திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1097 எழுபிறவி நீர்நில (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1097 ezhupiRavineernila (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தானதத்த தனதனன தானதத்த தனதனன தானதத்த ...... தனதான ......... பாடல் ......... எழுபிறவி நீர்நிலத்தி லிருவினைகள் வேர்பிடித்து இடர்முளைக ளேமுளைத்து ...... வளர்மாயை எனுமுலவை யேபணைத்து விரககுழை யேகுழைத்து இருளிலைக ளேதழைத்து ...... மிகநீளும் இழவுநனை யேபிடித்து மரணபழ மேபழுத்து இடியுமுடல் மாமரத்தி ...... னருநீழல் இசையில்விழ ஆதபத்தி யழியுமுன மேயெனக்கு இனியதொரு போதகத்தை ...... யருள்வாயே வழுவுநெறி பேசுதக்க னிசையுமக சாலையுற்ற மதியிரவி தேவர்வஜ்ர ...... படையாளி மலர்கமல யோனிசக்ர வளைமருவு பாணிவிக்ர மறையஎதிர் வீரவுக்ரர் ...... புதல்வோனே அழகியக லாபகற்றை விகடமயி லேறியெட்டு அசலமிசை வாகையிட்டு ...... வரும்வேலா அடலசுரர் சேனைகெட்டு முறியமிக மோதிவெட்டி அமரர்சிறை மீளவிட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... எழுபிறவி நீர்நிலத்தில் ... ஏழு பிறவிகள் என்னும் நீர் கொண்ட நிலத்திலே, இருவினைகள் வேர்பிடித்து ... நல்வினை, தீவினை என்ற வேர்களில் ஊன்றிக்கொண்டு, இடர்முளைகளேமுளைத்து வளர் ... துன்பம் என்ற முளைகள் முளைக்க வளர்ந்து, மாயை எனும் உலவையே பணைத்து ... பொய்த் தோற்ற உணர்ச்சிகள் என்ற கிளைகள் செழிப்புற்றுப் பெருத்து, விரககுழையே குழைத்து ... காமம் என்ற தளிர்கள் துளிர்விட்டு, இருளிலைகளே தழைத்து மிகநீளும் ... அஞ்ஞானம் என்ற இலைகள் செழிப்புடன் தழைத்து மிகப் பெரிதாகி, இழவுநனையேபிடித்து ... கேடு என்னும் பூ மொட்டுக்கள் அரும்புவிட்டு, மரணபழமே பழுத்து ... இறப்பு என்னும் பழம் பழுத்து, இடியுமுடல் மாமரத்தின் ... கடைசியில் முறிந்து அழிந்து போகின்ற உடல் என்னும் மாமரத்தின் அருநீழல் இசையில்விழ ... அருமையான நிழல் அதன் பண்பிழந்து வீழ்ந்து போக, ஆதபத்தி* யழியுமுன மேயெனக்கு ... (உடல் என்னும் நிழல் தரும் மாமரக்) குடை அழிந்து போகும் முன்னரே இனியதொரு போதகத்தை யருள்வாயே ... இனிமைதரும் ஒப்பற்ற உபதேச மொழியை அருள்வாயாக. வழுவுநெறி பேசு தக்கன் ... தவறான வழியையே பேசிய தக்ஷன் இசையு மக சாலையுற்ற ... அமைத்த யாகசாலைக்குச் சென்ற மதியிரவி தேவர் வஜ்ரபடையாளி ... சந்திரன், சூரியன், தேவர்கள், வஜ்ராயுதப் படையாளியான இந்திரன், மலர்கமல யோனி ... திருமாலின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரமன், சக்ர வளைமருவு பாணி ... சக்கரமும் சங்கும் ஏந்தின திருக்கைகளை உடைய திருமால், விக்ர மறைய ... இவர்களின் பராக்கிரமம் மறைந்தொடுங்க, எதிர் வீரவுக்ரர் புதல்வோனே ... அவர்களை எதிர்த்து அடக்கிய வீர உக்ர மூர்த்தியாம் சிவபிரானின் மகனே, அழகிய கலாபகற்றை விகடமயி லேறி ... அழகான தோகைக் கூட்டத்தை உடைய எழிலான மயிலின் மீதேறி, எட்டு அசலமிசை வாகையிட்டு வரும்வேலா ... எட்டு மலைகளையும் வெற்றி கொண்டு வலம் வந்த வேலனே, அடலசுரர் சேனைகெட்டு ... வலிமை வாய்ந்த அசுரர்களின் சேனை அழிபட்டு முறியமிக மோதிவெட்டி ... முறியும்படியாக மிகவும் பலமாகத் தாக்கி அவர்களை வெட்டி அழித்து, அமரர்சிறை மீளவிட்ட பெருமாளே. ... தேவர்களைச் சிறையினின்றும் மீண்டும் வருமாறு செய்த பெருமாளே. |
* ஆதபத்தி என்றால் குடை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.224 pg 3.225 pg 3.226 pg 3.227 WIKI_urai Song number: 1100 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1097 - ezhupiRavi neer nila (common) ezhupiRavi neer nilaththil iruvinaigaL vErpidiththu idar muLaigaLE muLaiththu ...... vaLarmAyai enum ulavaiyE paNaiththu viraga kuzhaiyE kuzhaiththu iruL ilaigaLE thazhaiththu ...... miganeeLum izhavu nanaiyE pidiththu maraNa pazhamE pazhuththu idiyum udal mA maraththin ...... aruneezhal isaiyil vizha Adhabaththi azhiyumunamE enakku iniyadhoru bOdhagaththai ...... aruLvAyE vazhuvuneRi pEsu dhakkan isaiyu magasAlai utra madhiyiravi dhEvar vajra ...... padaiyALi malarkamala yOni chakra vaLaimaruvu pANi vikra maRaiya edhir veera ugrar ...... pudhalvOnE azhagiya kalApa katrai vikata mayilERi ettu achalamisai vAgaiyittu ...... varumvElA adal asurar sEnai kettu muRiyamiga mOdhivetti amararsiRai meeLavitta ...... perumALE. ......... Meaning ......... ezhupiRavi neer nilaththil: Seven births constitute the fertile ground; iruvinaigaL vErpidiththu: Karma (good and bad deeds) is the basic root; idar muLaigaLE muLaiththu: sufferings are the blossoming buds; vaLarmAyai enum ulavaiyE paNaiththu: delusions are the big fat branches; viraga kuzhaiyE kuzhaiththu: lust is the budding sprout; iruL ilaigaLE thazhaiththu miganeeLum: ignorance grows abundantly and big like the leaves; izhavu nanaiyE pidiththu: losses constitue the blooms of the flowers; maraNa pazhamE pazhuththu: death is the ultimate ripened fruit; idiyum udal mA maraththin: and the body falls apart - the collapse of the large mango tree! aruneezhal isaiyil vizha Adhabaththi azhiyumunamE: Before the rare shade of that umbrella (the mango tree) dissipates, enakku iniyadhoru bOdhagaththai aruLvAyE: kindly bless me with Your incomparable sweet teaching! vazhuvuneRi pEsu dhakkan: Once, Dhakshan, notorious for his disparaging remarks, isaiyu magasAlai utra: called for a ceremonial rite which was attended by madhiyiravi dhEvar vajra padaiyALi: the Moon, the Sun, the Celestials, IndrA (the holder of the weapon Vajra), malarkamala yOni chakra vaLaimaruvu pANi: BrahmA (whose origin was on a lotus from Vishnu's stomach) and Vishnu holding the Wheel and the Conch in His holy hands, vikra maRaiya: all of whom were rendered powerless edhir veera ugrar pudhalvOnE: when SivA invaded fiercely and bravely; You are the Son of that SivA! azhagiya kalApa katrai vikata mayilERi: Mounted on the beautiful peacock with pretty feathers ettu achalamisai vAgaiyittu varumvElA: You drive around the eight mountains triumphantly, Oh VElA, adal asurar sEnai kettu muRiya: Defeating the powerful armies of the demons miga mOdhivetti amararsiRai meeLavitta perumALE.: and knocking down and destroying them, You secured the release of the Celestials from the prisons, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |