திருப்புகழ் 1083 குடல் இடை தீது  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1083 kudalidaitheedhu  (common)
Thiruppugazh - 1083 kudalidaitheedhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தானத் தனதன தானத்
     தனதன தானத் ...... தனதான

......... பாடல் .........

குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
     குலவிய தோலத் ...... தியினூடே

குருதியி லேசுக் கிலமது கூடிக்
     குவலயம் வானப் ...... பொருகாலாய்

உடலெழு மாயப் பிறவியி லாவித்
     துறுபிணி நோயுற் ...... றுழலாதே

உரையடி யேனுக் கொளிமிகு நீபத்
     துனதிரு தாளைத் ...... தரவேணும்

கடலிடை சூரப் படைபொடி யாகக்
     கருதல ரோடப் ...... பொரும்வேலா

கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
     கலைபல தேர்முத் ...... தமிழ்நாடா

சடையினர் நாடப் படர்மலை யோடித்
     தனிவிளை யாடித் ...... திரிவோனே

தனிமட மானைப் பரிவுட னாரத்
     தழுவும்வி நோதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குடல் இடை தீது உற்று இடை இடை பீறிக் குலவிய தோல்
அத்தியின் ஊடே
... குடலினிடத்தே கெடுதல் அடைந்து, ஊடே ஊடே
கிழிபட்டு இத்தகைய கோலத்துடன் விளக்கம் தரும் தோலும், எலும்பும்
கூடிய இவ்வுடலினூடே,

குருதியிலே சுக்கிலம் அது கூடி ... (மகளிர்) ரத்தத்துடன் விந்துவும்
சேர்ந்து,

குவலயம் வான் அப்பு ஒரு காலாய் உடல் எழும் மாயப்
பிறவியில் ஆவித்து
... மண், வான், நீர், ஒப்பற்ற காற்று
(இவைகளுடன் தீ) ஆகிய பஞ்ச பூதச் சேர்க்கையாய் இன்னொரு உடல்
தோன்றுகின்ற மாயப் பிறப்பில் வெளிவந்து பிறந்து,

உறு பிணி நோய் உற்று உழலாதே ... சேர்ந்து பிணித்தலைச்
செய்யும் உடல் நோய், மன நோய்களை அடைந்து வீணாக அலைச்சல்
உறாமல்,

உரை அடியேனுக்கு ஒளி மிகு நீபத்து உனது இரு தாளைத்
தர வேணும்
... உன்னைப் புகழ்ந்துரைக்கும் அடியவனாகிய எனக்கு,
ஒளி மிக்கனவும், கடப்ப மலர் சேர்ந்துள்ளனவுமான, இரண்டு
திருவடிகளைத் தந்து அருள வேண்டும்.

கடல் இடை சூரப் படை பொடியாகக் கருதலர் ஓடப் பொரும்
வேலா
... கடலின் இடையே சூரனுடைய படைகள் பொடிபட்டு
அழியவும், பகைவர்கள் ஓட்டம் பிடிக்கவும் சண்டை செய்யும் வேலனே,

கதிர் விடு வேலைக் கதிரினில் மேவி கலை பல தேர்
முத்தமிழ் நாடா
... கடலினிடத்துக் கிரணங்களை வீசும் இளஞ்
சூரியனைப் போன்ற திருஞான சம்பந்தராய்த் தோன்றி பல கலை
ஞானங்களையும் வேதங்களையும் உணர்ந்தவனாக முத்தமிழ் நாட்டில்
விளங்கியவனே,

சடையினர் நாடப் படர் மலை ஓடித் தனி விளையாடித்
திரிவோனே
... சடையை உடைய சிவபெருமான் விரும்ப, பரந்துள்ள
கயிலை மலையில் ஓடி, தனியாக விளையாடித் திரிந்தவனே,

தனி மட மானைப் பரிவுடன் ஆரத் தழுவும் விநோதப்
பெருமாளே.
... ஒப்பற்ற மடந்தையாகிய மான் போன்ற வள்ளியை
அன்புடன் நன்றாக (மனம் குளிரத்) தழுவிய அழகு வாய்ந்த பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.196  pg 3.197  pg 3.198  pg 3.199 
 WIKI_urai Song number: 1086 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1083 - kudal idai theedhu (common)

kudalidai theethut Ridaiyidai peeRik kulaviya thOlath ...... thiyinUdE

kuruthiyi lEsuk kilamathu kUdik kuvalayam vAnap ...... porukAlAy

udalezhu mAyap piRaviyi lAvith thuRupiNi nOyut ...... RuzhalAthE

uraiyadi yEnuk koLimiku neepath thunathiru thALaith ...... tharavENum

kadalidai cUrap padaipodi yAkak karuthala rOdap ...... porumvElA

kathirvidu vElaik kathirinil mEvik kalaipala thErmuth ...... thamizhnAdA

sadaiyinar nAdap padarmalai yOdith thaniviLai yAdith ...... thirivOnE

thanimada mAnaip parivuda nArath thazhuvumvi nOthap ...... perumALE.

......... Meaning .........

kudal idai theethu utRu idai idai peeRik kulaviya thOl aththiyin UdE: In this body, consisting of skin and bones, which skin displays cracks here and there due to intestinal disorder,

kuruthiyilE sukkilam athu kUdi: there is union between (the woman's) blood and sperm;

kuvalayam vAn appu oru kAlAy udal ezhum mAyap piRaviyil Aviththu: a wonderful amalgam of the five elements, namely, earth, cosmos, water, matchless air (and fire), gives rise to the birth of another body; born like this,

uRu piNi nOy utRu uzhalAthE: I do not wish to be afflicted by the simultaneous attack of bodily diseases and mental illness and roam about indefinitely;

urai adiyEnukku oLi miku neepaththu unathu iru thALaith thara vENum: for that, kindly grant me, in consideration of my praising Your glory, Your two dazzling and hallowed feet, adorned with kadappa flowers!

kadal idai cUrap padai podiyAkak karuthalar Odap porum vElA: In the midst of the seas, You fought a war in which the demon SUran was smashed to pieces and all enemies fled!

kathir vidu vElaik kathirinil mEvi kalai pala thEr muththamizh nAdA: You came to this world as ThirugnAna Sambandhar, like the rising sun emerging from the sea spreading its rays of radiance, learnt many artistic texts and scriptures and reigned in TamilnAdu, the land of the three branches of Tamil!

sadaiyinar nAdap padar malai Odith thani viLaiyAdith thirivOnE: To the immense happiness of SivA, the Lord with the matted hair, You ran around all over the vast mountain of KailAsh and played alone, Oh Lord!

thani mada mAnaip parivudan Arath thazhuvum vinOthap perumALE.: She is matchless; she is the deer-like damsel, VaLLi; with abundant love, You hugged her tightly, Oh Handsome and Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1083 kudal idai theedhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]