திருப்புகழ் 1089 இருவினைகள் ஈட்டும்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1089 iruvinaigaLeettum  (common)
Thiruppugazh - 1089 iruvinaigaLeettum - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தாத்த தனதனன தாத்த
     தனதனன தாத்த ...... தனதான

......... பாடல் .........

இருவினைக ளீட்டு மிழவுபடு கூட்டை
     யெடுமெடென வீட்டி ...... லனைவோரும்

இறுதியிடு காட்டி லழுதுதலை மாட்டில்
     எரியஎரி மூட்டி ...... யிடுமாறு

கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்
     கயிறிறுக மாட்டி ...... யழையாமுன்

கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு
     கழலிணைகள் காட்டி ...... யருள்வாயே

பருவமலை நாட்டு மருவுகிளி யோட்டு
     பழையகுற வாட்டி ...... மணவாளா

பகைஞர்படை வீட்டில் முதியகன லூட்டு
     பகருநுதல் நாட்ட ...... குமரேசா

அருமறைகள் கூட்டி யுரைசெய்தமிழ் பாட்டை
     அடைவடைவு கேட்ட ...... முருகோனே

அலைகடலி லீட்ட அவுணர்தமை யோட்டி
     அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரு வினைகள் ஈட்டும் இழிவு படு கூட்டை ... நல்வினை,
தீவினை எனப்படும் இரு வினைகளால் உண்டாகும் கேடு உற்ற,
இறந்து போன கூடான இவ்வுடலை,

எடும் எடும் என வீட்டில் அனைவோரும் இறுதி இடு காட்டில்
அழுது
... சீக்கிரம் எடுங்கள் என்று கூறி வீட்டில் உள்ளவர்கள்
எல்லாரும் கடைசியாகச் சுடு காட்டில் அழுது,

தலை மாட்டில் எரிய எரி மூட்டி இடுமாறு ... தலைப்பக்கம்
எரியும்படி நெருப்பை மூட்டி வைக்கும்படியாக,

கரிய இரு கோட்டு முரண் எருமை மோட்டர் கயிறு இறுக
மாட்டி அழையா முன்
... கரு நிறம் கொண்டதும், இரு கொம்புகளை
உடையதும், வலிமை மிக்கதுமான எருமையுடன் வந்த மூர்க்கராகிய யமன்
பாசக் கயிற்றை அழுத்தமாக மாட்டி என்னை அழைப்பதற்கு முன்பாக,

கனக மணி வாட்டு மருவு கழல் பூட்டு கழல் இணைகள்
காட்டி அருள்வாயே
... பொன்னையும், ரத்தினத்தையும் கூட மங்கச்
செய்வதாய், பொருந்தின கழல் சேர்ந்துள்ள திருவடிகள் இரண்டையும்
காட்டி அருள் செய்வாயாக.

பருவ மலை நாட்டு மருவு கிளி ஓட்டு பழைய குறவாட்டி
மணவாளா
... உயர்ந்த வள்ளி மலை நாட்டில் (தினைப் புனத்தில்)
இருந்த கிளிகளை ஓட்டிக் கொண்டிருந்த, (சுந்தரவல்லியாய் முன்னரே
உன்னைக் குறித்துத் தவம் செய்தமையால்) பழைய உறவைப் பூண்டிருந்த
குற மகள் வள்ளியின் கணவனே,

பகைஞர் படை வீட்டில் முதிய கனல் ஊட்டு பகரும் நுதல்
நாட்ட குமரேசா
... பகைவர்களாகிய அசுரர்களின் பாசறையில் முற்றிய
நெருப்பை ஊட்டுவித்த, ஒளி விடுவதான நெற்றிக் கண்ணைக்*
கொண்ட குமரேசனே,

அரு மறைகள் கூட்டி உரை செய் தமிழ் பாட்டை அடைவு
அடைவு கேட்ட முருகோனே
... அருமையான வேத மொழிகளைச்
சேர்த்து உரைக்கப்பட்ட (சங்கத்) தமிழ்ப் பாடலை
(திருமுருகாற்றுப்படையை) முற்ற முழுவதும் கேட்ட முருகனே,

அலை கடலில் ஈட்ட அவுணர் தமை ஓட்டி அமரர் சிறை மீட்ட
பெருமாளே.
... அலை வீசும் கடலில் கூட்டமாய் இருந்த அசுரர்களை
விரட்டி ஓடும்படிச் செய்து, தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த
பெருமாளே.


* முருகன் சிவனது அம்சமே ஆதலால், சிவனைப் போன்று அக்னி உள்ள
நெற்றிக் கண் முருகனுக்கும் உண்டு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.208  pg 3.209  pg 3.210  pg 3.211 
 WIKI_urai Song number: 1092 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1089 - iruvinaigaL eettum (common)

iruvinaika Leettu mizhavupadu kUttai
     yedumedena veetti ...... lanaivOrum

iRuthiyidu kAtti lazhuthuthalai mAttil
     eriyaeri mUtti ...... yidumARu

kariyairu kOttu muraNerumai mOttar
     kayiRiRuka mAtti ...... yazhaiyAmun

kanakamaNi vAttu maruvukazhal pUttu
     kazhaliNaikaL kAtti ...... yaruLvAyE

paruvamalai nAttu maruvukiLi yOttu
     pazhaiyakuRa vAtti ...... maNavALA

pakainjarpadai veettil muthiyakana lUttu
     pakarunuthal nAtta ...... kumarEsA

arumaRaikaL kUtti yuraiseythamizh pAttai
     adaivadaivu kEtta ...... murukOnE

alaikadali leetta avuNarthamai yOtti
     amararsiRai meetta ...... perumALE.

......... Meaning .........

iru vinaikaL eettum izhivu padu kUttai: The body is afflicted by both good and bad deeds of the past; after death, the body becomes just a shell;

edum edum ena veettil anaivOrum iRuthi idu kAttil azhuthu: all the people in the household hasten to take the body away to the cremation ground where they ultimately cry;

thalai mAttil eriya eri mUtti idumARu: there, just beneath the head, fire is lit (for the cremation);

kariya iru kOttu muraN erumai mOttar kayiRu iRuka mAtti azhaiyA mun: before I am beckoned by Yaman, the cruel God of Death who mounts his black vehicle, the strong buffalo with two horns, and who tightens the rope of bondage around my neck,

kanaka maNi vAttu maruvu kazhal pUttu kazhal iNaikaL kAtti aruLvAyE: kindly let me have the vision of Your hallowed feet, adorned with anklets whose glow makes even gold and gems look pale!

paruva malai nAttu maruvu kiLi Ottu pazhaiya kuRavAtti maNavALA: She was engaged in guarding the millet-field from the birds like parrot in the high mountain of VaLLimalai; (as in her previous birth She did penance, pining for You, as Sundaravalli) VaLLi, the damsel of the KuRavAs, had an old relationship with You, and You became Her Consort!

pakainjar padai veettil muthiya kanal Uttu pakarum nuthal nAtta kumarEsA: In the army barracks of the enemies, You ignited blazing fire from Your fiery middle eye in the forehead*, Oh Lord KumarA!

aru maRaikaL kUtti urai sey thamizh pAttai adaivu adaivu kEtta murukOnE: The famous work (of Sangham age) in Tamil (ThirumurugAtRuppadai), which included rare quotations from the scriptures, was listened to by You in its entirety, Oh MurugA!

alai kadalil eetta avuNar thamai Otti amarar siRai meetta perumALE.: The demons who thronged in multitude in the wavy seas were driven away by You, and the celestials were freed from the prison, Oh Great One!


* As Murugan is none other than Lord SivA, He too has a middle fiery eye in the forehead.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1089 iruvinaigaL eettum - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]