திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1098 நடை உடையிலே (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1098 nadaiudaiyilE (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான ......... பாடல் ......... நடையுடையி லேயருக்கி நெடியதெரு வீதியிற்குள் நயனமத னால்மருட்டி ...... வருவாரை நணுகிமய லேவிளைத்து முலையைவிலை கூறிவிற்று லளிதமுட னேபசப்பி ...... யுறவாடி வடிவதிக வீடுபுக்கு மலரணையின் மீதிருத்தி மதனனுடை யாகமத்தி ...... னடைவாக மருவியுள மேயுருக்கி நிதியமுள தேபறிக்கும் வனிதையர்க ளாசைபற்றி ...... யுழல்வேனோ இடையர்மனை தோறுநித்த முறிதயிர்நெய் பால்குடிக்க இருகையுற வேபிடித்து ...... உரலோடே இறுகிடஅ சோதைகட்ட அழுதிடுகொ பாலக்ருஷ்ண னியல்மருக னேகுறத்தி ...... மணவாளா அடலெழுது மேடுமெத்த வருபுனலி லேறவிட்டு அரியதமிழ் வாதுவெற்றி ...... கொளும்வேலா அவுணர்குலம் வேரறுத்து அபயமென வோலமிட்ட அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நடை உடையிலே அருக்கி நெடிய தெரு வீதியிற்குள் நயனம் அதனால் மருட்டி வருவாரை ... நடையாலும், அணிந்த உடையாலும் தமது அருமையைக் காட்டி நீண்ட ஒரு தெரு வீதியிலே உலாவி, வரும் ஆடவர்களைக் கண்களால் மயக்கி, நணுகி மயலே விளைத்து முலையை விலை கூறி விற்று லளிதம் உடனே பசப்பி உறவாடி ... அவர்களை அணுகி காம ஆசையை மூட்டி, மார்பகங்களை விலை பேசி விற்று, நைச்சியமான வழியில் இன்முகம் காட்டி நடித்து, பலவிதமான உறவுமுறைகளைக் கூறிக் கொண்டாடி, வடிவு அதிக வீடு புக்கு மலர் அணையின் மீது இருத்தி ... அழகு மிக்க வீட்டுக்கு அழைத்துச் சென்று, மலர்ப் படுக்கையில் இருக்கச் செய்து, மதனன் உடை ஆகமத்தின் அடைவாக மருவி உ(ள்)ளமே உருக்கி நிதியம் உளதே பறிக்கும் வனிதையர்கள் ஆசை பற்றி உழல்வேனோ ... மன்மதனுடைய சாஸ்திரத்தின் முறைப்படி பொருந்திக் கலந்து, உள்ளத்தை உருக்கி, கையில் உள்ள பொருளைக் கவரும் விலைமாதர்களின் மீது காம ஆசை பிடித்து நான் திரியலாமோ? இடையர் மனை தோறு(ம்) நித்தம் உறி தயிர் நெய் பால் குடிக்க இரு கை உறவே பிடித்து உரலோடே இறுகிட அசோதை கட்ட அழுதிடு கொ(கோ)பால க்ருஷ்ணன் இயல் மருகனே குறத்தி மணவாளா ... இடையர்கள் வீட்டில் நாள் தோறும் உறியில் உள்ள தயிரும், நெய்யும், பாலும் குடிக்க, (தண்டிப்பதற்காக கண்ணனுடைய) இரண்டு கைகளையும் பிடித்து உரலுடன் சேர்த்து யசோதை அழுத்தமாகக் கட்ட, அப்போது அழுத கோபாலக்ருஷ்ணனின் மிகுந்த அன்புக்கு உரிய மருகனே, குறப் பெண் வள்ளியின் மணவாளனே, அடல் எழுதும் ஏடு மெத்த வரு புனலில் ஏற விட்டு அரிய தமிழ் வாது வெற்றி கொளும் வேலா ... வலிமை மிக்க (மந்திர மொழி) எழுதப்பட்ட ஏட்டினை பெருகி ஓடுகின்ற (வைகை நதியின்) நீரில் எதிர் ஏறச் செய்து, அருமை மிக்க தமிழ்ப் பாசுரத்தால் (சமணரை) வாதத்தில் (சம்பந்தராக வந்து) வெற்றி கொண்ட வேலனே, அவுணர் குலம் வேர் அறுத்து அபயம் என ஓலம் இட்ட அமரர் சிறை மீள விட்ட பெருமாளே. ... அசுரர் குலத்தை வேரோடு அறுத்து ஒழித்து, அடைக்கலம் என்று ஓலம் இட்ட தேவர்களைச் சிறையினின்றும் மீட்டுவித்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.228 pg 3.229 WIKI_urai Song number: 1101 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1098 - nadaiyudaiyilE (common) nadaiyudaiyi lEyarukki nediyatheru veethiyiRkuL nayanamatha nAlmarutti ...... varuvArai naNukimaya lEviLaiththu mulaiyaivilai kURivitRu laLithamuda nEpasappi ...... yuRavAdi vadivathika veedupukku malaraNaiyin meethiruththi mathananudai yAkamaththi ...... nadaivAka maruviyuLa mEyurukki nithiyamuLa thEpaRikkum vanithaiyarka LAsaipatRi ...... yuzhalvEnO idaiyarmanai thORuniththa muRithayirney pAlkudikka irukaiyuRa vEpidiththu ...... uralOdE iRukidaa sOthaikatta azhuthiduko pAlakrushNa niyalmaruka nEkuRaththi ...... maNavALA adalezhuthu mEdumeththa varupunali lERavittu ariyathamizh vAthuvetRi ...... koLumvElA avuNarkulam vEraRuththu apayamena vOlamitta amararsiRai meeLavitta ...... perumALE. ......... Meaning ......... nadai udaiyilE arukki nediya theru veethiyiRkuL nayanam athanAl marutti varuvArai: By their gait and with their attire, they demonstrate their uniqueness strolling in a long street and entice the men with their gait; naNuki mayalE viLaiththu mulaiyai vilai kURi vitRu laLitham udanE pasappi uRavAdi: they approach the men provocatively and sell their bosom at a negotiated price, showing their flirtatious and smiling face; with feigned emotion, they establish many a relationship; vadivu athika veedu pukku malar aNaiyin meethu iruththi: they lead the men to their well-decorated house and seat them on the flowery bed; mathanan udai Akamaththin adaivAka maruvi u(L)LamE urukki nithiyam uLathE paRikkum vanithaiyarkaL Asai patRi uzhalvEnO: they perform the act of love according to the manual of Manmathan (God of Love) melting the men's heart and then they grab all their belongings; why am I roaming after such whores with an obsessive passion? idaiyar manai thORu(m) niththam uRi thayir ney pAl kudikka iru kai uRavE pidiththu uralOdE iRukida asOthai katta azhuthidu ko(O)pAla krushNan iyal marukanE kuRaththi maNavALA: He stole and gulped curd, ghee and milk every day from the hanging container-holders (uRi) in the houses of cowherds; (to punish Him,) Mother YasOdhai bound His hands tightly with a rope to the stone-barrel leaving the little GOpAla KrishNan crying; You are the dear nephew of that KrishNan, Oh Lord! You are the consort of VaLLi, the damsel of the KuRavAs! adal ezhuthum Edu meththa varu punalil ERa vittu ariya thamizh vAthu vetRi koLum vElA: (Coming as ThirugnAna Sambandhar) You floated a palm leaf, with a powerful ManthrA inscribed on it, that went against the current on the water (of River Vaigai) and conquered the samaNAs in debate with Your rare hymns in Tamil, Oh Lord with the spear! avuNar kulam vEr aRuththu apayam ena Olam itta amarar siRai meeLa vitta perumALE.: You annihilated the entire dynasty of the demons and granted refuge to the screaming celestials by liberating them from their prisons, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |