததனா தான
     தத்ததனா தான ...... தனதான

......... பாடல் .........

சுட்டதுபோ லாசை விட்டுலகா சார
     துக்கமிலா ஞான ...... சுகமேவிச்

சொற்கரணா தீத நிற்குணமூ டாடு
     சுத்தநிரா தார ...... வெளிகாண

மொட்டலர்வா ரீச சக்ரசடா தார
     முட்டவுமீ தேறி ...... மதிமீதாய்

முப்பதுமா றாறு முப்பதும்வே றான
     முத்திரையா மோன ...... மடைவேனோ

எட்டவொணா வேத னத்தொடுகோ கோவெ
     னப்பிரமா வோட ...... வரைசாய

எற்றியஏ ழாழி வற்றிடமா றாய
     எத்தனையோ கோடி ...... யசுரேசர்

பட்டொருசூர் மாள விக்ரமவே லேவு
     பத்திருதோள் வீர ...... தினைகாவல்

பத்தினிதோள் தோயு முத்தமம றாது
     பத்திசெய்வா னாடர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுட்டதுபோல் ஆசை விட்டு ... கையிலுள்ள ஒரு சூடான பொருளை
கை எப்படி உதறுகிறதோ, அது போல ஆசைகளை நான் உதறித்தள்ளி,

உலக ஆசார துக்கமிலா ஞான சுகமேவி ... உலக வாழ்வில்
ஏற்படும் துயரங்கள் அற்ற ஞான சுக நிலையை நான் அடைந்து,

சொற்கரண அதீத நிற்குணம் ஊடாடு ... சொல்லுக்கும்,
மனத்திற்கும் எட்டாது நின்று, குணங்களே இல்லாத,

சுத்த நிராதார வெளிகாண ... பரிசுத்தமான, சார்பற்றதாக விளங்கும்
பர வெளியை நான் கண்டு,

மொட்டு அலர் வாரீச சக்ர சட் ஆதார ... மொட்டுக்கள் மலர்ந்த
தாமரையாம் ஆறு ஆதார குண்டலினி சக்கரங்கள்*

முட்டவுமீதேறி மதிமீதாய் ... அனைத்திலும், அவற்றைக் கடந்தும்
இருப்பதுவும், அமுதைப் பொழியும் சந்திரனுக்கு மேலானதும் ஆன,

முப்பதும் ஆறாறு முப்பதும்வேறான ... தொண்ணூற்றாறு**
(30+36+30=96) தத்துவங்களுக்கும் வேறுபட்டதான

முத்திரையா மோனம் அடைவேனோ ... அடையாள
அறிகுறியாகிய மெளன நிலையை நான் அடைவேனோ?

எட்டவொணா வேதனத்தொடு கோ கோவெனப்பிரமா ஓட ...
தாங்கமுடியாத வலியோடு பிரமன் கூக்குரலிட்டு ஓடவும்,

வரைசாய ... கிரெளஞ்ச மலையானது சாய்ந்து விழவும்,

எற்றிய ஏழாழி வற்றிட ... அலைகள் வீசும் ஏழு கடல்கள்
வற்றிவிடவும்,

மாறாய எத்தனையோ கோடி யசுரேசர் பட்டு ... பகைமையோடு
வந்த பல கோடிக்கணக்கான அசுரர்களும், அவர்களது தலைவர்களும்
அழிபடவும்,

ஒருசூர் மாள ... ஒப்பற்ற சூரன் இறந்து படவும்,

விக்ரம வேல் ஏவு பத்திருதோள் வீர ... பராக்கிரமம் நிறைந்த
வேலைச் செலுத்திய பன்னிரு தோள் வீரா,

தினைகாவல் பத்தினிதோள் தோயும் உத்தம ...
தினைப்புனத்தைக் காவல் செய்த கற்புடை நாயகி வள்ளியின்
தோள்களைத் தழுவும் உத்தமனே,

மாறாது பத்திசெய் வான் நாடர் பெருமாளே. ... நிலைத்த
மனதுடன் பக்தி செய்து தொழும் தேவர்களின் பெருமாளே.


* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்



மணிபூரகம்



அநாகதம்



விசுத்தி



ஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்



மேல்வயிறு



இருதயம்



கண்டம்



புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினி



நீர்



காற்று



ஆகாயம்



மனம்






வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)



ம(கரம்)



சி(கரம்)



வ(கரம்)



ய(கரம்)






தலம்

திருவாரூர்


திருவானைக்கா



திரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்



திருக்காளத்தி



காசி
(வாரணாசி)

திருக்கயிலை




கடவுள்

விநாயகர்


பிரமன்



திருமால்



ருத்திரன்



மகேசுரன்



சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்




** 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.258  pg 3.259  pg 3.260  pg 3.261  pg 3.262 
 WIKI_urai Song number: 1115 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1112 - suttadhupOl Asai (common)

suttadhu pOlAsai vittulagA chAra
     dhukkamilA nyAna ...... sukamEvi

soRkaraNA theetha niRguNa mUdAdu
     sudhdha nirAdhAra ...... veLikANa

mottalar vAreeja chakra jatAdhAra
     muttavu meedhERi ...... madhimeedhAy

muppadhum ARARu muppadhum vERAna
     mudhdhiraiyA mOnam ...... adaivEnO

ettavoNA vEdhanaththodu hO hO ve
     nabiramA Oda ...... varaisAya

etriya EzhAzhi vatrida mARAya
     eththanaiyO kOdi ...... asurEsar

pattoru sUr mALa vikrama vElEvu
     paththiru thOL veera ...... thinai kAval

paththini thOL thOyum uththama mARAdhu
     baththi seyvA nAdar ...... perumALE.

......... Meaning .........

suttadhu pOlAsai vittu: I want to drop off desires like the hand flings a burning hot stuff.

ulagA chAra dhukkamilA nyAna sukamEvi: I want to reach the state of blissful wisdom, devoid of worldly miseries.

soRkaraNA theetha niRguNa mUdAdu sudhdha nirAdhAra veLikANa: I want to have the vision of the spotless and unfettered cosmos that is beyond words and perception and is featureless.

mottalar vAreeja chakra jatAdhAra muttavu meedhERi madhimeedhAy: That which pervades the blossoming lotus chakrAs*, the six fundamental kundalini centres, and transcends them, and is superior to the moon showering nectar;

muppadhum ARARu muppadhum vERAna mudhdhiraiyA mOnam adaivEnO: that which is different from the ninety-six** tenets (30+36+30 = 96); and that which is the manifested symbol of sublime silence; will I ever attain that?

ettavoNA vEdhanaththodu hO hO venabiramA Oda varaisAya: BrahmA ran away screaming in unbearable pain; Mount Krouncha collapsed;

etriya EzhAzhi vatrida: the seven seas with rising waves became dry;

mARAya eththanaiyO kOdi asurEsar pattu: millions of hostile demons and their leaders were destroyed;

oru sUr mALa vikrama vElEvu paththiru thOL veera: and the matchless demon, SUran, died when You hurled Your victorious spear with all the might of Your twelve shoulders, Oh Valiant One!

thinai kAval paththini thOL thOyum uththama: She guarded the millet field; she is VaLLi, the virtuous woman; and You hugged her shoulders, Oh Upright One!

mARAdhu baththi seyvA nAdar perumALE.: The celestials worship You steadfastly, Oh Great One!


* The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnam



maNipUragam



anAgatham



visudhdhi



AgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-button



Upper belly



Heart



Throat



Between the
eyebrows

Over
the skull



Element

Earth


Fire



Water



Air



Sky



Mind






Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


na



ma



si



va



ya






Temple

ThiruvArUr


ThiruvAnaikkA



Thiru
aNNAmalai


Chidhambaram



ThirukkALaththi



VaranAsi
(kAsi)

Mt. KailAsh



Deity

VinAyagar


BrahmA



Vishnu



RUdhran



MahEswaran



SathAsivan


Siva-Sakthi
Union



** The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1112 suttadhupOl Asai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]