திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1095 வதை பழக மறலி (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1095 vadhaipazhagamaRali (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான ......... பாடல் ......... வதைபழக மறலிவிறல் மதனன்வழி படுதுமென வயிரமர கதமகர ...... மளவாக வரிசிதறி விடமளவி வளருமிரு கலகவிழி வளையிளைஞ ருயிர்கவர ...... வருமாய இதையமள விடஅரிய அரிவையர்கள் நெறியொழுகி எழுபிறவி நெறியொழிய ...... வழிகாணா இடர்கள்படு குருடனெனை அடிமைகொள மகிழ்வொடுன திருநயன கருணைசிறி ...... தருள்வாயே பதயுகள மலர்தொழுது பழுதில்பொரி அவல்துவரை பயறுபெரு வயிறுநிறை ...... யவிடாமுப் பழமுமினி துதவிமுனி பகரவட சிகரிமிசை பரியதனி யெயிறுகொடு ...... குருநாடர் கதைமுழுது மெழுதுமொரு களிறுபிளி றிடநெடிய கடலுலகு நொடியில்வரு ...... மதிவேகக் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... வதை பழக மறலிவிறல் மதனன்வழி படுதும் என ... வதைக்கும் தொழிலில் பழகிய அந்த யமனும், வெற்றி வாய்ந்த மன்மதனும் (நாங்கள் உன் கொடுமையைக் கற்றறிய உன்னை) வழிபடுவோம் என்று சொல்லத்தக்க வகையில் வயிர மரகத மகரம் அளவாக வரி சிதறி விடம் அளவி வளரும் இரு கலகவிழி ... வைரத்தாலும் மரகதத்தாலும் செய்யப்பட்ட, மகரமீன் போன்ற அளவில் உள்ள, குண்டலங்கள் உடைய காதின் அளவுக்கு நீண்டு, ரேகைகள் பரவிய, விஷத்தைக் கொண்டதாக வளர்ந்துள்ள, காமப்போருக்குச் சித்தமான இரண்டு விழிகளைக் கொண்டு வளை இளைஞர் உயிர் கவர வரு மாய ... வளைத்து இளைஞர்களின் உயிரைக் கொள்ளை கொள்ளும் மாயக்காரிகளும், இதையம் அளவிட அரிய அரிவையர்கள் நெறியொழுகி ... தங்கள் இதயத்தின் எண்ணத்தைப் பிறர் அளவிட்டு அறிதற்கு அரியவர்களுமான விலைமாதர்களின் வழியிலே நடந்து, எழுபிறவி நெறி ஒழிய வழிகாணா இடர்கள்படு குருடன் எனை அடிமைகொள ... எடுத்த பிறவிக்கு உள்ள நெறியை விட்டு, இதிலிருந்து வெளியேறும் வழியைக் காணாது வேதனைகள் படுகின்ற குருடனாகிய என்னை அடிமை கொள்வதற்கு, மகிழ்வொடு உனது இரு நயன கருணை சிறிது அருள்வாயே ... மகிழ்ச்சியோடு உன்னிரு கண்கொண்டு கடாட்சித்து கருணை சிறிது அருள் புரிவாயாக. பதயுகள மலர்தொழுது பழுதில் பொரி அவல் துவரை பயறு பெரு வயிறு நிறைய இடா ... இரு திருவடிகளை மலர் கொண்டு பூஜித்துத் தொழுது, மாசில்லாத பொரி, அவல், துவரை, பயறு, இவற்றைப் பெரு வயிற்றில் நிறைய அளித்து, முப்பழமும் இனிது உதவி முனி பகர வட சிகரிமிசை பரிய தனி எயிறு கொடு ... வாழை, மா, பலா ஆகிய பழங்களை இனிய மனத்துடன் நிவேதித்து, வியாச முநிவர் சொல்லிவர, வடக்கே உள்ள மேருமலையின் மீது, பருத்த ஒற்றைக் கொம்பைக் கொண்டு, குருநாடர் கதை முழுதும் எழுதும் ஒரு களிறு பிளிறிட ... குரு நாட்டவர்களான பாண்டவர்களின் சரித்திரம் முழுதும் எழுதிய ஒப்பற்ற யானை கணபதி பிளிறிடும்படியாக*, நெடிய கடல் உலகு நொடியில் வரும் அதிவேகக் கலப கக மயில் கடவி ... நீண்ட கடலால் சூழப்பட்ட உலகத்தை ஒரு நொடியில் வலம் வந்த, அதிக வேகத்தைக் கொண்ட, தோகைப் பட்சியாம் மயிலைச் செலுத்தி, நிருதர் கஜ ரத துரக கடகமுடன் அமர் பொருத பெருமாளே. ... அசுரர்களின் (நாற்படைகளான) யானை, தேர், குதிரை, காலாட்படைளுடன் போர் புரிந்த பெருமாளே. |
* உலகெல்லாம் சுற்றி வரும் முருகனின் மயிலின் வேகத்தைக் கண்டு விநாயக யானை அஞ்சிப் பிளறினதாகக் கூறப்பட்டுள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.220 pg 3.221 pg 3.222 pg 3.223 WIKI_urai Song number: 1098 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1095 - vadhai pazhaga maRali (common) vathaipazhaka maRaliviRal mathananvazhi paduthumena vayiramara kathamakara ...... maLavAka vAisithaRi vidamaLavi vaLarumiru kalakavizhi vaLaiyiLainja ruyirkavara ...... varumAya ithaiyamaLa vidAriya arivaiyarkaL neRiyozhuki ezhupiRavi neRiyozhiya ...... vazhikANA idarkaLpadu kurudanenai adimaikoLa makizhvoduna thirunayana karuNaisiRi ...... tharuLvAyE pathayukaLa malarthozhuthu pazhuthilpori avalthuvarai payaRuperu vayiRuniRai ...... yavidAmup pazhamumini thuthavimuni pakaravada sikarimisai pariyathani yeyiRukodu ...... kurunAdar kathaimuzhuthu mezhuthumoru kaLiRupiLi Ridanediya kadalulaku nodiyilvaru ...... mathivEkak kalapakaka mayilkadavi nirutharkaja rathathuraka kadakamuda namarporutha ...... perumALE. ......... Meaning ......... vathai pazhaka maRaliviRal mathananvazhi paduthum ena: These eyes are so cruel that the God of Death, Yaman, and the triumphant God of Love, Manmathan, both of whom are well-experienced in torture, desired to learn the art of persecution by worshipping at these eyes; vayira marakatha makaram aLavAka vari sithaRi vidam aLavi vaLarum iru kalakavizhi: these eyes extend right up to the ears where the ear-studs, in the shape of makara fish, made in diamond and emerald, are swinging; they have tiny blood vessels within them and appear to have grown with in-built poison; with the two eyes that are ever ready to wage a war of passion, vaLai iLainjar uyir kavara varu mAya: these sorceresses take away the lives of young men; ithaiyam aLavida ariya arivaiyarkaL neRiyozhuki: the depth of these women's heart could never be fathomed by others; following the path of such whores, ezhupiRavi neRi ozhiya vazhikANA idarkaLpadu kurudan enai adimaikoLa: I gave up the righteous course meant for this birth and suffered miserably without knowing the way out; kindly take charge of this blind slave of Yours makizhvodu unathu iru nayana karuNai siRithu aruLvAyE: and bless me happily, granting a little grace of Your eyes, Oh Lord! pathayukaLa malarthozhuthu pazhuthil poai aval thuvarai payaRu peru vayiRu niRaiya idA: Worshipping His hallowed feet with flowers and offering plenty of pure rice crispies, puffed rice, lentils and other grains to fill His big pot-belly, muppazhamum inithu uthavi muni pakara vada sikAimisai pariya thani eyiRu kodu: and pleasantly providing three kinds of fruits (namely, plantain mango, and jack fruits), the great sage VyAsar narrated (the story of MahAbhAratham) on the mount MEru in the North; as the sage was saying, He wrote with His huge single tusk kurunAdar kathai muzhuthum ezhuthum oru kaLiRu piLiRida: the entire story of the PANdavAs, belonging to the kingdom of Kuru; He is the matchless elephant-faced God, Ganapathi; making that elephant holler* in awe, nediya kadal ulaku nodiyil varum athivEkak kalapa kaka mayil kadavi: You drove Your vehicle, the plumed peacock which went around in a second, at a high speed, the entire world surrounded by large oceans! niruthar kaja ratha thuraka kadakamudan amar porutha perumALE.: You battled with the (four kinds of) armies of the demons, namely, chariots, elephants, horses and soldiers, Oh Great One! |
* When Murugan flew around the entire world, mounted on His peacock, the elephant-faced God VinAyagA is said to have roared, being awestruck by the speed. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |