திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1084 கருதியே மெத்த (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1084 karudhiyEmeththa (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனா தத்த தனதனா தத்த தனதனா தத்த ...... தனதான ......... பாடல் ......... கருதியே மெத்த விடமெலாம் வைத்த கலகவா ளொத்த ...... விழிமானார் கடினபோ கத்த புளகவா ருற்ற களபமார் செப்பு ...... முலைமீதே உருகியான் மெத்த அவசமே வுற்ற வுரைகளே செப்பி ...... யழியாதுன் உபயபா தத்தி னருளையே செப்பு முதயஞா னத்தை ...... அருள்வாயே பருவரா லுற்று மடுவின்மீ துற்ற பகடுவாய் விட்ட ...... மொழியாலே பரிவினோ டுற்ற திகிரியே விட்ட பழயமா யற்கு ...... மருகோனே முருகுலா வுற்ற குழலிவே டிச்சி முலையின்மே வுற்ற ...... க்ருபைவேளே முருகனே பத்த ரருகனே வெற்பு முரியவேல் தொட்ட ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கருதியே மெத்த விடம் எ(ல்)லாம் வைத்த கலக வாள் ஒத்த விழி மானார் ... மிகுந்த முன்யோசனையுடன் எல்லா விஷத்தையும் தன்னிடத்தே கொண்டுள்ளதும், கலகத்தை விளைவிக்கத் தக்க வாள் போன்றதுமான கண்களை உடைய விலைமாதர்களின் கடின போகத்த புளக வார் உற்ற களபம் ஆர் செப்பு முலை மீதே ... வன்மை கொண்டதும், போக இன்பம் தருவதும், புளகாங்கிதம் கொண்டதும், கச்சு அணிந்ததும், கலவைச் சாந்து நிறைந்ததும், குடம் போன்றதுமான மார்பகத்தின் மீது உருகி யான் மெத்த அவசமே உற்ற உரைகளே செப்பி அழியாது ... மனம் உருகி நான் மிகவும் வசம் இழந்த நிலையில் இருந்த பேச்சுக்களையே பேசி அழிந்து போகாமல், உன் உபய பாதத்தின் அருளையே செப்பும் உதய ஞானத்தை அருள்வாயே ... உனது இரண்டு திருவடிகளின் கிருபா கடாட்சத்தின் பெருமையைப் பற்றியே பேசும்படி உதிக்கின்ற ஞானத்தை எனக்கு அருள் புரிவாயாக. பருவர(ரா)ல் உற்று மடுவின் மீது உற்ற பகடு வாய் விட்ட மொழியாலே ... மிக்க துன்பத்தை அடைந்து, மடுவில் இருந்த (கஜேந்திரனாகிய) யானை (ஆதி மூலமே என) ஓலமிட்டு அழைத்த மொழியைக் கேட்டு, பரிவினோடு உற்று அ(த்)திகிரி ஏவிட்ட ப(ழை)ழய மாயற்கு மருகோனே ... அன்போடு வந்து அந்தச் சக்கரத்தை ஏவிய பழைய திருமாலுக்கு மருகனே, முருகு உலாவுற்ற குழலி வேடிச்சி முலையின் மேவு உற்ற க்ருபைவேளே ... இயற்கை மணம் வீசும் கூந்தலை உடைய வேடப் பெண்ணாகிய வள்ளியின் மார்பை விரும்பி அணைந்த கருணை வேளே, முருகனே பத்தர் அருகனே வெற்பு முரிய வேல் தொட்ட பெருமாளே. ... முருகனே, பக்தர்களுக்கு அருகே நின்று உதவுபவனே, கிரவுஞ்ச மலை ஒடிந்து அழிய வேலைச் செலுத்திய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.200 pg 3.201 WIKI_urai Song number: 1087 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1084 - karudhiyE meththa (common) karuthiyE meththa vidamelAm vaiththa kalakavA Loththa ...... vizhimAnAr kadinapO kaththa puLakavA rutRa kaLapamAr seppu ...... mulaimeethE urukiyAn meththa avasamE vutRa vuraikaLE seppi ...... yazhiyAthun upayapA thaththi naruLaiyE seppu muthayanjA naththai ...... aruLvAyE paruvarA lutRu maduvinmee thutRa pakaduvAy vitta ...... mozhiyAlE parivinO dutRa thikiriyE vitta pazhayamA yaRku ...... marukOnE murukulA vutRa kuzhalivE dicchi mulaiyinmE vutRa ...... krupaivELE murukanE paththa rarukanE veRpu muriyavEl thotta ...... perumALE. ......... Meaning ......... karuthiyE meththa vidam e(l)lAm vaiththa kalaka vAL oththa vizhi mAnAr: Having stored premeditatedly all the poison in their eyes which look like the trouble-causing sword, these whores have kadina pOkaththa puLaka vAr utRa kaLapam Ar seppu mulai meethE: robust, erotic, scintillating and pot-like bosom wearing a blouse and smeared with sandalwood paste; uruki yAn meththa avasamE utRa uraikaLE seppi azhiyAthu: letting my mind melt for them, I have lost my mental balance; I do not want to degenerate by uttering words resulting from that state of delusion; un upaya pAthaththin aruLaiyE seppum uthaya njAnaththai aruLvAyE: instead, kindly grant me the dawning wisdom that makes me speak only about the grace and the greatness of Your hallowed feet! paruvara(a)l utRu maduvin meethu utRa pakadu vAy vitta mozhiyAlE: When the elephant (GajEndran), caught in the pond, screamed His name ("Oh, Primordial One!") in extreme anguish, parivinOdu utRu a(th)thikiri Evitta pa(A)zhaya mAyaRku marukOnE: He came down graciously and wielded that disc; You are the nephew of that old Lord VishNu! muruku ulAvutRa kuzhali vEdicchi mulaiyin mEvu utRa krupaivELE: You are the gracious Lord who hugged the bosom of VaLLi, the hunter-girl, who is endowed with a natural aroma in her hair! murukanE paththar arukanE veRpu muriya vEl thotta perumALE.: Oh MurugA! You come to the aid of Your devotees by remaining by their side! You wielded the spear to break the mount Krouncha and shatter it to pieces, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |