திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1094 குதறும் முனை அறிவு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1094 kudhaRummunaiaRivu (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன தனதனன ...... தனதான ......... பாடல் ......... குதறுமுனை யறிவுகொடு பதறியெதிர் கதறிமிகு குமுதமிடு பரசமய ...... மொருகோடி குருடர்தெரி வரியதொரு பொருள்தெரிய நிகழ்மனது கொடியஇரு வினையெனும ...... ளறுபோக உதறிவித றியகரண மரணமற விரணமற வுருகியுரை பருகியநு ...... தினஞான உணர்வுவிழி பெறவுனது மிருகமத நளினபத யுகளமினி யுணரஅருள் ...... புரிவாயே சிதறவெளி முழுதுமொளி திகழுமுடு படலமவை சிறுபொறிக ளெனவுரக ...... பிலமேழுஞ் செகதலமு நிகர்சிகரி பலவுநல கெசபுயக திசையுமுட னுருகவரு ...... கடைநாளிற் கதறுமெழு கடல்பருகி வடவைவிடு கரியபுகை யெனமுடிவில் ககனமுக ...... டதிலோடுங் கலபகக மயில்கடவி நிருதர்கஜ ரததுரக கடகமுட னமர்பொருத ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... குதறும் முனை அறிவு கொடு பதறி எதிர் கதறி மிகு குமுதம் இடு பர சமயம் ... சிதறுண்டு நெறி தவறிய ஆழமில்லாத சிற்றறிவைக் கொண்டு, கொதித்துப் பேசியும், எதிர்க் கூச்சலிட்டும் மிக்க பேரொலியை எழுப்புகின்ற பர சமயங்களைப் பற்றிய ஒரு கோடி குருடர் தெரி அரியது ஒரு பொருள் தெரிய நிகழ் மனது ... ஒரு கோடிக் கணக்கான குருடர்களுக்கும் தெரிவதற்கு அரிதான ஒப்பற்ற பொருளை நான் தெரிந்து கொள்ளுமாறு ஓடிக்கொண்டே இருக்கும் மனம், கொடிய இரு வினை எனும் அளறு போக ... பொல்லாத நல் வினை, தீ வினை என்று சொல்லப்படும் இரண்டு வினைகளாகிய சேறு போகும்படி, உதறி விதறிய கரண(ம்) மரண(ம்) அற விரணம் அற ... உதறித் தள்ளி பதறுகின்ற (மனம், பத்தி, சித்தம், அகங்காரம் என்ற) அந்தக் கரணங்கள் நான்கும், இறப்பும் நீங்கவும், எனக்குள் இருக்கும் பகை ஒழியவும், உருகி உரை பருகி அநுதின(ம்) ஞான உணர்வு விழி பெற ... (மேற்சொன்ன) மனம் உருகி உனது புகழைப் பாடி அனுபவித்து நாள்தோறும் ஞான உணர்ச்சி கொண்ட கண்களைப் பெற, உனது மிருகமத நளின பத உகளம் இனி உணர அருள் புரிவாயே ... உன்னுடைய கஸ்தூரி மணம் கமழும் தாமரை மலர் போன்ற திருவடி இணையை இனி நான் உணர்ந்து உய்ய அருள் புரிவாயாக. சிதற வெளி முழுதும் ஒளி திகழும் உடு படலம் அவை சிறு பொறிகள் என ... கதிர்கள் விரிய ஆகாயம் முழுவதும் விளக்கம் கொள்ளும் நட்சத்திரக் கூட்டங்கள் சிறிய தீப்பொறிகள் போல உருக, உரக பிலம் ஏழும் செக தலமு(ம்) நிகர் சிகரி பலவு(ம்) ந(ல்)ல கெச புயக திசையும் உடன் உருக வரும் ... நாக லோகம் பாதாள லோகம் முதலிய ஏழு உலகங்களும், ஒளி வீசும் பல மலைகளும், நல்ல எட்டுத் திக்கு யானைகளும் (அஷ்ட திக்கஜங்கள்*), நாகங்களும் ஒன்றுபட்டு கூடவே உருகித் தோன்றுகின்ற கடை நாளில் கதறும் எழு கடல் பருகி வடவை விடு கரிய புகை என ... யுக முடிவான அந்தக் கடைசி நாளில், ஒலித்து எழுகின்ற கடல்களை உண்டு வடவா முகாக்கினி எழுப்புகின்ற கரிய நிறப் புகை என்று சொல்லும்படி, முடிவில் ககன முகடு அதில் ஓடும் கலப கக(ம்) மயில் கடவி ... (போரின்) இறுதியில் ஆகாய உச்சியில் ஓடுகின்ற தோகைப் பட்சியான மயிலைச் செலுத்தி, நிருதர் கஜ ரத துரக கடகம் உடன் அமர் பொருத பெருமாளே. ... (இவ்வாறாக) அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, காலாட்படை என்னும் நால் வகைச் சேனைகளுடன் சண்டை செய்த பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.218 pg 3.219 pg 3.220 pg 3.221 WIKI_urai Song number: 1097 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1094 - kudhaRum munai aRivu (common) kuthaRumunai yaRivukodu pathaRiyethir kathaRimiku kumuthamidu parasamaya ...... morukOdi kurudartheri variyathoru poruLtheriya nikazhmanathu kodiyairu vinaiyenuma ...... LaRupOka uthaRivitha RiyakaraNa maraNamaRa viraNamaRa vurukiyurai parukiyanu ...... thinanjAna uNarvuvizhi peRavunathu mirukamatha naLinapatha yukaLamini yuNarAruL ...... purivAyE sithaRaveLi muzhuthumoLi thikazhumudu padalamavai siRupoRika Lenavuraka ...... pilamEzhunj cekathalamu nikarsikari palavunala gejapuyaka thisaiyumuda nurukavaru ...... kadainALiR kathaRumezhu kadalparuki vadavaividu kariyapukai yenamudivil kakanamuka ...... dathilOdung kalapakaka mayilkadavi niruthargaja rathathuraka kadakamuda namrporutha ...... perumALE. ......... Meaning ......... kuthaRum munai aRivu kodu pathaRi ethir kathaRi miku kumutham idu para samayam: Those belonging to other religions heatedly discuss, using their shallow brain, in a dissipated and improper manner and argue animatedly raising their voice to a high decibel level; oru kOdi kurudar theri ariyathu oru poruL theriya nikazh manathu: millions of such blind people will never be able to perceive the rare and matchless principle; but my mind keeps on chasing It at all times; kodiya iru vinai enum aLaRu pOka: to wash off the slush called the two deeds (both good and bad), uthaRi vithaRiya karaNa(m) maraNa(m) aRa viraNam aRa: the four inner tenets (anthak karaNam), namely, mind, intellect, will and egoism, pulsate vigorously; to get rid of those tenets and to put an end to death and the enemy within myself, uruki urai paruki anuthina(m) njAna uNarvu vizhi peRa: my mind (referred to above) has to melt, and I have to sing Your glory everyday with inner feeling and acquire eyes of wisdom; unathu mirukamatha naLina patha ukaLam ini uNara aruL purivAyE: for that, kindly bless me with the knowledge to henceforth realise Your hallowed lotus feet, fragrant with the aroma of musk! sithaRa veLi muzhuthum oLi thikazhum udu padalam avai siRu poRikaL ena: With their expanding rays, the multitude of stars glitter all over the sky like melting sparks of fire; uraka pilam Ezhum seka thalamu(m) nikar sikari palavu(m) na(l)la kesa puyaka thisaiyum udan uruka varum: the seven worlds beneath the earth, including the serpents' world (nAga lOkam) and the lowest nether world (pAthALam), along with many bright mountains, the eight good elephants* guarding the cardinal directions and the serpents of the world - all of them appear to be melting down together; kadai nALil kathaRum ezhu kadal paruki vadavai vidu kariya pukai ena: on that last doom's day of this aeon, the vadavA muka agni (the inferno that spreads from the north pole) swallows all the roaring seas and emits a dark cloud-like smoke; comparable to that dense smoke mudivil kakana mukadu athil Odum kalapa kaka(m) mayil kadavi: is the peacock with plumes, which is driven by You at the end (of the war) on the top of the sky; niruthar kaja ratha thuraka kadakam udan amar porutha perumALE.: (this is how) You fought with the four kinds of armies of elephants, chariots, horses and soldiers of the demons, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |